உங்களுடைய கனவில் யானை, குதிரை, பாம்பு, சிங்கம், கனவில் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா!!

ஆன்மீகம்

ஒரு மனிதன் உறங்கும் நிலையிலே கனவு தோன்றுகிறது. கனவு ஏன் வருகிறது, அதன் பொருள் என்ன; அதனால் மனிதனுக்கு நன்மையுண்டா என்றெல்லாம் ஆராய்வதும் மட்டுமல்ல அந்த கனவு என்பதும் ஒரு அநுபவம். கனவு காணாதவர்களே யாரும் இல்லை என்று கூறலாம். கனவிலே தோன்றுகிற நிகழ்ச்சிகள் சமீபத்திலே வாழ்க்கையில் ஏற்பட்ட அநுபவங்களைக் கொண்டிருந்தாலும் அவை குறிக்கின்ற விஷயங்கள் வேறாக இருக்கும். அத்தோடு கனவிலே தோன்றுகிற பொருள்களைச் சின்னங்களாகப் பலசமயங்களில் எடுத்துக் கொள்ள வேண்டுமென்று ஆராச்சியாளர் பிராய்டு என்பவர் கூறுயுள்ளார். தூக்கம் என்பது இந்த உலகில் மிகப்பெரிய வரம் என்று கூறுவார்கள். ஏனெனில் என்னதான் கோடி, கோடியாக பணம் நம்மிடம் இருந்தாலும் தூக்கம் வராமல் தவிப்பவர்கள் அதிகமானோர் இருக்கிறார்கள்.

தூக்கம் வர வேண்டும் என்பதற்காக பல வழிமுறைகளை தேடி அலைகின்றார்கள். மேலும் தூக்கமாத்திரை போட்டால்தான் அவர்களுக்கு நித்திரை வரும். தூக்கம் அவ்வளவு விலைமதிப்புள்ளது. அந்தத் தூக்கத்தில் கனவு வராதவர்கள் யாருமே இருக்கமாட்டார்கள். தூக்கத்தை பற்றி அப்துல்கலாம் இவ்வாறு கூறுகிறார். தூக்கத்தில் வருவதல்ல கனவு. நம்ம தூங்கவிடாமல் வருவதுதான் கனவு என்றார் .

அதேநேரம் நாம் காணும் ஒவ்வொரு கனவுக்கும் பலன் உண்டு. நம் ஆழ்மனக் கற்பனைகள் தான் கனவுகள் எனப்படுகிறது. நம்முடைய கனவில் பலவகைகள் உண்டு இன்று நாம் பார்க்க உள்ளது என்னவென்றால் நம்முடைய கனவில் விலங்குகள் வந்தால் அதற்குரிய அர்த்தம் என்ன என்ன காரணத்திற்காக இந்தவகை கனவுகள் வருகின்றது என்பது பற்றி பார்க்கலாம்.

குதிரை – நம்முடைய கனவில் குதிரை வந்தால் அதற்குரிய அர்த்தம் என்னவென்றால் நீதிமன்றங்களில் எமக்கு இருக்கும் வழக்கில் நாம் ஜெயிப்போம் என்பது இதன் அர்த்தம். அத்துடன் குதிரை சவாரி செய்வதுபோல் எமக்கு கனவு வருமாயின் உங்களுக்கு சீக்கிரத்தில் வெளிநாட்டு யோகம் உண்டென்று அர்த்தம்.

யானை – நம்முடைய கனவில் யானை வந்தால் அதற்கு அர்த்தம் ஏதோ ஒரு வகையில் பெருஞ்செல்வம் உங்களுக்கு கிடைக்கும் என்பதன் அர்த்தம் தான் உங்களுடைய கனவில் யானை வருவது! சிலவேளை யானை மீது தோரணையாக உட்கார்ந்து சவாரி செய்வது போல் உங்களுக்கு கனவு வந்தால் சீக்கிரமே உங்களுக்கு உயர் பதவி கிடைக்கும். அத்துடன் சொந்தவீடு வாங்கும் பாக்யம் உண்டாகுமாம்.

நாய் அல்லது குரங்கு – நம்முடைய கனவில் நாய் குரைக்கும் கனவு வந்தால் உங்களை சுற்றி வீண்பழி உண்டாகும். அத்துடன் கனவில் குரங்கு வருமாயின் உங்களுக்கு நண்பர்களிடமோ,வீட்டிலோ தேவையற்ற வாக்குவாதங்கள் வரும். மேலும் கடல் தொல்லை கூடும்.

பசு – நம்முடைய கனவில் பசு வந்தால் அதாவது மேய்ச்சல் நிலத்தில் பசு மேய்வதை போல் கனவு வந்தால் நீங்கள் சீக்கிரத்தில் புதிய சொத்துக்கள் வாங்க போகிறீர்கள் என்று அர்த்தமாம்.
முயல் – நம்முடைய கனவில் முயல் வந்தால் கனவில் வந்தால், துள்ளிக் குதித்து முயல் விளையாடும் கனவு வந்தால் உறவுகளை சந்திக்க சொந்த ஊருக்கு செல்வோம் என அர்த்தம். அல்லது உறவுகள் நம்மை பார்க்க வருவார்கள் என அர்த்தம்.நரி கனவில் வந்தால் சொந்த ஊரைவிட்டு நகர்ந்து வெளியூர் செல்லப் போகிறோம் என அர்த்தம்.

பாம்பு நம்முடைய கனவில் பாம்பு வந்தால் கனவில் வந்தால் கடன் தொல்லை அகலும் என அர்த்தம். ஆடு – நம்முடைய கனவில் ஆடு வந்தால் நீங்கள் பைக்கோ, காரோ வாங்கப் போகிறீர்கள் என்று அர்த்தம். அத்துடன் காளைமாடு துரத்தும் படி கனவு வந்தால் உங்களின் வீண் பிரச்னை தீரும்.

பறவைகள் – நம்முடைய கனவில் பறவைகள் வந்தால் , அதாவது வானில் கூட்டமாக பறவைகள் செல்வதைப் போல உங்களுக்கு கனவு வந்தால் நெடுநாளாக உங்களுக்கு இருக்கும் துன்பம் சீக்கிரமே விலகப்போவதாக அர்த்தம். மேலும் உங்களுக்கு வாழ்க்கையில் புகழ் கூடுவதோடு உங்கள் வேலைதலத்தில் புதிய பதவிகளும் உங்களை தேடி ஓடி வரும்.

மயில் – நம்முடைய கனவில் மயில்வந்தால் , அதாவது மயில் அகவும் கனவு வந்தால் வெகு சீக்கிரம் உங்களது குடும்பத்தில் சுபகாரியம் நடக்க போகிறது என்று அர்த்தம், அது மட்டுமல்லாது உங்களின் மனைவியோடு அன்னியோன்யம் பெருகுமாம்.

சிங்கம் மற்றும் புலி – நம்முடைய கனவில் சிங்கம் மற்றும் புலி வந்தால் அதாவது சிங்கம், புலி போன்ற வீரமான விலங்குகளை நாம் வேட்டையாடி ஜெயிப்பது போல் கனவு வந்தால் நமக்கு வரும் எதிர்ப்புகளை முறியடித்து வெல்வோம் என்று அர்த்தம்.

கிளி- நம்முடைய கனவில் கிளி வந்தால் கனவில் வந்தால், அதாவது கிளிகள் பறந்து மரம் விட்டு மரம் செல்வதை போல உங்களுக்கு கனவு வந்தால் பழைய நண்பர்களை சந்தித்து உரையாடுவோம் என அர்த்தம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *