உங்களை தேடி வரப்போகும் அதிஷ்டங்கள் என்னென்ன தெரியுமா!! மூன்று முறை மோதிர விரலால் இதை எழுதி பாருங்க !!

ஆன்மீகம்

எல்லோருடைய எதிர்பார்ப்பும் ஆசையும் ஒன்றாக தான் இருக்கும் அதாவது எல்லோருடைய வாழ்விலும் பெயர், புகழ்,பதவி, பட்டம் மற்றும் பணமும் ஒவ்வொரு வீடுகளிலும் தேடி வர வேண்டும் என்பது விருப்பமும் ஆசையுமாகும்.தற்போதைய கால கட்டத்தில், உயர் பதவியும், புகழும், அந்தஸ்தும் அவரவர் தகுதிக்கு ஏற்றற் போல கிடைக்கிறதா என யோசித்து பார்த்தால், நிச்சயமாக இல்லை. அதிஷ்டம் உள்ளவர்களுக்கு, தகிதியே இல்லை என்றாலும் கூட, பெயர் பட்டம் பதவி கிடைக்கும். தகுதி இருந்தும் தனக்கான பெயர் புகழ் பதவி பட்டம் பணம் இவைகளை பெறமுடியாமல் இன்றளவும் எத்தையோ பேர் தவித்து வருகிறார்கள். விட முயட்சி செய்வதும் கடின உழைப்பு இருந்தும் உங்களை வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய முடியவில்லையா?

உங்களுக்கு அதிஷ்டம் இல்லை என்று சொல்ல வேண்டும். அதிஷ்டம் இல்லாதவர்களுக்காக, சொல்லப்பட்டுள்ள ஆன்மீக ரீதியான பரிகாரத்தை பற்றித்தான் இன்று இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம். வருடத்திற்கு ஒரு முறை வரக்கூடிய விஜயதசமி அன்று நாம் எந்த ஒரு செயலைத் தொடங்கினாலும் அது நமக்கு வெற்றிதரும் என்பதில் ஒரு துளி அளவு கூட சந்தேகமில்லை. ஆனால் இந்த தசமி திதி மாதந்தோறும் 2 முறை வருகிறது. இது சில பேருக்கு தெரிந்திருக்கும்.

சில பேருக்கு தெரிந்திருக்காது. ஆனால் இந்த தசமி திதி அன்று நாம் ஒரு வேண்டுதலை இறைவனிடம் வைத்தல், அந்த வேண்டுதலை உடனே நிறைவேறும் என்றும் சொல்கிறது சாஸ்திரம் குறிப்பாக மாதம் தோறும் வரும் வளர்பிறை தசமி திதி அன்று, நீங்கள் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். உங்கள் வீட்டு பூஜை அறையை சுத்தம் செய்து விட்டு சுவாமி படங்களுக்கு அலங்காரம் செய்து, ஒரு தீபம் ஏற்றி வைத்துவிட்டு, அதன் பின்பு சுத்தமான ஒரு தாம்பூல தட்டை எடுத்து கொள்ள வேண்டும். உங்களுடைய வீட்டில் பித்தளை அல்லது செம்பு தாம்பூலத்தட்டு இருந்தால், அதை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

இல்லாதவர்கள் எவர்சில்வர் தாம்பூல தட்டை அதன் மேல் நவதானியத்தை பரப்பி, உங்களுடைய மோதிர விரலால் உங்களுக்கு என்ன கிடைக்க வேண்டுமோ, பெயரை புகழா பதவியா பணமா அல்லது எல்லாவற்றிலும் சேர்ந்த ‘வெற்றி’ என்ற வார்த்தையை வேண்டுமானாலும் நம்பிக்கையோடு அந்த நவதானியத்தில் 3 முறை எழுத வேண்டும்.

இப்படி ஒருமுறை தசமி தசமி திதியில் உங்கள் வீட்டில் இந்த பரிகாரத்தை நம்பிக்கையோடு செய்தால் கூட, உங்கள் வாழ்க்கையில் வரக்கூடிய தடைகள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கலாம். எதை தொட்டாலும் தோல்வி, என்ற பிரச்சனை உங்களை விட்டு நீங்கி விடும்.

உங்களுக்கு இதுநாள் வரை கிடைக்காத பெயர் புகழ் பதவி பட்டம் பணம் உங்களைத் தேடி வரும் பரிகாரம் முடிந்த மூன்றாவது நாள் நவதானியத்தை காக்கை குருவிகளுக்கு சாப்பிட போட்டு விடலாம். திறமை இருந்தும் உங்களால் முன்னேற முடியவில்லை என்றால் நீங்கள் நிச்சயம் இந்த பரிகாரத்தை நம்பிக்கையோடு செய்து பாருங்கள். இதோடு சேர்த்து காலை நேரத்தில் உங்கள் நெற்றியில் விபூதி குங்குமம் சந்தானம் எந்த திலகத்தை இட்டுக்கொண்டாலும், அதை உங்களுடைய மோதிர விரலால் உங்களுடைய நெற்றியில் இட்டுக்கொள்ள வேண்டும்.

நெற்றியில் இதை இட்டுக்கொள்ளும் போதும்,உங்களது குறிக்கோளை 3 முறை உங்கள் மனதில் சொல்லி விட்டு, அதன் பின்பு நெற்றியில் விபூதி வைக்கும் பழக்கத்தை கொண்டு வாருங்கள். குலா தெய்வத்தை வேண்டிக்கொண்டு, இஷ்ட தெய்வத்தின் ஆசீர்வாதத்தோடு இந்த பரிகாரத்தை செய்பவர்களுக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *