குரு பெயர்ச்சி 2020; இந்த 5 ராசியினர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமாம்?

ஆன்மீகம்

குரு தனது ரிஷபம் ராசிக்கு 9ம் இடம், கடகம் ராசிக்கு 7ம் இடம், கன்னி ராசிக்கு 5ம் இடம், தனுசு ராசிக்கு 2ம் இடம், மீனம் ராசிக்கு 11ம் இடத்தில் அமர்ந்து மிக சிறப்பான பலன்களைத் தர உள்ளார். குரு பெயர்ச்சியில் மோசமான பலன்களைப் பெற உள்ள ராசிகள் யார். அவர்கள் எப்படிப்பட்ட வழிபாடு, பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை இங்கு பார்ப்போம்..

ஒரு சாதாரண ரிஷியாக இருந்த பிருகஸ்பதி, அவர் கற்றறிந்த வேதங்களும், 64 கலைகளும், அனைவருக்கும் நன்மை பயக்க செய்து வந்த பல்வேறு வேள்வி காரணமாகவும், சரியான நேரத்தில் சரியான ஆலோசனை வழங்கி வந்ததால் இவர் தேவர்களின் குருவாக உயர்ந்தவர்.

நவகிரகங்களில் ஒருவர் என்ற அந்தஸ்தைப் பெற்றவர். ஜோதிட விதிப்படி ஒரு முழு சுப கிரகமாக இருந்தாலும், முழு அசுப கிரகமாக இருந்தாலும், அவர்கள் முழுமையாக நல்ல பலனையோ அல்லது முழுவதுமாக கெடுபலனை அளிக்கமாட்டார்கள்.

கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் : – மிதுனம், சிம்மம், விருச்சிகம், கும்பம், மீனம் இந்த ராசியினர்கள் குரு பகவானுக்கு உரிய கோயிலுக்கு சென்று வணங்கி வருதலும், குருவுக்கு உகந்த பரிகாரங்கள், பூஜை, ஹோமங்களில் பங்கேற்பது நல்லது.

ஆசிரியரான குருவின் அருளைப் பெற கல்வி பயில பொருளாதார வசதியற்றவர்களுக்குக் கல்வி உதவி அளிப்பதால் அல்லது உங்களால் முடிந்தால் அவர்களுக்கு கல்வியைக் கற்றுக் கொடுப்பதும் மிக சிறந்த பலனைத் தரக்கூடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *