ஜோதிடத்தின் படி அதிகமாக நேர்மையானவர்களாக இருக்கும் ராசிகள் !! இவர்களை மட்டும் சந்தேகப்படவே கூடாதாம் !!

ஆன்மீகம்

எந்த விடயங்களையும் முழுநம்பிக்கையுடன் செய்தால் வெற்றி நிச்சயம். தற்போது மக்களிடையே கடவுள் பக்தியும், ஜோதிட நம்பிக்கையும் சற்று அதிகரித்துள்ளது. இதனால் தான் தற்போது பலர் எந்த ஒரு செயலை செய்வதற்கு முன்பும் ஜோதிடர்களை சந்தித்து, தங்களது ஜாதகங்களைக் கொடுத்து இதுநல்ல காலம் தானே என்பதைப்பார்க்கிறார்கள். மேலும், ஜோதிடர்கள் தங்களுக்கு சாதகமாக என்ன கூறினாலும் அதை செய்யவும் தயாராக உள்ளனர். இது சிலருக்கு பொருந்தும், சிலருக்கு பொருந்தாமலும் இருக்கும். எந்தவொரு உறவின் அடிப்படையையும் வலுப்படுத்தும் முக்கிய காரணம் நேர்மை. ஒருவர் தனது குடும்ப உறுப்பினர்கள், துணை, தன் காதல் அல்லது பணியிடத்தில் என எதுவாக இருந்தாலும் நேர்மையானவராக இருந்தால் எப்போதும் போற்றப்படுபவராகவும். எந்த ஒரு உறவின் பிணைப்பிற்கும் நேர்மைதான் மிகவும் முக்கியம். எந்தராசியினர் அதிகமாக நேர்மையாளராக இருப்பார்கள் என்பதை இங்கு பார்ப்போம்.

தனுசு
நேர்மையாளர்களின் வரிசையில் முதலில் இருப்பது குரு பகவான் ராசிநாதனாகக் கொண்ட தனுசு ராசியினர் என்று கூறலாம். இவர்கள் எந்த ஒரு சூழலிலும், தன் உறவு, நண்பர் என பார்க்காமல் அவர்களிடம் இருக்கும் தீங்கான குணம், மோசமான செயல் ஆகியவற்றை வெளிப்படையாக தெரிவிக்கக்கூடியவர்கள். அது பெரும்பாலும் மற்றவர்களை தீங்கு விளைவிப்பதில்லை. இவர்களின் வெளிப்படையான கருத்து அவர்கள் மீதான நம்பிக்கை ஏற்படுத்தும். அவர்களின் நேர்மை அவர்களுக்கு தைரியம் தருவதாக இருக்கும்.

கன்னி
கன்னி ராசியினர் பரிபூரண வாதிகள் எனலாம். இவர்கள் எந்த விஷயத்திலும் நியாயப்படுத்திப் பேசாமல், அதில் உள்ள உண்மை, குறைகள் என்ன என வெளிப்படையாகத் தெரிவிப்பார்கள். தான் தவறு செய்திருந்தாலும் அதற்காக இனிப்பாகப் பேசி அதிலிருந்து விடுபடாமல், தவறை ஒப்புக் கொள்ளவும் தயங்கமாட்டார்கள்.

சிம்மம்
சிம்ம ராசியினர் மற்றவர்களின் உணர்வுகளை வேண்டுமென்றே புண்படுத்த விரும்பாதவர்கள். அதே சமயம் எந்த தவறையும் நியாயப்படுத்தக்கூடியவர்கள் அல்ல. இவர்களுக்கு போலியான பாராட்டுகளை விரும்பாதவர்கள். மற்றவர்களின் பாராட்டுக்காகப் போலியான விஷயங்களுக்காக உண்மையை மறைக்க மாட்டார்கள்.

மேஷம்
மேஷ ராசியினர் தங்களின் அன்புக்குரியவர்களை சிறப்பாக கவனித்துக் கொள்வார்கள். அதே சமயம் மற்றவர்கள் கடிந்து கொள்வார்கள் என்று எல்லாம் பாராமல் எப்போதும் உண்மையைச் சொல்ல தயங்கமாட்டார்கள். இவர்கள் போலியாக இருப்பதை விட, அன்புக்குரியவரிடம் சில கடுமையான வார்த்தையைப் பெற தயங்குவதில்லை.

மகரம்
மகர ராசியினருக்கு மற்றவர்கள் நேர்மையாக இருக்க வேண்டும் என விரும்புவதோடு, தான் நேர்மையாக இருக்கவும் மிகவும் பிடிக்கும். மற்றவர்களைக் காயப்படுத்தும் நோக்கம் அவர்களுக்கு இல்லை. ஆனால் உணர்வுகளை மறைத்துப் பொய் சொல்வது இவர்களுக்கு பிடிக்காது. எனவே, உண்மையை சொல்வதும், அதன் படி நடக்கவும் செய்வார்கள். மகர ராசியினர் பொய் சொல்வது பெரும்பாலும் உறவில் குழப்பத்தை உருவாக்கும். எனவே, நேர்மையாக இருப்பது நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *