விநாயகரை எந்த திசையில் வணங்கினால் வீட்டில் செல்வம் பெருகும் !! சர்வ வல்லமை படைத்த விநாயகரின் அதிஷ்ட பலங்ககள் !!

ஆன்மீகம்

தற்போது மக்களிடையே கடவுள் பக்தியும், ஜோதிட நம்பிக்கையும் சற்று அதிகரித்துள்ளது. ஒவ்வொரு நாளும் கிரகங்களின் நிலை மாறும். இப்படி தினமும் மாறும் கிரகங்களின் சஞ்சாரங்களால் ஒவ்வொரு ராசிக்காரரின் பலனும் அன்றாடம் மாறுபடும். இதனால் தான் தற்போது பலர் எந்த ஒரு செயலை செய்வதற்கு முன்பும் ஜோதிடர்களை சந்தித்து, தங்களது ஜாதகங்களைக் கொடுத்து நல்ல காலமா என்பதைப் பார்க்கிறார்கள். மேலும், ஜோதிடர்கள் தங்களுக்கு சாதகமாக என்ன கூறினாலும் அதை செய்யவும் தயாராக உள்ளனர். இது சிலருக்கு பொருந்தும், சிலருக்கு பொருந்தாமலும் இருக்கும். எந்த விடயங்களையும் முழு நம்பிக்கையுடன் செய்தால் வெற்றி நிச்சயம்.

விநாயகரை வாஸ்து சாஸ்திரத்தின்படி நம் வீட்டில் வைத்து வணங்கினால் அவரின் அருள் நமக்கு கிடைப்பதுடன், நம் வீட்டில் செல்வம் பெருகும். விநாயகரை எந்த திசையில் வைப்பது அதிர்ஷ்டம்? விநாயகரின் தும்பிக்கையானது எப்போதும் இடது புறமுள்ள அவரின் தாயார் கௌரியை பார்த்தவாறு வைத்து வணங்கினால் அதிர்ஷ்டம் கிடைக்கும். விநாயகரின் பின்புறம் வறுமையை குறிக்கும்.

எனவே விநாயகரின் பின்புறம் வீட்டின் எந்தவொரு அறையினையும் பார்த்தவாறு வைக்காமல், வீட்டின் வெளிப் புறத்தினை பார்த்தவாறு வைக்க வேண்டும். விநாயகரை தென்புற திசையில் வைத்து வணங்கக் கூடாது, கிழக்கு அல்லது மேற்கு திசையில் வைத்து வணங்கினால் வீட்டின் செல்வம் அதிகரிக்கும். கழிவறையுடன் இணைக்கப்பட்டுள்ள சுவரை நோக்கி விநாயகரின் சிலையை வைக்கக் கூடாது.

அதேபோல அந்த சுவரில் சாய்த்தும் வைக்கக் கூடாது.உலோகத்தில் செய்யப்பட்ட விநாயகரின் சிலையை கிழக்கு அல்லது மேற்கு திசையினை நோக்கி வைத்து வணங்க வேண்டும். அதுவும் வடகிழக்கு மூலையில் வைத்து வணங்குவது மிகவும் நல்லது.

வீட்டிற்குள் மாடிப்படி இருந்தால் அதன் அடியில் விநாயகரை வைக்கக் கூடாது, ஏனெனில் அது துரதிர்ஷ்டத்தை உண்டாக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *