டான்சில் யாருக்கெல்லாம் வரலாம்? எப்படி அதை தடுப்பது தெரியுமா

மருத்துவம்

தொண்டையில் உண்டாகும் பிரச்னையில் டான்சில் என்பதும் ஒன்று. குழந்தைகள், பெரியவர்கள் என யாருக்கு வேண்டுமானாலும் இப்பிரச்சனை வரக்கூடும். முதலில் டான்சில் என்றால் என்ன என்பது குறித்து தெரிந்துகொள்வோம். டான்சில் என்பது நோய் அல்ல. அது நம் உடலில் இருக்கும் ஒரு உறுப்பு. நாம் சாப்பிடும் போது தொண்டையில் ஏதேனும் சிக்கி கொண்டால் அது உள்ளுக்கு போகும் போது அது குறித்த தகவலை மூளைக்கு அனுப்பும் சமிக்ஞையை தொண்டையில் இருக்கும் டான்சில் செய்து கொண்டிருக்கிறது. டான்சில் என்றால் என்ன?
டான்சில் என்பது நிணநீர் சுரப்பி. இது வாயில் மூன்று இடங்களில் உள்ளது. தொண்டையில் உள்நாக்குக்கு இருபுறமும் இருக்கும் டான்சில்,நாக்கின் அடியில் டான்சில் மூக்குக்கு பின்னால் ஒன்று என மொத்தம் மூன்று வகையான டான்சில்கள் உள்ளது.

what is tonsillitis: டான்சில் என்னும் உள்நாக்கு அழற்சி யாருக்கெல்லாம்  வரலாம், எப்படி தடுப்பது? - tonsillitis causes symptoms treatment and  prevention | Samayam Tamil

தொண்டையில் சதை வீங்கினாலே அது டான்சில் என்று பலரும் நினைத்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் டான்சில் என்பது தொண்டையில் சதை வளர்ச்சி ஏற்படுவது. . டான்சில் பிரச்சனை இரண்டு வகைப்படும். ஒன்று திடீரென்று புண்ணை உண்டாக்கும். மற்றொன்று திரும்ப திரும்ப புண்ணாகும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பாதிப்பில் வேறுபாடு இருக்கும்.

டான்சில் எனப்படும் அடிநா சதை என்ற பாதிப்புக்குரிய சிகிச்சை | Virakesari.lk

​டான்சில்ஸ் பிரச்சனைக்கான அறிகுறிகள்
திடீர் டான்சில்ஸ் பிரச்சனை என்பது தொண்டை வலி ஏற்பட்டு நாக்கின் அடியில் இருபுறமும் சிவப்பாக வீக்கத்துடன் இருக்கும். நாக்கின் மேல் மஞ்சள் நிறத்தில் இருக்கும். தொண்டை வலியோடு காய்ச்சலும் இருக்கும். சிலருக்கு தொண்டையில் எரிச்சல் அதிகமாக இருக்கும்.

Swallowing Difficulties | Nutrisens

சாப்பிடும் போது உணவை விழுங்குவதில் சிரமம் உண்டாகும். சுவாசிக்கு போது சுவாசத்தில் கெட்ட வாடை உண்டாகும்.தொண்டைசதையில் வீக்கம் போன்று இருக்கும். இது சதை வளர்ச்சியின் அறிகுறிதான். சிலருக்கு கழுத்துவலியும் இருக்கும். இரண்டாவது வகையான டான்சில் என்பது செப்டிக் டான்சில் என்று சொல்லப்படுகிறது. இதில் அறிகுறி பெரிதாக இருக்காது.

டான்சில் பிரச்னையை தவிர்ப்பது எப்படி?! | How to avoid the problem of tonsil  ?! - Dinakaran

தொண்டையில் கழலை இருந்துகொண்டே இருக்கும். வலி இல்லாமல் தொண்டையை சுற்றியுள்ள பகுதிகள் சிவப்பாக இருக்கும். இது டான்சில் புண்ணால் இருக்கும்.

டான்சில் காரணம்
டான்சில் உணவு வடிகட்டி என்று சொல்லலாம். தேவையற்ற மாசு, இன்ஃபெக்‌ஷன் போன்றவை படிந்து விடும்.
இது வெளியேறாமல் தொண்டையில் படிந்திருக்கும் போது அவை புண் ஏற்பட்டு உபாதை அளிக்கிறது. பெரும்பாலும் இவை தானாகவே சரிசெய்யகூடியது.
ஆனால் இவை தீவிரமாகும் போது கிருமித்தொற்று உண்டாகி உபாதை அதிகமாகும்.

டான்சிலை அடியோடு விரட்டும் அற்புத சூப்... செய்வது எப்படி? | How to Get Rid  of Tonsillitis - Tamil BoldSky


மாசுபடிந்த நீரை குடிப்பது, எண்ணெயில் பொரித்த உணவுகள் அதிகம் எடுத்துகொள்வது. போன்றவை டான்சில் பிரச்சனை உண்டாக்க காரணமாகிறது.
உளநாக்கு அழற்சி என்பது சளியை தொடர்ந்து உண்டாக்கும் வைரஸ் மற்றும் பாக்டீரியல் தொற்று நேரும் போதும் உண்டாகும்.
ஏனெனில் பீட்டாஹீமோலைட்டிக் , ஸ்ட்ரெப்டோஒகாகஸ் என்னும் பாக்டீரியா மற்றும் ஃப்ளூ வைரஸ் டிப்தீரியா போன்ற கிருமிகள் முதலில் தாக்குவது டான்சிலைத்தான்.

உள்நாக்கு அழற்சி (டான்சில் அழற்சி): அறிகுறிகள், காரணங்கள், சிகிச்சை,  மருந்து, தடுப்பு, கண்டுபிடித்தல் - Tonsillitis in Tamil

அதனால் சளி அறிகுறி தீவிரமாக இருக்கும் போது தொண்டையில் வீக்கம். வலி என நாளடைவில் உள்நாக்கு அழற்சிக்கான நோய் அறிகுறியாக மாறுகிறது. ஊட்டச்சத்து குறைவாக இருப்பவர்களுக்கும் டான்சில்ஸ் பிரச்சனை வர வாய்ப்புண்டு.
​சிகிச்சை என்ன
முதல்வகையான டான்சில் உண்டாகும் போது நோய் எதிர்ப்பு மருந்துகள், வைட்டமின் சி என தொடர்ந்து சிகிச்சைஎடுத்துகொள்வதன் மூலம் அதை குணப்படுத்திவிடமுடியும்.

K.Karthik Raja's - KKR Whatsapp Collections : இருமல் தொண்டை கரகரப்பு சளி  டான்சில் நீங்கNo.1 Tamil Blog in the world|Tamil News Paper|k.karthik  raja|Whatsapp News|Breaking News Headlines|Latest Tamil News,India News ...

எனினும் இது முழுமையாக குணமாகாது. இந்த பாதிப்பு இருப்பவர்கள் அடிக்கடி இந்த பிரச்சனையை சந்திக்க நேரிடும். இரண்டாவது வகையான செப்டிக் டான்சில் தீவிரமாகும் போது அதற்கு அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வாக இருக்கும். இந்த புண் தீவிரமாகி அதன் மேல் சீழ் பிடிக்கும். இவை மற்ற உறூப்புகளை பாதிக்கும் வரை சென்றால் மருத்துவர் அறுவை சிகிச்சைக்கும் பரிந்துரை செய்யலாம். குழந்தைகளுக்கு டான்சில் பிரச்சனை ஏற்பட்டாலும் இயன்றளவு அவை தானாகவே சரியாகிவிடக்கூடும். மருத்துவரின் கவனிப்பும் சிகிச்சையும் பெருமளவு குணப்படுத்திவிடும்.

what is tonsillitis: டான்சில் என்னும் உள்நாக்கு அழற்சி யாருக்கெல்லாம்  வரலாம், எப்படி தடுப்பது? - tonsillitis causes symptoms treatment and  prevention | Samayam Tamil

டான்சிலுடன் சேர்ந்த அடினாய்டு சதை பாதிப்பு குழந்தைக்கு இருந்தால் குழந்தைகள் தூங்கும் போதுபடுத்தவுடன் மூச்சு விடுவதில் சிரமமடைந்துவிடுவார்கள். இவர்களுக்கு உமிழ்நீர் சுரப்பும் அதிகமாக இருக்கும். இந்த பிரச்சனை தீவிரமாக இருந்தால் இவர்களுக்கும் தேவையெனில் அறுவை சிகிச்சை செய்யப்படும். பெருமளவு குழந்தைகளுக்கு டான்சில் பிரச்சனை இருந்தாலும் அவர்கள் வளர வளர அவை குணமாக வாய்ப்புண்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *