மாலை நேரத்தில் இந்த பொருட்களை த வறியும் தானமா கொடுத்திடாதீங்க: பாரிய சிக்கலை சந்திப்பீங்களாம் !!

ஆன்மீகம்

தானம் வழங்குவது மிகவும் நல்ல செயல். அதுவும் ஏழை, எளியவர்களுக்கு தானம் செய்வது மிகவும் முக்கியம். ஆனால் அப்படி தானம் செய்வதாக இருந்தால், அதை சரியான நேரத்தில் செய்ய வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். சூரியன் மறைந்த பின்னர் சில பொருட்களை தானம் செய்வது நல்லதல்ல என்று கருதப்படுகிறது. தற்போது மக்களிடையே கடவுள் பக்தியும், ஜோதிட நம்பிக்கையும் சற்று அதிகரித்துள்ளது. இதனால் தான் தற்போது பலர் எந்த ஒரு செயலை செய்வதற்கு முன்பும் ஜோதிடர்களை சந்தித்து, தங்களது ஜாதகங்களைக் கொடுத்து நல்ல காலமா என்பதைப் பார்க்கிறார்கள். குறிப்பாக மாலை நேரத்தில் பின்வரும் பொருட்களை தானம் செய்வது வீட்டிற்கு வறுமையைக் கொண்டு வரும்.

உடை, காலணிகள்
பல பெண்களுக்கு வெளியே செல்லும் போது தெரிந்தவர்களிடம் விருப்பமான அணிகலன்களை வாங்கி அணியும் பழக்கம் இருக்கும். ஜோதிடத்தின் படி, எப்போதும் ஒருவர் மற்றவர்களின் உடைகளை, காலணிகள், கைக்கடிகாரங்கள் போன்றவற்றை வாங்கி அணியக்கூடாது. இதன் காரணமாக, அந்த நபரின் எதிர்மறை ஆற்றல் உங்களுக்குள் வந்துவிடும். அதோடு இது அலர்ஜி பிரச்சனையையும் ஏற்படுத்தலாம். ஒருவேளை நீங்கள் மற்றவர்களின் பொருளை வாங்கிப் பயன்படுத்தினாலும், வாங்கிய பொருட்களை மாலை வேளையில் திருப்பித் தர வேண்டாம். இல்லாவிட்டால், நீங்கள் சிக்கலில் மாட்டி கஷ்டப்படுவீர்கள்.

கடன் கொடுக்காதீர் – சூரிய அஸ்தமனத்திற்கு பின்னர் யாருக்கும் எக்காரணம் கொண்டும் கடன் கொடுக்காதீர்கள். மாலை வேளையில் லட்சுமி தேவி வீட்டிற்கு வரும் நேரமாக கூறப்படுகிறது. எனவே இந்நேரத்தில் கடன் கொடுக்காதீர்கள். இல்லையென்றால் வீட்டில் வறுமை அதிகரிக்கலாம்.

புளிப்பான பொருட்களைக் கொடுக்காதீர் – மாலையில் எக்காரணம் கொண்டும் புளிப்பான பொருட்களான தயிர், ஊறுகாய் போன்றவற்றைக் கொடுக்க வேண்டாம். இதன் காரணமாக, உங்கள் வீட்டில் உள்ள லட்சுமி தேவி அவர்களின் வீட்டிற்கு சென்றுவிடுவார். இதனால் உங்கள் வீட்டில் பணப்பிரச்சனை அதிகரிக்கும்.

மஞ்சள் தூள் – மஞ்சள் தூள் ஒரு மங்களகரமான மற்றும் புனிதமான பொருளாக கருதப்படுகிறது. அதோடு மஞ்சள் லட்சுமி தேவி குடியிருக்கும் பொருளாகவும் கூறப்படுகிறது. இப்படிப்பட்ட மஞ்சளை மாலை வேளையில் மற்றவருக்கு கொடுத்தால், உங்கள் வீட்டில் உள்ள லட்சுமி அவர்கள் வீட்டிற்கு சென்றுவிடுவார்.

உப்பு – மாலை வேளையில் எப்போதும் யாருக்கும் உப்பை கொடுக்காதீர்கள். உப்பு மகாலட்சுமியின் அம்சம். இதை மற்றவர்களுக்கு கொடுத்தால், வீட்டில் பணப்பிரச்சனை மற்றும் பண இழப்பை சந்திக்க நேரிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *