வாழைப்பழம் உட்கொள்வதால் , நமது உடலுக்கு ஆரோக்கியம் உண்டாகும் என்றே நாமத்தில் பல பேருக்கு தெரியும் ஆனால் அதனுள் அடங்கி உள்ள பலவிதமான நன்மைகளை பற்றி நமக்கு தேர்ந்திருக்க வாய்ப்பில்லை . உண்மையில் நாம் கூறப்போனால் வாழைப்பழத்தில் என்னில் அடங்காத பல நன்மைகள் அடங்கி உள்ளன அதனுள் அடங்கி உள்ள சத்துக்களைப் பற்றி கூறப்போனால் , நம்பமாட்டீர்கள். ஏனெனில் அந்த அளவில் அதில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, வைட்டமின் சி, மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்றவை அதிகம் அடங்கி உள்ளது அதனால் உடலில் காணப்படும் பல நோய்களை நீக்கி உடலை நல்ல ஆரோக்கியத்துடன் கட்டு கோப்பாக வைத்துகொள்ள முடியும்.
மேலே கொரிப்பிட்டுள்ள பல நன்மைகள் இருந்தாலும் ஒரு சில தீமைகளும் இருக்கதான் செய்கிறது வாழைப்பழத்தையும் , பாலையும் ஒன்றாகக் கலந்து சாப்பிடுவது வளர்ச்சிதை மாற்றத்தில் பாதிப்பை உண்டாக்கும் என புதிய ஆய்வுத் தகவல் கோருகின்றன . குறித்த அறிக்கையின் படி இவை இரண்டையும் சேர்த்து சாப்பிட்டால் ஜீரண பாதையின் செயல்பாட்டை குறைத்து விடுமாம்.
வாழைப்பழமும், பாலும் குளுர்ச்சியான உணவு. இவை இரண்டையும் ஒன்றாகக் சேர்க்கும்போது அவை ஜீரண செயல்பாட்டையே பிரச்சனைக்குள்ளக்கிறது முக்கியமாக சைனஸ் பிரச்னை, சுவாசப் பிரச்சினை உள்ளோருக்கு இந்த கலவை உணவை வழங்குவதை தவிர்த்துக்கொள்ளவும்.
அதேபோல் கர்ப்பிணிகளும் பாலும், வாழைப்பழத்தையும் ஜூஸாக அருந்தக் கூடாது. ஏனெினில் வாழைப்பழம், பால் இரண்டையும் சேர்த்து சாப்பிடும் போது தேவையற்ற நச்சு அமிலங்களை வெளியிடுகின்றன. இதனால் அது அலர்ஜியாக மாறி தொற்று, வயிற்றுக் கோளாறு, போன்றவை உண்டாகும். குறிப்பாக கர்ப்பிணிகள் இவ்வாறு உண்பதைத் நிறுத்திக்கொள்ள வேண்டும்மேலும் இந்த கலவையானது சளி, இருமல், வாந்தி, வயிற்றுப் போக்கு, அலர்ஜி போன்ற உபாதைகளையும் உண்டாக்கும். எனவே இவற்றை சேர்த்து உண்பதை தவிர்க்க வேண்டும்.
