வீட்டில் அதிஷ்டம் நிலைத்து நிற்க வேண்டுமா? உங்கள் வீடுகளில் வலம்புரி சங்கினை வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா !!

ஆன்மீகம்

இன்பம் துன்பம் இன்பம் துன்பம் இரண்டும் இணைந்தது தான் வாழ்க்கை. இரண்டுக்கும் இடையில் நடக்கும் போ ரா ட் டம் தான் மனிதனை இந்த உலகில் வாழ வைக்கிறது. வெறுமனே சந்தோசம் மட்டும் இருக்குமானால் வாழ்க்கை ரெம்ப அலுத்து விடும், அதுவே துன்பம் மட்டும் இருக்குமானால் வாழ்க்கையே அநேகருக்கு வெறுத்துவிடும். இரண்டுமே அளவாக இருக்கிற போது வாழ்க்கை சிறப்பாக அமைந்துவிடும். அதே நேரத்தில் வாழ்க்கையை எப்பொழுதுமே ரசித்து வாழ வேண்டும். இன்றைய சமூகத்தில் இந்த நிலைப்பாடு குறைந்து செல்கிறது, சிறப்பான வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் ஆரோக்கியத்திற்கும் எப்பொழுதுமே வயது ஒரு தடை இல்லை. எந்த வயதிலும் ஆரோக்கியமாக இருப்பதற்கு ஒவ்வொருவருடைய மனநிலை தான் காரணம்,

எண்ணமும் சிந்தனையும் சீர்பொருந்தி விட்டால் வாழ்க்கை மேன்மை அடைந்து விடும். மகிழ்ச்சியான எந்த குறையும் இல்லாத வாழ்க்கையை வாழ வேண்டும் என்று ஆசை படுபவர்களுக்கு செல்வங்களை அள்ளி தரும் ஒரு பொருள் தான் சங்கு.வலம்புரி சங்கினை வீட்டில் வைத்தால் யார் யாருக்கெல்லாம் பே ர தி ர் ஷ் டம் மற்றும் என்ன நடக்கும் தெரியுமா ஒருவர் இழந்த மகிழ்ச்சி மற்றும் செல்வத்தை திரும்ப பெற வலம்புரி சங்கினை வீட்டில் வைக்கவேண்டுமென சாஸ்திரங்கள் கூறுகின்றன.

சங்கின் வாய்ப்பகுதியில் ஆரம்பித்து சங்கின் சுருள் அமைப்பு, வலப்புறமாக சுற்றி, சங்கின் அடிப்பகுதியில் முடியும் வகையிலான சங்கே, வலம்புரி சங்கு எனப்படுகிறது. வலம்புரி சங்கினை வீட்டில் அல்லது தொழில் செய்யும் இடங்களில் வைத்துக் கொள்ளலாம். ஆனால் வலம்புரி சங்கை சுத்தமாகவும், தினமும் பூஜை செய்தும் வழிபட வேண்டியது என்பது அவசியமான ஒன்றாகும்.

சித்ரா பௌர்ணமி, ஆணி மாத வளர்பிறை அஷ்டமி, ஆடி மாத பூர நட்சத்திரம், புரட்டாசி மாத பௌர்ணமி போன்ற ஆன்மீக சிறப்பு நாட்களில் வலம்புரி சங்கில் பால் வைத்து மகாலட்சுமிக்கு பூஜை செய்து வந்தால், கணவன்- மனைவி நல்ல ஆயுளுடன் வாழ்வார்கள்.தினமும் வலம்புரி சங்கில் நீர் மற்றும் துளசி போட்டு அதனை தினமும் குடித்து வந்தால் ஆரோக்கியம் சிறப்பாகும்.

பஞ்சமி திதி நாளில் வலம்புரி சங்கில் தூய்மையான பசும்பால் ஊற்றி பூஜை செய்து வந்தால் குழந்தை இல்லாத கணவன்- மனைவிக்கு புத்திர பாக்கியம் கிட்டுமாம். சந்தான பாக்கியம் கிடைப்பது தாமதமாகும் காரணத்தால் மனம் கலங்கி நிற்கும் தம்பதிகளின் மனக்கவலை விலக அவர்கள் பஞ்சமி திதிகளில் காலையிலும், மாலையிலும் வலம்புரிச் சங்கில் சிறிது தேன் கலந்த பசும்பாலை வைத்து குருவின் ஸ்துதியை 48 முறை உச்சரித்து,

அந்தத் தேன் கலந்த பசும்பாலை கணவன், மனைவி இருவரும் பிரசாதமாக அருந்தி வந்தால் எண்ணிய எண்ணம் ஈடேறி ம ன க் கு றைகள் யாவுமே மா ய மா ய் மறைந்து விடும். தினமும் வலம்புரி சங்கினை பூஜித்து வந்தால் பி ர ம் ம ஹத் தி தோ ஷ ம் எனப்படும் க டு மை யா ன தோ ஷ ம் நீ ங் கி விடும் என்று புராணங்கள் கூறுகின்றன. ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் அமையப் பெற்றவர்கள் அந்த தோ ஷ த் தின் வலிமை நிலைகளுக்கேற்றவாறு வலம்புரிச் சங்கு பூஜையைக் குறிப்பிட்ட காலத்திற்குச் செய்து வந்தால் தோஷ நிவர்த்தி அடையும்.

சங்கால் அபிஷேகம் செய்வதால் 10 மடங்கு அபிஷேகம் செய்த பலனைப் பெறலாம் என்பது ஐதீகம். வளர்பிறை நாளில் வாங்கி வந்த வலம்புரிச் சங்கை, புனித நதி நீர் இருந்தால், அதில் நீராட்டி சுத்தம் செய்யவேண்டும். இல்லாவிட்டால், மஞ்சள் கலந்த தூய நீரில் கழுவலாம். பின்னர் மஞ்சள், சந்தனம், குங்குமம், புஷ்பங்கள் கொண்டு அலங்கரித்து ஒரு பீடத்தின் மீது வைக்க வேண்டும்.

சங்கிற்கான மந்திரம்
ஓம் பாஞ்சஜன்யாய வித்மஹே
பவமானாய தீமஹி
தன்னஸ் சங்க ப்ரஜோதயாத்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *