இன்று எ திர்பா ராத அதிர்ஷ்டத்தை பெறும் ராசி யார் யார் தெரியுமா !! இன்றைய நாளுக்கான முழு ராசிபலன் !!

ஆன்மீகம்

பிலவ ஆண்டு – ஆவணி 5 – சனிக்கிழமை (21.08.2021) நட்சத்திரம் : திருவோணம் 08:21 PM வரை பிறகு அவிட்டம் திதி : 07:00 PM வரை சதுர்தசி பின்னர் பௌர்ணமி யோகம் : சித்த யோகம் நல்லநேரம் : காலை 7.45 – 8.45 / 4.45 – 5.45 சனிக்கிழமை – சுப ஓரை விவரங்கள் (காலை 7 முதல் 7 1/2, 10 1/2 முதல் 12 வரை, பகல் 12 முதல் 1 வரை, 5 முதல் 6 வரை, இரவு 6 முதல் 7 1/2 வரை, 9 முதல் 10 வரை) சுபகாரியங்கள் : ஆயுதம் பழக, யாத்திரை போக, வார்படஞ் செய்ய, சுபம் பேச சிறந்த நாள், ஒவ்வொரு நாளும் கிரகங்களின் நிலை மாறும். இப்படி தினமும் மாறும் கிரகங்களின் சஞ்சாரங்களால் ஒவ்வொரு ராசிக்காரரின் பலனும் அன்றாடம் மாறுபடும். ராசிப்பலனைப் பார்த்து அறிந்துகொள்ளுங்கள்.

மேஷம்
சிறப்பான நாளாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். இலக்குகளை எளிதாக அடைவீர்கள். வேலை சூழல் திருப்திகரமாக இருக்கும். சுறுசுறுப்பாக வேலையை முடிப்பீர்கள். குடும்பத்தில் நட்புறவு நிலவும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது.

ரிஷபம்
சுமாரான நாளாக இருக்கும். புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி எதிர்கொள்வது நல்லது. நிதானத்தை கடைப்பிடிப்பது அவசியம். வேலை சூழல் சாதகமாக இருக்காது. வேலையில் தவறுகள் ஏற்படலாம். உயர் அதிகாரியுடன் மோதல் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே கருத்துவேறுபாடு ஏற்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. சேமிப்பு குறையும்.

மிதுனம்
சாதகமான நாளாக இருக்காது. ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவதன் மூலம் நிவாரணம் பெறலாம். வேலை சூழல் கடினமாக இருக்கும். வேலையில் தவறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதியின்மை நிலவும். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். நிதி நிலை எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது. பண இழப்புக்கு வாய்ப்பு உள்ளது.

கடகம்
நம்பிக்கையான நாளாக இருக்கும். இலக்குகளை உறுதியுடன் எதிர்கொள்வீர்கள். புத்துணர்வுடன் வேலையை எதிர்கொள்வீர்கள். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் அன்பான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் ஏற்படும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது.

சிம்மம்
வளமான நாளாக இருக்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சிறிது முயற்சி செய்தாலே வெற்றி பெறுவீர்கள். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். உற்சாகத்துடன் வேலையை முடிப்பீர்கள். குடும்பத்தில் நல்லுறவு நிலவும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். உழைப்புக்கு ஏற்ற பலனைப் பெறுவீர்கள்.

கன்னி
சுமாரான நாளாக இருக்கும். மனதில் கவலை, பாதுகாப்பின்மை போன்ற எதிர்மறை உணர்வுகள் அதிகரிக்கும். வேலைப் பளு அதிகரிக்கும். கூடுதல் பொறுப்புக்கள் தேடி வரும். உடன் பணி புரிபவர்கள் ஆதரவு கிடைக்காது. குடும்பத்தில் மகிழ்ச்சி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே உறவு நிலை பாதிக்கப்படலாம். பணப் பற்றாக்குறை ஏற்படும்.

துலாம்
முன்னேற்றமான நாளாக இருக்கும். இருப்பினும் மனதில் எழும் அதீத உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது நல்லது. வேலைப் பளு அதிகரிக்கும். உடன் பணி புரிபவர்களுடன் நட்புறவைப் பராமரிப்பது நல்லது. குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே நட்புறவு அதிகரிக்கும். ஓரளவுக்கு பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. செலவும் அதிகரிக்கும்.

விருச்சிகம்
வெற்றிகரமான நாளாக இருக்கும். மனதில் உற்சாகம், மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலை சூழல் முன்னேற்றமாக இருக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தில் அன்பான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே நல்ல புரிந்துணர்வு ஏற்படும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. சேமிப்பு அதிகரிக்கும்.

தனுசு
தாமதங்கள் காணப்படும். நிதானத்துடன் எதையும் அணுக வேண்டும். வேலைப் பளு அதிகரிக்கும். உடன் பணி புரிபவர்களுடன் மோதல் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே இடைவெளி அதிகரிப்பதைத் தவிர்க்க விட்டுக்கொடுப்பது நல்லது. செலவுகள் அதிகரிக்கும். நிதி நிலை கவலையை ஏற்படுத்தும்.

மகரம்
சாதகமான நாளாக இருக்காது. எதிர்மறை விளைவுகளைத் தவிர்க்க கவனத்துடன் இருக்க வேண்டும். வேலை, தொழில் சூழல் சாதகமாக இருக்காது. வேலைப் பளு அதிகரிக்கும். மேலும் வேலையில் தவறுகள் ஏற்படலாம். உங்களின் அதீத உணர்ச்சி பெருக்கு காரணமாக குடும்பத்தில் இனிமையான சூழல் பாதிக்கப்படலாம். மனம் திறந்து பேசுவது நல்லது. பண இழப்புக்கு வாய்ப்பு உள்ளது.

கும்பம்
எதிர்பார்ப்பு நிறைவேறும் நாளாக இருக்காது. எனவே, எதையும் லேசாக எடுத்துக்கொள்ள வேண்டும். வேலை சூழல் விரும்பத்தகாததாக இருக்கும். வேலையை கண்ணும் கருத்துமாக செய்வது நல்லது. குடும்பத்தில் அமைதி குறைவு ஏற்படலாம். மற்றவர்களுடன் பேசும் போது கவனமாக பேசுங்கள். செலவுகள் அதிகரிக்கும். சேமிப்பு குறையும்.

மீனம்
உற்சாகமான நாளாக இருக்கும். திறம்படச் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் இனிமையான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *