இந்த பாத்திரத்தை உண்டியலாக பயன்படுத்துங்கள் !! தீராத கடன் தொல்லையும் பணகஷ்டத்தை தீர்க்க வேண்டுமா இதுதான் முறை !!

ஆன்மீகம்

பணகஷ்டத்தை தீர்க்க வேண்டுமா இந்த பாத்திரத்தை உண்டியலாக பயன்படுத்துங்கள் தற்போது மக்களிடையே கடவுள் பக்தியும், ஜோதிட நம்பிக்கையும் சற்று அதிகரித்துள்ளது. இதனால் தான் தற்போது பலர் எந்த ஒரு செயலை செய்வதற்கு முன்பும் ஜோதிடர்களை சந்தித்து, தங்களது ஜாதகங்களைக் கொடுத்து நல்ல காலமா என்பதைப் பார்க்கிறார்கள். மேலும், ஜோதிடர்கள் தங்களுக்கு சாதகமாக என்ன கூறினாலும் அதை செய்யவும் தயாராக உள்ளனர். இது சிலருக்கு பொருந்தும், சிலருக்கு பொருந்தாமலும் இருக்கும். எந்த விடயங்களையும் முழு நம்பிக்கையுடன் செய்தால் வெற்றி நிச்சயம் ஒவ்வொரு நாளும் கிரகங்களின் நிலை மாறும். இப்படி தினமும் மாறும் கிரகங்களின் சஞ்சாரங்களால் ஒவ்வொரு ராசிக்காரரின் பலனும் அன்றாடம் மாறுபடும். தினசரி ராசிப்பலன்கள் மூலம் நீங்கள் எந்த மாதிரியான சவால்களை எதிர்கொள்வீர்கள் என்பதை தெரிந்துகொள்ள முடியும். தீராத கடன் தொல்லையும் பணகஷ்டத்தை தீர்க்க வேண்டுமா இதுதான் முறை

பொதுவாக அனைவரும் கஷ்ட சூழ்நிலைகளில் கடன் வாங்குவது வழக்கம், ஆனால் அந்த கடனை திருப்பி தர ரொம்பவே கஷ்டப்படுவோம் காரணம் சேமிப்பு என்பது ஒன்று நம்மிடம் இல்லாமல் போவது தான். அதற்கு குறிப்பாக எந்த உண்டியலில் நாம் பணத்தை சேர்த்து வைக்கலாம்? எந்த முறையில் பணத்தை கடன்காரர்களுக்கு திருப்பிக் கொடுப்பது, என்பதை பற்றிய தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

இந்த பரிகாரத்தை செய்யும் போது உங்களுடைய வீடும், நீங்களும் சுத்தமாக இருக்க வேண்டும். இதற்கு செம்பு சொம்பு அல்லது செம்பினால் செய்யப்பட்ட பாத்திரம்தான் தேவை. இதற்கு பெயர் செம்பு உண்டியல் என்று கூட வைத்துக் கொள்ளலாம். செம்பு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதை சுத்தமாக கோமியத்தை விட்டு ஒரு முறை கழுவ வேண்டும். அதன் பின்பு மஞ்சள் கலந்த நீரில் கழுவி விட்டு, சுத்தமான நீரில் கழுவி விட்டு அதன் பின்பு பரிகாரத்திற்கு பயன்படுத்த வேண்டும்.

இந்த உண்டியலில் உள் பக்கத்தில் ஒரு சிட்டிகை மஞ்சள், ஒரு சிட்டிகை குங்குமத்தை முதலில் போ ட் டு விட வேண்டும். அதன் பின்பு உங்கள் வீட்டு சமையலறையில் இருக்கும் உப்பு ஜாடியில் இருந்து, ஒரே ஒரு கல் உப்பை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். பின்பு, பெரிய கல் உப்பு ஒன்றை எடுத்து உங்களது வலது கையில் வைத்து, நீங்கள் யாருக்கு கடனை கொடுக்க வேண்டுமோ அவருடைய பெயரை அந்த கல் உப்பிடம் சொல்ல வேண்டும்.

மேலும், கையில் இருக்கும் கல் உப்பை முகத்தின் அருகில் எடுத்துச் சென்று, அதன் காதில் சொல்லுவது போல பாவனை செய்து கொண்டு மூன்று முறை அந்தப் பெயரை கல் உப்பிடம் சொல்லிவிடுங்கள். அதன்பின்பு, அந்த கல் உப்பையும் செப்புப் பாத்திரத்தில் உள்ளேயே போ ட் டு விடுங்கள். முடிந்தால் ஒரு மஞ்சள் நிற துணியை கொண்டு செப்பு பாத்திரத்தின் வாயை மூடி, அந்தத் துணியில் சிறிய ஓட்டையை போ ட் டு , உண்டியலாக தயார் செய்து வைத்துக் கொள்ளலாம்.

இல்லை என்றால் அப்படியே அந்த உண்டியலில் பணத்தை போ ட் டு வாருங்கள். நீங்கள் யாருக்கு பணத்தை கொடுக்க வேண்டுமோ அவர்களுடைய கடனை சீக்கிரமாக கொடுப்பதற்கு, பணம் உங்கள் கைக்கு வந்து கொண்டே இருக்கும். குறிப்பாக, அந்த உண்டியலில் செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை பணத்தை போ டு ம் பழக்கத்தை கொண்டு வாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *