மனிக்கட்டு வரிகள் கூறும் உங்கள் ரகசியம் தெரியுமா ? உங்கள் எதிர்காலத்தைப் பற்றி கூறும் மணிக்கட்டு ரேகை !!

ஆன்மீகம்

நாம் ஜோதிடம் பார்க்க ஜோதிடரிடம் சென்றால் அவர் முதலில் பிடிப்பது நமது கையை தான்.இதில் கைரேகை பார்க்கும் பொழுது பெரும்பாலும் உள்ளங்கையில் உள்ள ரேகைகளை வைத்தே நடந்தது, நடக்கப் போறது என எல்லாவற்றையும் கூறுவார்கள்.ஆனால், கீழே குறிப்பிட்டுள்ள கைரேகையானது சற்று மாறுபடும் விதத்தில் கையின் மணிக்கட்டில் உள்ள வரிகளை வைத்து ஜோதிடம் பார்க்கப்படுகிறது.ஆம், உள்ளங்கையை வைத்து மட்டுமல்ல மணிக்கட்டு ரேகை வைத்தும் ஒருவரது ஆரோக்கியம், வாழ்க்கை, ஆயுள், தொழில் ரீதியான தகவல்கள் மற்றும் உறவுகள் குறித்தும் கூறலாம் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.இனி, மணிக்கட்டு வரிகள் எப்படி உங்கள் வாழ்க்கையை தீர்மானிக்கின்றன என்பதை காணலாம்….

உள்ளங்கை மற்றும் கையை இணைக்கும் ஆங்கிலத்தில் Bracelet Lines / Rascette lines என்று சொல்லக் கூடிய வரிகளைக் கொண்டு தான் நாம் நம் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை தெரிந்துகொள்வோம் வாருங்கள்.இது மெட்டாபிசிக்ஸ் (metaphysics) என்று கூறப்படுகிறது. முதலில் மணிக்கட்டில் உள்ள வரிகளின் எண்ணிக்கையைப் பற்றி பார்க்கலாம்.உங்கள் மணிக்கட்டில் உள்ள வரிகளை எண்ணி பார்க்கும் பொழுது,

1 வரி – ஆயுளின் காலம் 25 முதல் 35 எனவும், 2 வரிகள் – ஆயுளின் காலம் 45 முதல் 57 எனவும், 3 வரிகளுக்கு மேல்- ஆயுளின் காலம் 85 வயதுக்கு மேல் என்றும் கூறப்படுகிறது.இதில் பெரும்பாலனவர்களுக்கு 2 முதல் மூன்று வரிகளே இருக்கும். மிகவும் அரிதானவர்களுக்கு மட்டுமே 1 அல்லது 4 வரிகள் காணப்படும்.

முதல் வரி – இந்த வரியானது மிகவும் தெளிவாகவும், பிரிவு, நெளிவு சுளிவு இல்லாமலும் இருந்தால் மிகுந்த ஆரோக்கியத்துட இருப்பீர்கள்.அவ்வாறு இல்லாமல், பிரிவுடன் இருந்தால் அந்த நபரானவர், பொறுப்பற்று, சகிப்புத் தன்மை மிக்கவராகவும் இருப்பார்.இந்த வரியானது ஆண்களுக்கும், பெண்களுக்கும் மாறுபட்டதான பலனை கொடுக்கும்.

ஆண்களுக்கு, இந்த முதல்வரி நெளிவு, சுளிவுடனும், பிரிவுடனும் இருக்குமேயானால், அவர் சிறுநீர், பு ரோ ஸ் டே ட் மற்றும் இ ன ப் பெ ருக்க கு றை பா டு கள் உள்ளவராக இருக்கலாம். பெண்களுக்கு, இவ்வாறு நெளிவு, சுளிவுடன் இருந்தால், அவர்களுக்கு மகளிர் பி ர ச் சனைகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன. இது மட்டுமல்லாது கருத்தரிக்கும் தருணத்திலும் அவர்களுக்கு சற்று சிரமம் ஏற்படும். மேலும், மா த வி டா ய் நாட்கள் தள்ளி போவது போன்ற பிரச்சனைகளும் நிகழலாம்.

இரண்டாவது வரி – இரண்டாவது மணிக்கட்டு வரியானது தெளிவாக இருப்பது, செல்வம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பு ஆகியவை மிகுந்து இருப்பதைக் குறிக்கும். மேலும், அந்த நபரானவரின் உடல்திறன் நன்றாகவும், வாழ்க்கை சிறப்பாகவும், இருக்கும் அதே சமயம், பிரிவுகள் இருந்தால் சற்று தடங்கல்கள் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

மூன்றாவது வரி – இந்த வரியானது, உங்கள் வேலை மற்றும் தொழில் ஆகியவற்றைக் குறிப்பது. இந்த வரியானது, பிரிவு மற்றும் நெளிவு சுளிவுடனும் இல்லாமல் இருக்கும் பட்சத்தில் அந்த நபரானவர் தான் செய்யும் தொழிலில் எப்போதும் ஏறுமுகத்தையே காணப்படுவார் என்று சொல்லப் படுகிறது. அதேசமயம், முதல் வரி தடித்தும், இரண்டாவது மூன்றாவது வரி சற்று மெல்லிசாகவும் இருந்தால் அந்த நபர் குழந்தை பருவத்தில் செழிப்பாகவும், நடுவயதில் சற்று பின்தங்கி மேலும், கடைசியில் மீண்டெழுந்து வரும் நபராக இருப்பார் என குறிப்பிடப்படுகிறது.

நான்காவது வரி – மேலே குறிப்பிட்டது போலவே இந்த வரியானது மிகவும் அரிதானவர்களுக்கு மட்டுமே இருக்கக் கூடும். இந்த வரியானது, மூன்றாவது வரிகளுக்கு இணை வரி போல இருப்பதால் உங்கள் தொழில் மற்றும் வேலை ரீதியான செயல்பாடுகளுக்கு வலுவளிக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும், இவ்வாறு நான்கு வரிகள் இருப்பவர்கள் தன் சொந்த நாட்டை விட்டு வெளிநாட்டிற்கு வேலைக்குச் செல்வார்களேயானால் இ ற க் கும் தருணம் வெளிநாட்டில் ம ர ண ம் அடையலாம் என்றும் கூறுகிறார்கள். மேலும், ஒருவரது மணிக்கட்டு வரிகளில் கொக்கி போன்ற குறி ஏதேனும் இருக்கிறது எனில், அவருக்கு ஆளுமை திறன் அதிகம் இருக்கும் எனவும் சங்கிலி போன்ற தோற்றம் இருந்தால், அந்த நபரின் வாழ்க்கை போ ரா ட் ட ங்க ள் நிறைந்திருக்கும் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *