ஆ ட் டி ப் படைக்க போகும் சுக்கிரனால் இன்று பே ராப த்துக்களை சந்திக்கப் போகும் ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா !!

ஆன்மீகம்

பிலவ ஆண்டு – ஆடி 30 – ஞாயிற்றுக்கிழமை (15.08.2021) நட்சத்திரம் : விசாகம் 04:26 AM வரை பிறகு அனுஷம் திதி : 09:51 AM வரை சப்தமி பின்னர் அஷ்டமி யோகம் : சித்த – மரண யோகம் நல்லநேரம் : காலை 6.15 – 7.15 / 3.15 – 4.15 ஞாயிற்றுக்கிழமை சுப ஓரை விவரங்கள் (காலை 7.30 முதல் 10.00 வரை, பகல் 2 முதல் 4.30 வரை, இரவு 9 முதல் 12 வரை) சுபகாரியங்கள் : மருந்து உண்ண, பேட்டி காண, யாத்திரை செய்ய சிறந்த நாள்.ஒவ்வொரு நாளும் கிரகங்களின் நிலை மாறும். இப்படி தினமும் மாறும் கிரகங்களின் சஞ்சாரங்களால் ஒவ்வொரு ராசிக்காரரின் பலனும் அன்றாடம் மாறுபடும். தினசரி ராசிப்பலன்கள் மூலம் நீங்கள் எந்த மாதிரியான சவால்களை எதிர்கொள்வீர்கள் என்பதை தெரிந்துகொள்ள முடியும். உங்கள் வாழ்க்கை ஏற்பட போகும் அனைத்து வகையான கேள்விகளுக்குமான விடை இங்கு கிடைக்கும்.

மேஷம்
அழகின் தெய்வமான சுக்கிரன், மேஷ ராசியின் 5 ஆவது வீட்டின் வழியே நகர்கிறது. இந்த வீடு சந்ததி, கல்வி மற்றும் அன்பைக் குறிக்கிறது. சிம்மத்திற்கு செல்லும் சுக்கிரனால், மேஷ ராசிக்காரர்களுக்கு பல சாதகமான முடிவுகளைத் தரப் போகிறது. உங்கள் காதலியுடனான பிணைப்பு அதிகரிக்கும். மறுபுறம் திருமணமானவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் இடையே மோ தல்கள் அதிகரிக்கக்கூடும். மேலும் உங்கள் வாழ்க்கைத் துணைக்கு பணியிடத்தில் உயர் பதவி கிடைக்கும். மாணவர்கள் விளையாட்டு மற்றும் சமூக ஊடகங்களில் அதிக கவனம் செலுத்துவதால், படிப்பில் கவனம் குறையும். குடும்ப வாழ்க்கை பற்றி பேசுகையில், வீட்டு உறுப்பினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். ஆரோக்கியம் வழக்கம் போல இருக்கும். இருப்பினும், வயிறு சம்பந்தமான பிரச்சனைகளைத் தவிர்க்க, நீங்கள் மிகவும் காரமான உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

ரிஷபம்
சிம்ம ராசிக்கு செல்லும் சுக்கிரன், ரிஷப ராசியில் நான்காவது வீட்டின் வழியே செல்கிறார். இந்த பெயர்ச்சியால், உங்களின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். வீடு வாங்க திட்டமிட்டிருந்தால் அல்லது உள் அலங்காரத்தை முடிக்க நினைத்திருந்தால், இந்த பெயச்சியால் அது நிறைவேறலாம். அதே சமயம் வாகனம் வாங்க திட்டமிட்டிருந்தாலும் வாங்க வாய்ப்புள்ளது. இருப்பினும், வரவு செலவு திட்டத்தின் படி செலவழியுங்கள். இல்லாவிட்டால், நீங்கள் நிதி பிரச்சனையை சந்திக்க நேரிடலாம். இந்த ராசிக்காரரைத் திருமணம் செய்தவர்களுக்கு, பணியிடத்தில் உயர் பதவி கிடைக்கும். இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் உங்கள் திறன்களின் மீது நம்பிக்கை வைத்திருக்க வேண்டும். இந்த ராசிக்காரர்களின் குடும்ப வாழ்க்கை சாதகமான முடிவுகளைக் குறிக்கிறது. இருப்பினும், உங்கள் தாயாரின் ஆரோக்கியம் குறித்து கவலைப்படலாம். அவருடன் நேரத்தை செலவிடுங்கள் மற்றும் அவர் எந்த மாதிரியான பிரச்சனையை சந்திக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உடல் ஃபிட்டாக இருக்க உடற்பயிற்சியை தினமும் செய்யுங்கள்.

மிதுனம்
5 ஆவது மற்றும் 12 ஆவது வீடுகளின் அதிபதியான சுக்கிரன், மிதுனத்தில் 3 ஆவது வீடு வழியே இடம் பெயர்கிறார். ஒருவரது ஜாதகத்தில் உள்ள இந்த நிலை, வலிமை, தைரியம் மற்றும் இளைய உடன்பிறப்புக்களைக் குறிக்கிறது. சிம்மத்திற்கு செல்லும் சுக்கிரனால் இந்த ராசிக்காரர்களின் வாழ்வில் பல சாதகமான விஷயங்கள் நடைபெறும். வேலை செய்பவர்கள் அலுவலகத்தில் நல்ல மரியாதையைப் பெறுவார்கள். வணிகர்கள் நன்மை பயக்கும் முடிவுகளை எதிர்பார்க்கலாம். வேலை சம்பந்தமான பயணங்கள் லாபத்தைத் தரும். திருமணமானவர்கள் நேர்மறை மாற்றங்கள் நிகழும்.
கணவன் மனைவி இடையே இருந்த சச்சரவுகள் முடிவுக்கு வரும். வார்த்தைகளில் கவனமாக இருங்கள். உங்கள் காதலியை கேலி கிண்டல் செய்யாதீர்கள். இல்லாவிட்டால் உங்களைப் பற்றிய அவர்களின் எண்ணங்களில் மாற்றங்கள் ஏற்படக்கூடும். அதோடு இது உறவில் விரிசலை ஏற்படுத்தும்.

கடகம்
கடக ராசிக்காரர்களின் நான்காவது மற்றும் 11 ஆவது வீடுகளின் அதிபதியான சுக்கிரன், இரண்டாவது வீட்டின் வழியே சிம்மத்திற்கு செல்கிறார். இந்த வீடு பேச்சு, குடும்பம் மற்றும் செல்வத்தைக் குறிக்கிறது. குடும்ப வணிகத்துடன் தொடர்புடைய கடக ராசிக்காரர்கள், இந்த பெயர்ச்சியால் லாபத்தை எதிர்பார்க்கலாம். வீட்டின் இளைய உறுப்பினர்கள் கூட உங்கள் பக்கம் நிற்பார்கள். வேலை செய்வோருகு சாதகமான முடிவுகள் கிடைக்கும். சிலர் சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம். அன்பின் தெய்வம் என்று அழைக்கப்படும் சுக்கிரனின் இந்த இடமாற்றம், கடக ராசிக்காரர்களின் காதலில் ரொமான்ஸை அதிகரிக்கும். இந்த காலக்கட்டத்தில் பலரும் முக்கியமான பணிகளை தவிர்த்து, காதலியுடன் தங்களின் நேரத்தை செலவிடுவார்கள். இந்த பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்கள் கண் தொடர்பான பிரச்சனைகளை சந்திப்பதால், உங்கள் கண்களை கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள்.

சிம்மம்
சிம்ம ராசியில் முதல் வீட்டில் சுக்கிரன் செல்கிறது. இந்த வீடு உடல், தன்மை, இயல்பு, ஆரோக்கியம் மற்றும் புத்தி ஆகியவற்றைக் குறிக்கிறது. சிம்மத்திற்கு செல்லும் சுக்கிரனால், இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல சாதகமான மாற்றங்கள் நிகழும். விதி இப்போது முற்றிலும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். பல சிக்கல்களில் இருந்து வெளியே வருவீர்கள். பணி புரிபவர்களுக்கு சாதகமான காலம். சிம்ம ராசிக்காரர்கள், இந்த காலத்தில் தங்கள் வாழ்க்கையை முன்னேற்றுவதில் உறுதியாக இருப்பார்கள். இருப்பினும் அதிகமான ஆசை கொள்ள வேண்டாம். இல்லாவிட்டால், உங்கள் கவனம் பல திசைகளில் சிதறக்கூடும். இறுதியாக, எதையும் உருப்பிடியாக செய்ய முடியாமல் போகும். சுக்கிரனின் இந்த மாற்றம் உங்கள் நடத்தையில் முன்னேற்றத்தைக் கொண்டு வரும். இதன் விளைவாக உங்கள் பெயர் மற்றும் மரியாதை சமூகத்தில் அதிகரிக்கும். இந்த ஆரோக்கியமான சுக்கிரனின் மாற்றம் உங்கள் உடல் ஆரோக்கியத்தையும் சிறப்பாக வைத்திருக்கும்.

கன்னி
கன்னி ராசியின் 12 ஆவது வீட்டின் வழியாக சுக்கிரன் இடம் பெயர்கிறார். இந்த வீடு இழப்புகளின் வீடு. இது வாழ்க்கையில் வரவிருக்கும் பிரச்சனைகள், செலவுகள் மற்றும் வெளிநாடுகளுடனான உங்கள் உறவு ஆகியவற்றைக் குறிக்கிறது. இந்த காலம் கன்னி ராசிக்காரர்களுக்கு மிகவும் சவால் நிறைந்ததாக இருக்கும் என்பதை நிரூபிக்கும். இந்த நேரத்தில் கன்னி ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும். ஏதேனும் உடல்நல பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தால், வழக்கமான பரிசோதனைகளுக்கு செல்லுங்கள். அதோடு வாகனத்தில் பயணம் செய்யும் போது, கவனமாக இருங்கள். நிதி ரீதியாக சில பிரச்சனைகளை எதிர்கொள்ளக்கூடும். எனவே இந்த காலத்தில் மற்றவர்களுக்கு கடன் கொடுப்பதைத் தவிர்த்திடுங்கள். வெளிநாடுகளுடன் தொடர்புடைய நிறுவன ஊழியர்கள் இந்த நேரத்தில் போதுமான பலன்களைப் பெறுவார்கள்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களின் அதிபதி தான் சுக்கிரன் மற்றும் இவர்களது எட்டாவது வீட்டின் அதிபதியும் இவராவார். சுக்கிரன் சிம்மத்திற்கு 11 ஆவது வீடு வழியே செல்கிறார். இந்த மாற்றம், துலாம் ராசிக்காரர்களின் வாழ்வில் பல சாதகமான மாற்றங்களைக் கொண்டு வரும். வேலை செய்பவர்கள் உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவார்கள். சிலருக்கு தி டீ ரென்று நண்பர்கள் அல்லது உறவினர்களிடம் இருந்து பரிசு கிடைக்கும். பலர் இந்த நேரத்தில் தி டீ ரென்று உங்கள் பணிகளில் இருந்து சிறந்த முடிவுகளை எதிர்பார்க்கத் தொடங்குவீர்கள். காதலிக்கும் துலாம் ராசிக்காரர்கள் தங்கள் வாழ்வில் காதல் அதிகரிப்பதை உணர்வார்கள். அதே சமயம், திருமணமானவர்கள் நல்லிணக்கத்தை அனுபவிப்பார்கள். எட்டாவது வீட்டின் அதிபதியான சுக்கிரன், பலருக்கு விசித்திரமான பாடங்களைக் கற்று கொடுப்பார். இந்த காலம் மாணவர்களுக்கு சாதகமான காலமாகும். ஃபிட்டாக இருக்க யோகா, தியானம் போன்றவற்றை செய்யுங்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசியில் சுக்கிரன் 10 ஆவது வீட்டின் வழியே இடம் பெயர்கிறார். இந்த வீடு கர்மா, தலைமைத்துவ திறன்கள் மற்றும் வியாபாரத்தைக் குறிக்கிறது. இந்த கிரக இயக்கத்தின விளைவாக, வேலை செய்பவர்கள் உயர் அதிகாரிகளிடம் இருந்து முழு ஆதரவைப் பெறுவார்கள். இருப்பினும், இது சில சிக்கல்களை உருவாக்கும். உங்களுடன் பணிபுரிபவர்கள் உங்கள் வார்த்தைகளை தவறாக புரிந்து கொள்ள வாய்ப்புள்ளது. வணிகம் செய்யும் விருச்சிக ராசிக்காரர்கள் லாபத்தை எதிர்பார்க்கலாம். உங்களின் வருமானம் அதிகரித்து, பல பதட்டங்களில் இருந்து விடுபட உதவும். அதே சமயம், ஊடகங்கள் அல்லது திரைப்பட தொழில்களுடன் தொடர்புடைய விருச்சிக ராசிக்காரர்கள், அவர்களின் படைப்பாற்றலால் பயனடைவார்கள். உங்களின் பணி விரும்பப்படும் மற்றும் பாராட்டப்படும். குடும்ப முன்னிலையில் சாதகமாக இருக்கும். திருமணமானவர்கள், தங்கள் மனைவியின் முழு ஆதரவைப் பெறுவார்கள். நிதி ரீதியாக செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இருப்பினும் வரவுக்கு ஏற்ற செலவு செய்ய திட்டமிட்டு செலவு செய்யுங்கள். ஆரோக்கியம் மேம்பட, உங்கள் அன்றாட வழக்கத்தில் சில மாற்றங்களை மேற்கொள்ளுங்கள்.

தனுசு
ஆறாவது மற்றும் 11 ஆவது வீடுகளின் அதிபதியான சுக்கிரன், தனுசு ராசியில் 9 ஆவது வீட்டின் வழியாக சிம்மத்திற்கு செல்கிறார். இந்த வீடு உங்கள் அதிர்ஷ்டம், தந்தை மற்றும் பயணத்தைக் குறிக்கிறது. இந்த இடப் பெயர்ச்சியால் தனுசு ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதே சமயம் அதிகம் பேசுவதையும் தவிர்க்க வேண்டும். உங்களுக்கும், உங்கள் தந்தைக்கும் இடையே பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களுடன் முரண்படுவார்கள். எனவே யாருடன் பேசும் போதும் வரம்புகளை நினைவில் கொள்ளுங்கள். அளவுக்குமீறி பேச முயற்சிக்காதீர்கள். மறுபுறம் திருமணமானவர்கள், தங்கள் மனைவியுடன் சில அழகான தருணங்களை செலவிடுவார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க சரியான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்ணுங்கள். இல்லாவிட்டால் வயிறு தொடர்பான பிரச்சனைகளால் அவஸ்தைப்படக்கூடும்.

மகரம்
மகர ராசியில் சுக்கிரன் 8 ஆவது வீட்டின் வழியே செல்கிறார். இந்த வீடு நீண்ட ஆயுர், வாழ்க்கையில் உடனடி பிரச்சனைகள், மாய விஷயங்கள், தடைகள் மற்றும் மூதாதையர் சொத்து ஆகியவற்றைக் குறிக்கிறது. சிம்மத்திற்கு செல்லும் சுக்கிரனால் மகர ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமான காலமாக இருக்காது. இக்காலத்தில் உங்கள் குழந்தைகளைப் பற்றி அதிகம் கவலைக் கொள்வீர்கள். கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். வேலை செய்பவர்கள் அலுவலகத்தில் சில பிரச்சனைகளை எதிர்கொண்டு, அதனால் உங்கள் மன அழுத்தம் அதிகரிக்கும். தேவையற்ற கவலைகள் மற்றும் ஒரு தீர்வு எடுக்க முடியாமல் அவஸ்தைப்படுவீர்கள். இம்மாதிரியான நேரங்களில், வீட்டில் உள்ள பெரியோரை அணுகி, சரியான தீர்வு காண அவர்களின் ஆலோசனையைப் பெறுங்கள். என்ன தான் கவலைகள் இருந்தாலும், நிதி ரீதியாக எந்த பிரச்சனையும் இருக்காது. எதிர்பாராத இடங்களில் இருந்து நிதியைப் பெறுவீர்கள். இருப்பினும் பயணத்தின் போது மதிப்புமிக்க பொருட்களை கவனமாக வைத்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, ஃபிட்டாக இருக்க தினமும் பழங்களை சாப்பிடுங்கள்.

கும்பம்
சுக்கிரன் கும்ப ராசியின் 7 ஆவது வீட்டின் வழியே இடம் பெயர்கிறார். இந்த வீடு கூட்டாண்மை மற்றும் வாழ்க்கைத் துணையைக் குறிப்பது. இந்த பெயர்ச்சியால், கும்ப ராசிக்காரர்கள் தங்கள் துணையிடமிருந்து முழுமையான ஆதரவைப் பெறமாட்டார்கள். உங்கள் இருவருக்கும் இடையே வாதங்கள் நீடிக்கும். இருப்பினும் அது உங்கள் திருமண வாழ்க்கையை எதிர்மறையாக பாதிக்காது. வியாபாரம் செய்பவர்கள், இந்த காலத்தில் குறிப்பிடத்தக்க லாபத்தைப் பெறுவார்கள். உங்கள் திட்டங்கள் அனைத்தும் இப்போது வெற்றிகரமாக மாறும். முக்கியமாக இந்த காலத்தில் கும்ப ராசிக்காரர்கள் தங்களின் தன்மையை மெருகூட்டுவார்கள். மகர ராசியைச் சேர்ந்த பெண்க்ள, அழகு மற்றும் மேக்கப் பொருட்களுக்கு பணம் செலவழிப்பதில் இருந்து பின்வாங்க மாட்டார்கள். மாணவர்கள் எப்படிப்பட்ட கடினமான பாடத்தையும் எளிதில் புரிந்து கொள்வார்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சில காலமாக நோயுடன் போராடி வந்தவர்கள் இந்த காலத்தில் இறுதியாக நிவாரணம் பெறுவார்கள்.

மீனம்
மீன ராசியில் சுக்கிரன் ஆறாவது வீட்டின் வழியே சிம்மத்திற்கு செல்கிறார். இந்த வீடு எதிரிகள், கடன்கள், விவாதங்கள் மற்றும் அடிபணிந்தவர்களைக் குறிக்கிறது. வேலை செய்பவர்கள் இந்த காலத்தில் பணியிடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் உங்களுக்கு எதிராக சதி தீட்ட வாய்ப்புள்ளது. மேலும் உங்கள் உடல்நலம் பாதிக்கப்படுவாற்கான சாத்தியங்களும் உள்ளன.
உடலில் சிறு பிரச்சனை என்றாலும் உடனே மருத்துவரை அணுகுங்கள். இந்த காலத்தில் பலர் முதுகு வலியால் போராடலாம். எனவே அதிக எடை தூக்குவதைத் தவிர்த்திடுங்கள். ஆரோக்கியமற்ற உணவுகளைத் தவிர்த்திடுங்கள். பேசும் போது கவனமாக பேசுங்கள். முக்கியமாக விவாதங்களில் இருந்து விலகி இருப்பது மிகவும் நல்லது. உங்களை யாரேனும் சீண்டினால், அவர்களிடம் இருந்து விலகி இருக்க முயற்சி செய்யுங்கள். முக்கியமாக உங்கள் நிதி நிலைமை பலவீனமாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *