ஆவணி மாதத்தில் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்: இந்த 6 ராசியில் உங்க ராசி இருக்குதா கட்டாயம் படியுங்கள் !!

ஆன்மீகம்

சிம்மத்தில் சூரியன் பெயர்ச்சி :சூரிய பகவான் தனது சொந்த ராசியான சிம்ம ராசியில் 17 ஆகஸ்ட் 2021 அன்று சஞ்சரிக்கக்கூடிய அற்புத மாதம் தான் ஆவணி மாதம். சூரியன் தனது வீட்டில் ஒரு வருடத்திற்கு பிறகு சஞ்சரிக்க உள்ளதால் சில ராசிகளுக்கு பல விதங்களில் அற்புத பலன்கள் கிடைக்கும். இதில் நல்ல விஷயம் என்னவென்றால் நவகிரகங்களின் ராஜாவான சூரியன் மிகவும் வலுவான நிலையில் இருப்பார். அதுமட்டுமல்லாமல், சூரியனும் வியாழனும் ஒருவருக்கொருவர் எதிர்கொண்டு ஒரு நல்ல சூழ்நிலை சூரியன் சாதகமாக பெற்ற ராசிக்காரர்கள் அதிக நன்மைகளைப் பெறுவார்கள்.

​மேஷம் : எந்த ஒரு பிரச்சனையும் தீரும்
உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் சூரியனின் சஞ்சாரம் நிகழ்வதால் மாணவர்களின் கல்வி நிலை மேம்படும். குடும்ப வாழ்க்கையில் பல விதத்தில் நல்ல முடிவுகளைப் பெறலாம். இந்த காலத்தில் பிள்ளைகளின் வழியி நல்ல செய்திகளைப் பெறலாம். இருப்பினும், இந்த மாதத்தில் உங்களின் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டாக வேண்டும். உங்கள் காதல் விஷயத்தில் கருத்து வேறுபாடு ஏற்படும். சில பிரச்னைகளை சமாளிக்க வேண்டி வரும்.

​மிதுனம்: வியாபாரத்தில் நல்ல பலன் கிடைக்கும்
உங்கள் மூன்றாவது வீட்டில் அதாவது தைரியம் மற்றும் வலிமை வீட்டில் நெருப்பு ராசிகளின் ராஜா சூரியன் இருப்பது மிகவும் உகந்தது. சூரியனின் இந்த மாற்றம் உங்களுக்கு தைரியத்தையும், வலிமையையும் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் நல்ல முடிவுகளைப் பெறலாம். உங்கள் சகோதர சகோதரிகளுக்கு உதவ முன்வரலாம், இது அவர்களுடனான உங்கள் உறவை மேம்படுத்தும். சமூகப் பணிகளைச் செய்வது உங்களுக்கு மகிழ்ச்சியையும், அமைதியையும் தரும். பணியிடத்தில் உங்கள் வேலையை சரியான திட்டங்களால் அனைத்தையும் சரியான நேரத்தில் முடிப்பீர்கள், அதிகாரிகளுடனான உறவில் இனிமை இருக்கும்.

​சிம்மம்: குடும்பத்தின் முழு ஆதரவு கிடைக்கும்
சிம்ம ராசி அதிபதி சூரியன் ராசியிலேயே அமர்வதால் உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும். உங்கள் ஆளுமை செழித்து, சமூக வாழ்க்கையிலும் நல்ல முடிவுகளைப் பெறுவீர்கள். இந்த மாதத்தில் யோகா, தியானம் செய்வது, அதற்கான பயிற்சிகளை மேற்கொள்வது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அது உங்கள் ஆரோக்கியத்தில் நல்ல மாற்றங்களை கொண்டு வரலாம். உங்கள் செயலில் குடும்பத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள், நீங்கள் ஏதேனும் முதலீடு செய்ய திட்டமிட்டால் அதிர்ஷ்டமும் உங்களை ஆதரிக்கும்.

​துலாம் : வெற்றி பெறுவதற்கான நல்ல வாய்ப்புகள்
சூரியன் உங்கள் ராசிக்கு 11ம் இடத்தில் சஞ்சரிப்பதால் அரசு தொடர்பான வேலைகள் விரைவாக முடியும். அரசு துறையில் இருப்பவர்களுக்கு நன்மைகள் ஏற்படும். மேலும் அரசு வேலைக்கான தேர்வில் உங்களுக்கு வெற்றி கிடைக்க வாய்ப்புள்ளது. அரசியலில் இருக்கும் நபர்களுக்கு நல்ல முன்னேற்றமான பலனை எதிர்பார்க்கலாம். பணியிடத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றமும், வெளிநாட்டுத் தொடர்பான வணிகம் செய்பவர்களுக்கு இந்த மாதம் மிகவும் சாதகமானதாக இருக்கும்.

​விருச்சிகம்: தந்தையுடன் உறவு மேம்படும்
சூரியனின் இந்த மாற்றத்தால், நீங்கள் தொழில் துறையில் நல்ல முடிவுகளைப் பெறுவீர்கள். படித்து முடித்து வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. உங்கள் தந்தையுடனான உறவு நிலை மேம்படும். உங்கள் தந்தை அல்லது பெரியோர், பணியிடத்தில் அனுபவம் வாய்ந்தவர்களின் ஆலோசனை உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சிலருக்கு அவர்களின் தகுதி, திறமைக்கு ஏற்ற பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற நன்மைகள் ஏற்படும். புதிய வேலைக்கு மாற நினைத்தல், புதிய தொழில் தொடங்க திட்டமிட்டிருந்தால் இந்த ஆவணி மாதம் உங்களுக்கு சாதகமானதாக இருக்கும்.

​தனுசு: ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும்
ஆவணி மாதத்தில் சூரியன் சிம்மத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் மனம் அமைதியை தேடி ஓடும். ஆன்மிக பணிகளில் ஆர்வம், ஈடுபாடு அதிகரிக்கும். கல்வி தொடர்பான வேலைகள் செய்பவர்களுக்கு, மாணவர்களுக்கு இந்த மாதம் மிகவும் சாதகமான பலன்களைத் தரக்கூடியதாக இருக்கும். பெற்றோரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அவர்களின் ஆசி உங்களுக்கு கிடைக்கும். இந்த மாதம் மன அமைதியைக் காத்துக் கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *