இந்த கொடிய நோ ய்க்கு மருந்தே தேவை இல்லை! மாதுளை ஜூஸ் மட்டுமே போதும்? இவ்வளவு அற்புதமா?

மருத்துவம்

மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான ஒரு பழச்சாறு தான் மாதுளை ஜூஸ். மாதுளை அனைத்து காலங்களிலும் கிடைக்கும் ஒரு அற்புதமான பழம். இந்த மாதுளை ஜூஸ் பல்வேறு நோய்களை குணப்படுத்தவும், தடுக்கவும் செய்யும். சமீபத்தில் மாதுளை ஜூஸ் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இந்த ஜூஸில் உள்ள ஏராளமான ஊட்டச்சத்துக்கள், க்ரீன் டீயை விட ஆரோக்கியமானதாக்குவதாக தெரிய வந்துள்ளது. இனி மாதுளை ஜூஸைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று காண்போம்.

மாதுளை ஜூஸ் பயன்கள்..!Pomegranate Benefits in Tamil..!

 • மாதுளை ஜூஸ் புற்றுநோய் செல்களின் உற்பத்தியை முடக்கிவிடும். பல்வேறு ஆய்வுகளில் மாதுளை ஜூஸை தொடர்ந்து ஒருவர் குடித்து வந்தால், புற்றுநோயின் அபாயம் குறைவதாக தெரிய வந்துள்ளது.
 • மாதுளை ஜூஸ் இதய ஆரோக்கியத்தைப் பராமரிக்கும்.
 • இது இதய நோயின் அபாயத்தைக் குறைக்கும். மாதுளை ஜூஸைக் குடித்து வந்தால், அது இரத்த அழுத்தத்தைக் குறைப்பதோடு, இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பைத் தடுப்பதோடு சரிசெய்யும்.
மாதுளை ஜூஸ் பயன்கள்..! - தமிழ்க் குரல்

 • மாதுளை ஜூஸ் சர்க்கரை நோயை எதிர்க்கும். பொதுவாக சர்க்கரை நோயாளிகள் பழங்களை அதிகம் சாப்பிட பரிந்துரைக்கப்படுவதில்லை.
 • ஆனால் இந்த பழத்தால் தயாரிக்கப்படும் ஜூஸைக் குடித்தால், அது இரத்த சர்க்கரை அளவு மற்றும் கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதோடு, டைப்-2 சர்க்கரை நோயின் அறிகுறிகளையும் தடுக்கும்.
 • மாதுளை ஜூஸில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது சருமத்தை ஆரோக்கியமாகவும், இளமையுடனும் வைத்துக் கொள்ள உதவும்.
மாதுளையின் மகத்தான மருத்துவ குணங்கள் - Lankasri News

 • இந்த ஜூஸில் உள்ள ஆன்டி-ஏஜிங் பண்புகள், முதுமை செயல்முறையைத் தாமதப்படுத்தும். இந்த ஜூஸை ஒருவர் தினமும் குடித்து வந்தால், சரும சுருக்கம் தடுக்கப்படுவதோடு, புதிய செல்களைப் புதுப்பித்து, பல்வேறு சரும தொற்றுகள் மற்றும் நோய்களும் தடுக்கப்படும். மேலும் இது பிம்பிள், பருக்கள் மற்றும் சரும வறட்சியைத் தடுக்கும்.
 • மாதுளை ஜூஸைக் குடித்தால், அது அடர்த்தியான மற்றும் ஆரோக்கியமான தலைமுடிக்கு உதவும். இந்த ஜூஸை தலைமுடி அதிகம் உதிரும் பிரச்சனை உள்ளவர்கள் குடித்து வந்தால், இது மயிர்கால்களை வலிமையாக்கி, தலைமுடி உதிர்வதைத் தடுக்கும்.
maathulayin nanmaikal: மாதுளம்பழம் பற்றி உங்களுக்கு தெரிந்ததும் தெரியாததும்... இனியாவது இதெல்லாம் தெரிஞ்சிக்கங்க... - impressive health benefits of pomegranate juice in ...

 • மேலும் இந்த ஜூஸ் தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிப்பதோடு, ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.
 • மாதுளை ஜூஸில் உள்ள தனித்துவமான பண்புகள், பற்களில் ப்ளேக் உருவாக்கத்தைத் தடுத்து, பற்களை ஆரோக்கியமாகவும், வலிமையுடனும் வைத்துக் கொள்ளும்.
 • எனவே உங்கள் பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த நினைத்தால், மாதுளை ஜூஸை தினமும் குடியுங்கள்.
 • மாதுளை ஜூஸ் நோயெதிர்ப்பு சக்தியை அளவை அதிகரிக்கும். இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், உடலைத் தாக்கும் நோய்களை எதிர்த்துப் போராடும்.
ஆரோக்கியம் தரும் மாதுளை ஜூஸ்

 • முக்கியமாக இதில் உள்ள வைட்டமின் சி, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தும்.
 • மாதுளை ஜூஸில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது ஆரோக்கியமான செரிமான செயல்பாட்டிற்கு உதவும். மாதுளை ஜூஸில் ஒரு நாளைக்கு உடலுக்குத் தேவையான நார்ச்சத்து நிறைந்துள்ளதால், உடலில் நார்ச்சத்து குறைபாட்டினால் ஏற்படும் பிரச்சனைகள் அனைத்தும் தடுக்கப்படும்.
தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடிப்பது…! – 5௦௦௦+ தமிழ் குறிப்புக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *