கண்டச்சனி காலம் என்றாலும் கவலை வேண்டாம் !! அஷ்டமச்சனியிலிருந்து பாதிப்பை குறைத்துகொள்ள யாரை வழிபட வேண்டும் தெரியுமா !!

ஆன்மீகம்

ஒவ்வொரு நாளும் கிரகங்களின் நிலை மாறும். இப்படி தினமும் மாறும் கிரகங்களின் சஞ்சாரங்களால் ஒவ்வொரு ராசிக்காரரின் பலனும் அன்றாடம் மாறுபடும். தினசரி ராசிப்பலன்கள் மூலம் நீங்கள் எந்த மாதிரியான சவால்களை எதிர்கொள்வீர்கள் என்பதை தெரிந்துகொள்ள முடியும். உங்கள் வாழ்க்கை ஏற்பட போகும் அனைத்து வகையான கேள்விகளுக்குமான விடை இங்கு கிடைக்கும். அந்த வகையில், இன்று நீங்கள் சந்திக்கவிருக்கும் வாய்ப்புகள் மற்றும் சவால்கள் என்னவென்று உங்களுக்குத் தெரியாவிட்டால் உடனே அறிந்துகொள்ளுங்கள். தற்போது மக்களிடையே கடவுள் பக்தியும், ஜோதிட நம்பிக்கையும் சற்று அதிகரித்துள்ளது. இதனால் தான் தற்போது பலர் எந்த ஒரு செயலை செய்வதற்கு முன்பும் ஜோதிடர்களை சந்தித்து, தங்களது ஜாதகங்களைக் கொடுத்து நல்ல காலமா என்பதைப் பார்க்கிறார்கள்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு பொருளாதாரத்தில் ஏற்றம் தரக்கூடிய ஆண்டாக அமையப்போகிறது. திரைகடல் ஓடி திரவியங்கள் தேடி நிறைய சம்பாதித்து ,பேரும் புகழும் கிடைக்கப் பெறுவீர்கள். சமுதாயத்தில் உங்கள் அந்தஸ்தும்,மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். உங்கள் பொருளாதாரமும் முன்னேற்றமடையப்போகிறது. சனிபகவான் பத்தாம் வீட்டில் குரு உடன் இணைந்துள்ளார். இந்த கிரகங்களின் சேர்க்கை உங்களுக்கு அற்புதமான பலன்களைத் தரப்போகிறது. அயல்நாட்டு வியாபாரம் சூடுபிடிக்கும். வருமானமும் அதிகரிக்கும். வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு கிடைக்கும். படித்து விட்டு அரசு வேலைக்காக எதிர்பார்த்துக்கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். ஏப்ரல் மாதம் நிகழப்போகும் அதிசார குரு பெயர்ச்சியும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள கும்ப ராசிக்கு நேரடியாக நிகழப்போகும் குரு பெயர்ச்சி சில சாதகமான பலன்களை தரப்போகிறது. வெளிநாடு செல்ல வேண்டும் என்று நீண்ட காலமாகவே நினைத்திருந்தவர்களின் கனவு நனவாகப் போகிறது.

ரிஷபம்
சுக்கிரனை ராசி நாதனாகக் கொண்ட ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இது அஷ்டம சனிக்காலம். 2021ஆம் ஆண்டு முழுவதும் சனிபகவான் ஒன்பதாம் வீட்டில்தான் குடியிருக்கிறார்.தற்போது குரு ஒன்பதாம் வீட்டில் அமர்ந்து உள்ளார். பாக்கியங்கள் நிறைந்த ஆண்டாக அமையப்போகிறது. ஆன்மீக சுற்றுலா செல்வீர்கள்.அரசு வேலைக்கு முயற்சி செய்யலாம். வெளியூர், வெளிநாடுகளில் வேலைக்கு முயற்சி செய்யலாம். மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் தேடி வருகிறது.ராகு ஜென்ம ராசியில் அமர்வதால் திருநாகேஸ்வரம், திருப்பாம்புரம் சென்று ராகு,கேதுக்களுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடலாம்.அருகில் உள்ள புற்றுக்கோவிலுக்கு சென்று வர ராகு ,கேதுவால் வரக்கூடிய தோஷங்கள் விலகும். பெருமாளுக்கு துளசிமாலை அணிவித்து புளியோதரை படைத்து வணங்கலாம்.

மிதுனம்
புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மிதுன ராசிக்காரர்களே, இந்த காலங்களில் புதிய தொழில் முயற்சிகள் வேண்டாம். பேராசை படவேண்டாம்.அகலக்கால் வைப்பது ஆபத்து. கல்வியில் இருந்த மந்த நிலை விலகி முன்னேற்றம் உண்டாகும். நல்ல மதிப்பெண்கள் பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டுதல்களை பெற முடியும்.விளையாட்டுத்தனமாக இல்லாமல் படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது. அஷ்டமச்சனியிலிருந்து பாதிப்பை குறைத்து கொள்ள காலபைரவரை சனிக்கிழமை தோறும் சென்று வழிபட்டு வரலாம். சனியின் குருநாதர் இந்த காலபைரவர். ஆஞ்சநேயருக்கும் சனிக்கிழமை தோறும் நெய்விளக்கு போட்டு வர சனியால் வரக்கூடிய அத்துனை தொல்லைகளையும் விலக்க முடியும்.

கடகம்
சந்திரனை ஆட்சி நாதனாகக் கொண்ட கடக ராசிக்காரர்களே, அலுவலகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு என கொண்டாட்டமான, குதூகலமான ஆண்டாகவே 2021 ஆம் ஆண்டு இருக்க போகின்றது. ஆண்டுகிரகங்களான ராகு, கேது,சனி,குரு போன்ற கிரகங்கள் உங்களுக்கு சாதகமான நற்பலன்களை தர காத்திருக்கின்றன. கண்டச்சனி காலம் என்றாலும் கவலை வேண்டாம். பிறக்கப் போகும் புத்தாண்டு ஒரு பொற்காலமாக அமையப்போகிறது. படித்து விட்டு வேலை தேடிக்கொண்டிருந்தவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். சிலருக்கு நல்ல சம்பளத்துடன் கூடிய பதவி உயர்வும் கிடைக்கும். உங்களின் சமூக அந்தஸ்தும் மதிப்பும் மரியாதையும் உயரும். பொருளாதார உயரும். அலுவலகத்தில் மேல் அதிகாரிகளின் ஆதரவும் பாராட்டும் மனதிற்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும். சிலர் எதிர்பார்த்து காத்திருந்த இடமாற்றமும் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *