குருவின் பார்வை உங்கள் மீதுபட்டு.. கோடி நன்மைகளை அடைய வேண்டுமா? எளிய பரிகாரம் எப்படி செய்யவேண்டும் தெரியுமா !!

ஆன்மீகம்

பொதுவாக நம்முடைய ஜாதகத்தில் குரு இருந்தால், நம்முடைய வாழ்க்கை சந்தோஷமாகத்தான் இருக்கும். மேலும், வீட்டில் கஷ்டங்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். கஷ்டங்களுக்கு தீர்வு கிடைக்க குரு பகவானுக்கு தொடர்ந்து 21 நாட்கள், இந்த பரிகாரத்தை செய்து வந்தால் போதும் குருவின் அனுக்கிரகம் கிடைத்து, வீட்டில் தடைபட்ட சுபகாரியங்கள் அனைத்தும் நடக்கும். கொண்டைக்கடலை குரு பகவானுக்கு உரிய தானியம் அதையும், மஞ்சள் நிறம் குருபகவானுக்கு உகந்த நிறத்தையும் வைத்து தான் வழிபாடு செய்யப்போகிறோம். எதாவது ஒரு கொண்டை கடலை வாங்கி கொளளுங்கள். வியாழக்கிழமை அன்று ஒரு கைப்பிடி அளவு, கொண்டைக்கடலையை கோவிலுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

குரு பகவானுக்கு உகந்தவை || guru bhagavan

அந்தக் கொண்டைக் கடலைகளை தட்சிணாமூர்த்தியின் பாதங்களில் வைத்து உங்கள் பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்து வாருங்கள். இல்லை என்றால் நவகிரகங்களில் இருக்கும் குரு பகவானின் பாதங்களில் வைத்து உங்களது பெயரை சொல்லி அர்ச்சனை செய்து கொளளுங்கள்.

அடுத்த நாள் வெள்ளிக்கிழமையில், வீட்டில் செம்பு அல்லது பித்தளை சொம்பு இருந்தால் அதில் நிறைய, சுத்தமான தண்ணீரை ஊற்றி, குரு பகவானின் பாதங்களில் இருந்து எடுத்து வந்த கொண்டைக்கடலையை அந்த தண்ணீரில் இட்டு, ஒரு ஸ்பூன் அளவு மஞ்சள் தூளையும் அந்த தண்ணீரில் இட்டு, உங்களது கைகளை சொம்பின் மேல் வைத்து, ‘ஓம் குருவே நமஹ’ என்ற மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும்.

 

Maalaimalar News: Guru Bhagavan

அதன்பின்னர், மனதார குரு பகவானை நினைத்து, உங்களுடைய வீட்டில் திருமண தடை இருந்தாலும், நல்ல வேலை கிடைக்கவில்லை என்றாலும், குழந்தை பாக்கியம் வேண்டுமென்றாலும், நோய் நொடியற்ற வாழ்க்கை தேவை என்றாலும் இப்படியாக எந்த பிரார்த்தனை இருந்தாலும் அதை சொல்லி, அதற்கான நிவர்த்தி கிடைக்க வேண்டும் என்று முழுமனதோடு வேண்டிகொள்ளுங்கள்.

 

குரு பெயர்ச்சி பலன்கள் - Kungumam Tamil Weekly Magazine

இதையடுத்து, அந்த தண்ணீரை உங்களது கைகளாளேயோ அல்லது மா இலைகளாலோ உங்கள் வீடு முழுவதும் தெளித்து விட வேண்டும். உங்களது தலையிலும் தெளித்துக் கொலாம். உங்களது குடும்ப உறுப்பினர்களின் தலையிலும் தெளித்து விடலாம். மீதம் இருக்கும் தண்ணீரை செடிகளுக்கு அல்லது கால் படாத இடத்தில் ஊற்றி விடுங்கள்.

 

குரு பகவானுக்கு 16 வியாழக்கிழமை விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்கள் || guru  bhagavan Viratham

இதன் மூலம் உங்கள் வீட்டில் இருக்கக் கூடிய தோஷங்கள் அனைத்தும் விலகி, வீட்டில் சுபகாரியங்கள் கட்டாயம் நடைபெறும்.

21 நாட்கள் இந்த பரிகாரத்தை முடித்துவிட்டு, குரு பகவானுக்கு ஒரு வியாழக்கிழமை அன்று மஞ்சள் நிற பிரசாதம், எலுமிச்சை பழ சாதம் ஆக இருந்தாலும் பரவாயில்லை, நெய்வேத்தியம் செய்து, மஞ்சள் நிற வஸ்திரத்தை தானமாக கொடுத்து உங்களது பரிகாரத்தை நிறைவு செய்துகொள்ள வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *