இந்த இடத்தில் விநாயகர் சிலை இருந்தால் துரதிர்ஷ்டமாம்..! எந்த திசையில் வைத்து வழிபட்டால் பலன்கள் தெரியுமா !!

ஆன்மீகம்

விநாயகப் பெருமானின் பக்தர்கள் அவரது சிலையை வீடுகளில் வைப்பது வழக்கமான ஒன்றுதான்.
ஆனால் பெரும்பாலான மக்களுக்கு விநாயகர் சிலையை எந்த இடத்தில் வைக்க வேண்டுமென்று தெரிவதில்லை. சரியான இடத்தில் விநாயகர் சிலையை வைத்து வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் அமைதியையும், அதிர்ஷ்டத்தையும் கொண்டுவரும். வாஸ்து அடிப்படையில் உங்கள் வீட்டில் எந்த இடத்தில் வைத்து விநாயகரை வழிபட வேண்டும் என்று இந்த பதிவில் பார்க்கலாம். எந்த திசையில் வைக்கலாம்? -விநாயகர் சிலையை வீட்டின் கிழக்கு அல்லது மேற்கு திசைகளில் எளிதில் தெரியும் வகையில் வைக்கலாம். இவ்வாறு வைப்பது உங்கள் வீட்டிற்குள் அதிர்ஷ்டத்தை அழைத்து வரும்.

விநாயகர் சிலை எந்த திசையில் வைக்கக்கூடாது? -வீட்டின் தெற்கு திசையில் விநாயகர் சிலையை ஒருபோதும் வைக்காதீர்கள். விநாயகர் சிலையை கழிவறைக்கு அருகில் அல்லது குளியலறையுடன் இணைக்கப்பட்டிருக்கும் சுவர் அருகிலும் வைக்கக்கூடாது, ஏனெனில் குளியலறையிலிருந்து வெளிவரும் எதிர்மறை ஆற்றல்களை பூஜை அறையின் நேர்மறை சூழலுக்கு பாதகத்தை ஏற்படுத்தும்.

விநாயகர் சிலை எந்த இடத்தில் வைக்கக்கூடாது? -மாடிப்படிக்கு அடியில் சிலையை ஒருபோதும் வைக்க்கூடாது, ஏனென்றால் மக்கள் படிக்கட்டுகளில் நடந்து செல்வார்கள் மற்றும் மக்கள் தங்கள் தலைக்கு மேல் மிதிப்பதை யாரும் விரும்பமாட்டார்கள்.

விநாயகர் சிலை படுக்கையறையில் வைக்கலாமா? -படுக்கையறையில் விநாயகர் சிலையை வைப்பது நல்லதல்ல, ஆனால் வேறு வழியில்லை என்றால், அறையின் வடகிழக்கு மூலையில் சிலைகளை வைக்கவும், நீங்கள் தூங்கும்போது, அந்த மூலையில் வைக்கப்பட்டுள்ள சிலைகளை நோக்கி நீங்கள் கால்களை நீட்டக்கூடாது.

நீங்களாகவே செய்த விநாயகர் சிலை – நீங்களாகவே உருவாக்கிய விநாயகர் சிலையையும் வழிபடலாம். இதுபோன்ற சிலையை வணங்கினால் உங்கள் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும். ஆனால், ஜாக்கிரதை; சிலை செய்யும் போது எந்த அசுத்தமான பொருளையும் பயன்படுத்த வேண்டாம். இது பாதகமான விளைவை ஏற்படுத்தும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *