எதிர்ப்பையும் சமாளிக்க கூடிய யோகமும் அதிர்ஷ்டமும் யாருக்கெல்லாம் தேடி வரும் !! ஆரோக்கியத்தில் சற்று அக்கறையாக இருக்க வேண்டிய ராசியினர் !!

ஆன்மீகம்

பிலவ ஆண்டு – ஆவணி 19 – சனிக்கிழமை (04.09.2021)நட்சத்திரம் : பூசம் 05:45 PM வரை பிறகு ஆயில்யம் திதி : 08:24 AM வரை துவாதசி பின்னர் திரயோதசி யோகம் : சித்த – ம ர ண யோகம் நல்லநேரம் : காலை 7.45 – 8.45 / 4.45 – 5.45 சனிக்கிழமை – சுப ஓரை விவரங்கள் (காலை 7 முதல் 7 1/2, 10 1/2 முதல் 12 வரை, பகல் 12 முதல் 1 வரை, 5 முதல் 6 வரை, இரவு 6 முதல் 7 1/2 வரை, 9முதல் 10 வரை) சுபகாரியங்கள் : ஆயுதம் பழக, யாத்திரை போக, வார்படஞ் செய்ய, சுபம் பேச சிறந்த நாள்ஒவ்வொரு நாளும் கிரகங்களின் நிலை மாறும். இப்படி தினமும் மாறும் கிரகங்களின் சஞ்சாரங்களால் ஒவ்வொரு ராசிக்காரரின் பலனும் அன்றாடம் மாறுபடும். தினசரி ராசிப்பலன்கள் மூலம் நீங்கள் எந்த மாதிரியான சவால்களை எதிர்கொள்வீர்கள் என்பதை தெரிந்துகொள்ள முடியும். அந்த வகையில், இன்று நீங்கள் சந்திக்கவிருக்கும் வாய்ப்புகள் மற்றும் சவால்கள் என்னவென்று உங்களுக்குத் தெரியாவிட்டால் உடனே ராசிப்பலனைப் பார்த்து அறிந்துகொள்ளுங்கள்.

மேஷ ராசி
வியாபாரத்தில் சக வியாபாரிகளால் அனுகூலம் உண்டாகும். விற்பனையும் அதிகரிக்கும். சகோதர வகையில் எதிர்பார்த்து இழுபறியாக இருந்த காரியம் அனுகூலமாக முடியும். சிலருக்கு வீண் செலவுகள் ஏற்படும். கணவன் – மனைவிக்கிடையே சிறுசிறு விவாதங்கள் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம். பிள்ளைகள் வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடனான மன வருத்தங்கள் நீங்கும். உறவினர்களிடம் பக்குவமாக நடந்துகொள்ளவும்.

ரிஷப ராசி
என்றாலும் வேலையாட்களுடன் ஒத்துழைப்பு பெரிய அளவு சிறப்பாக இருக்காது .வேலைக்கு செல்பவர்கள் மேலதிகாரிகளின் ஆதரவு சிறப்பாக இருக்கும் என்றாலும் சக ஊழியர்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது. வேலைப்பளு சற்று அதிகப்படியாக இருந்தாலும் அதற்கான ஆதாயமும் கண்டிப்பாக கிடைக்கும்.நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். பொறுமையுடன் செயல்படுவது நல்லது.பண வரவு தாராளமாக இருந்தாலும் தேவையற்ற அலைச்சல் ஏற்படும். உடன் இருப்பவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். குறிப்பாக கணவன்-மனைவி இடையே விட்டுக் கொடுத்து செல்வது மிகவும் நல்லது. தொழில் ரீதியாக பார்க்கும்போது ஒரு வளமான பலன் கிடைக்கும்.

மிதுன ராசி
முயற்சிகள் சாதகமான பலன்கள் கிடைக்கும் என்றாலும் தேவையில்லாத அலைச்சல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எளிதில் முடியக்கூடிய காரியங்கள் கூட சற்று தாமதமாகும். மற்றவர்களின் வேலையை கூட நீங்கள் செய்ய வேண்டிய நெருக்கடி நிலை ஏற்படலாம். தொழில் வியாபாரத்திலிருந்த தேக்கங்கள் விலகி லாபகரமான நாளாக இருக்கும்.வேலைக்கு செல்பவர்கள் சக நண்பர்களின் ஆதரவானது சிறப்பாக இருக்கும் என்பதால் எதையும் சிறப்பாக செய்து முடிக்க கூடிய ஆற்றல் உங்களுக்கு கிடைக்கும். ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துச் சொல்வதும் குறிப்பாக தூரப் பயணங்களை தள்ளி வைப்பது நல்லது.

கடக ராசி
வேலைக்கு செல்பவர்கள் சக நண்பர்களின் ஆதரவு மிகச்சிறப்பாக இருக்கும். அதனால் அது கடினமான வேலையை கூட எளிதாக செய்து முடிப்பீர்கள். பயணங்கள் மூலமாக ஒரு சாதகமான பலன்கள் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளில் தேவையற்ற இடையூறுகள் ஏற்படலாம். உடனிருப்பவர்களே உங்களின் அமைதியைக் குறைப்பார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். அம்பிகையை வழிபடுவது நலம் சேர்க்கும். எடுக்கும் முயற்சிகள் ஒரு வளமான பலன்களை அடையலாம். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற மிக சிறப்பான நாளாக இருக்கும். தொழில் ரீதியாக ஒரு வளமான பலன்களை அடைய கூடிய நாளாக இருக்கும். வெளியூர் மூலமாக கூட ஒரு நல்ல செய்தி கிடைக்க வாய்ப்புள்ளது.

சிம்ம ராசி
உங்களுக்கு தந்த மன சோர்வு அலைச்சல் தொந்தரவுகள் ஓரளவுக்கு குறையும். மானம் பலன்களை அடைவீர்கள். பணவரவுகள் சாதகமாக இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றக்கூடிய நல்ல நாள். தொழில் வியாபாரத்தில் பணவரவு சாதகமாக இருந்தாலும் வேலையாட்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது. எந்த செயலை செய்வதாக இருந்தாலும் கூட்டாளிகளை கலந்தாலோசித்துச் செய்வது நல்லது. வேலைக்கு செல்பவர்கள் பொதுவாக சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சாதகமாக இருக்கும். என்றாலும் அதிகாரிகளுடன் தேவையற்ற வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. குறிப்பாக பேச்சைக் குறைத்து செயலில் கவனமாக செயல்படுவது நல்லது.

கன்னி ராசி
வேலைக்கு செல்பவர்கள் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது அவசியம். முடிந்த வரை முன்கோபத்தைத் தவிர்த்து நிதானமாக செயல்படுவது நல்லது. நீங்கள் நினைத்ததெல்லாம் சிறப்பாக நிறைவேற கூடிய நாளாக இருக்கும். உடனிருப்பவர்கள் சிறுசிறு நிம்மதி குறைவு ஏற்பட வாய்ப்புள்ளது. இருப்பதை அனுபவிப்பதற்கு கூட முடியாமல் போகலாம். தொழில் வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு அவ்வளவு சிறப்பாக இருக்காது என்பதால் நீங்கள் எதிலும் முன்னின்று செயல்பட்டால் தான் இன்று சமாளிக்க முடியும்.

துலாம் ராசி
வியாபாரத்தில் பணியாளர்களிடம் அனுசரனையாக நடந்து கொள்வது நல்லது. இன்று சரபேஸ்வரரை வழிபட சங்கடங்கள் குறையும். தேவையான பணம் கிடைக்கும். இளைய சகோதரர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படும் நாள். உறவினர்களாலும் நண்பர்களாலும் அலைச்சலும் செலவுகளும் ஏற்படும். பிள்ளைகளின் பிடிவாதம் சற்று வருத்தம் தரும். வீண்செலவுகள் மனதை சஞ்சலப்படுத்தும். அவசியத் தேவை என்றாலும்கூட கடன் வாங்க வேண்டாம்.

விருச்சிக ராசி

லாபமும் அதிகரிக்கும். பணவரவுகள் தாராளமாக இருக்கும் உங்களுடைய அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும் என்று உள்ளது. உடன் இருப்பவர்களை சற்று அனுசரித்து சென்றால் வளமான பலன்களை அடையலாம். தொழில் வியாபாரத்தில் அனுகூலமான பலன்களைப் பெற்று கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றக்கூடிய நாளாக இருக்கும். அதிகப்படியான செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள். உங்கள் தேவையை அறிந்து தந்தை பண உதவி செய்வது மகிழ்ச்சி தரும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். சகோதரர்களால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். பிள்ளைகள் மூலம் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும்.

தனுசு ராசி
தொழில் வியாபாரத்தில் சற்று கவனமாக செயல்பட்டால் ஒரு வளமான பலனை அடையலாம். வேலையாட்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது.காரியங்கள் அனுகூலமாக முடியும். வேலைக்கு செல்பவர்கள் உங்களுடைய பணியை மட்டும் கண்ணும் கருத்துமாக செய்வது சிறப்பை தரும். சிலருக்கு தேவையற்ற அலைச்சலை தரக்கூடியதாக இருக்கும். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சுறுசுறுப்பாகச் செயல் படுவீர்கள்.உங்களுக்கு இருந்து வந்த இடையூறுகள் எல்லாம் விலகி ஒரு வளமான பலனை அடைவீர்கள். உடனிருப்பவர்களின் ஆதரவு மிகச்சிறப்பாக இருக்கும். எதிர்பாராத தன சேர்க்கை உங்களின் நெருக்கடிகளை நீக்கும்.

மகர ராசி
ஒரு சிலருக்கு தெய்வப்பணிகளில் பங்கேற்கும் வாய்ப்பு உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். புதிய முயற்சிகள் வெற்றி கரமாக நிறைவேறும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். உறவினர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். மகாவிஷ்ணு வழிபடுவது நலம் சேர்க்கும். முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. மனதில் தேவையற்ற குழப்பம் ஏற்பட்டு நீங்கும். உறவினர்கள் வகையில் தேவையற்ற பிரச்னை ஏற்படும் என்பதால் பொறுமை அவசியம்.

கும்ப ராசி
தன்னம்பிக்கையுடனும் தைரியத்துடனும் செயல்படுவீர்கள். தொடங்கும் காரியம் அனுகூலமாக முடியும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். உங்களுடைய முயற்சி களுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். செலவுகள் அதிகரித்தாலும் அதனால் மகிழ்ச்சியே உண்டாகும். சகோதரர்களுடன் இணக்கமாக நடந்துகொள்ளவும். எந்த எதிர்ப்பையும் சமாளிக்க கூடிய யோகமும் அதிர்ஷ்டமும் என்று உங்களுக்கு உண்டு. கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவீர்கள். நண்பர்கள் மூலமாக ஒரு வளமான பலனை அடைய கூடிய நாள். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான பலனை அடைய கூடிய நாள்.

மீனம் ராசி
பிள்ளைகள் பிடிவாதம் பிடிப்பார்கள். அனுசரித்துச் செல்வது நல்லது. சிலருக்கு, வேலை விஷயமாக பயணம் மேற்கொள்ள நேரிட்டால் தகுந்த பாது காப்பு நடவடிக்கைகள் அவசியம். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும். பணியாளர்களால் செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். சண்முகக் கடவுள் வழிபாடு நன்மைகளை அதிகரிக்கும்.காரியங்களில் அனுகூலம் உண்டாகும். ஆனால், குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகள் எதையும் இன்று எடுக்க வேண்டாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *