புதனால் பே ரா ப த்தில் சி க்கபோகும் 5 ராசிகள் யார் யார் தெரியுமா? இந்த ஐந்து ராசியினரும் க வன மாக இருங்கள் பே ரி ழப்பு கூட நிகழுமாம் !!

ஆன்மீகம்

நவகிரகங்களில் இளவரசன் என அழைக்கப்படும் புதன் பகவான் 26 ஆகஸ்ட் 2021 அன்று தனது சொந்த வீடான கன்னி ராசியில் சஞ்சாரம் செய்ய உள்ளார். இவர் செப்டம்பர் 22ம் தேதி வரை கன்னியில் இருப்பார்.கோசார ரீதியாக தற்போது புதன் தனது சொந்த ராசியான கன்னியில் சஞ்சாரம் செய்வதால் 5 ராசியினர் சற்று எ ச் ச ரிக் கையாக இருக்க வேண்டும். தற்போது மக்களிடையே கடவுள் பக்தியும், ஜோதிட நம்பிக்கையும் சற்று அதிகரித்துள்ளது. இதனால் தான் தற்போது பலர் எந்த ஒரு செயலை செய்வதற்கு முன்பும் ஜோதிடர்களை சந்தித்து, தங்களது ஜாதகங்களைக் கொடுத்து இது நல்ல காலம் தானே என்பதைப் பார்க்கிறார்கள். இது சிலருக்கு பொருந்தும், சிலருக்கு பொருந்தாமலும் இருக்கும். எந்த விடயங்களையும் முழு நம்பிக்கையுடன் செய்தால் வெற்றி நிச்சயம்.

மேஷம்
மேஷ ராசிக்கு 6ம் இடமான நோய், எதிரி ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்ய உள்ளார். கன்னியில் இருக்கக்கூடிய காலத்தில் அதிகமாக சிந்தித்து மன அமைதியை இழக்க வேண்டாம். திருமணமானவர்கள், பெண் வீட்டாரிடம் பேசும் போது கவனமாகப் பேசவும். திருமணமான பெண் பேச்சில் கவனம் தேவை. இல்லாவிட்டால் தேவையற்ற மன கசப்பு, உறவில் பிளவு ஏற்படும். பணியிடத்தில் இருக்கும் அரசியலிலிருந்து விலகி இருக்க வேண்டியது அவசியம்.

​கடகம்
கன்னியில் புதன் இருப்பது உங்களுக்கு சில வகையில் சாதகமானதாக இருக்கும். ஆனாலும், இந்த காலத்தில் உங்களின் அதிகப்படியான பேச்சினால் சமூகத்தில் உங்கள் மீதான மரியாதையை இழக்க நேரிடும்.உங்களின் பகுத்தறிவு அதிகரிக்கும். தேவையென்றால் மட்டும் பேசவும். முடிந்த வரை பேச்சை குறைக்கவும். கோபத்தில் எந்த ஒரு முடிவையும் எடுப்பதால் உங்களுக்கு ஆபத்தை மட்டும் தான் விளைவிக்கும். வணிகர்களுக்கு மற்றும் மாணவர்களுக்கு இந்த பெயர்ச்சி காலம் சாதகமானதாக இருக்கும்.

துலாம்
உங்கள் ராசிக்கு 12ம் இடமான விரய, மோட்ச ஸ்தானத்தில் புதனின் சஞ்சாரம் இருப்பதால் உங்களின் பணப்பரிவர்த்தனையில் சில எதிர்மறையான முடிவுகளைத் தரும். அதனால் பெரியளவிலான பணப்பரிவர்த்தனைகளைத் தவிர்க்கவும். உங்களின் நம்பிக்கைக்குரியவர்களை உங்களுடன் வைத்திருங்கள். அவசரப்பட்டு எடுக்கக்கூடிய முடிவுகள் ப்சில மோசமான பலன்களை விளைவிக்கும். வெளிநாடு தொடர்பான வேலை, நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் தங்கள் எதிரிகளிடம் எ ச் சரி க்கையாக இருக்கவும்.

​கும்பம்
உங்கள் ராசிக்கு 8ம் இடமான ஆயுள், துஸ் ஸ்தானத்தில் புதனின் சஞ்சாரம் நிகழ உள்ளதால் உங்கள் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். தோல் நோய், தூசி ஒவ்வாமை போன்றவை அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது. தூசி அதிகம் பறக்கக்கூடிய இடத்திற்குச் செல்லாமல் இருப்பது அவசியம். மன அமைதியைக்காக்கவும். யோகா, தியானம் ஆகியவை உங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

​மீனம்
இந்த புதனின் பெயர்ச்சி உங்களுக்கு சில பயனுள்ள விஷயங்கள் இருக்கும். உங்கள் ராசிக்கு 7ம் இடத்தில் புதன் இருப்பதால் உங்களின் வாழ்க்கைத் துணையுடனான அன்பு, அந்நியோன்யம் அதிகரிக்கும். கூட்டு தொழில் நல்ல பலன் தரும். இருப்பினும் குடும்பமாக இருந்தாலும், பணியிடமாக இருந்தாலும் உங்களின் பேச்சைக் குறைக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *