மாதுளையை இந்த விதமாக பயன்படுத்தினால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

மருத்துவம்

மாதுளம் பழம் பொதுவாக எல்லோராலும் விரும்பி சாப்பிடப்படும் ஒரு வகை பழமாகும், மாதுளம் பலம் ஒரு ருசியான பலம் என்பதையும் தாண்டி அது ஒரு மருத்துவ குணங்கள் நிறைந்த பலம் என்பது நம்மில் எதனை பேருக்கு தெரியும். ஆனால் இந்த மாதுளம் பழம் அரிதாகவே கிடைக்க கூடிய பலவகை ஆகும். பொதுவாக இந்த மாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து, 25 கிராம் சர்க்கரை சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் சரியாகும்.

 

வறட்டு இருமலால் அவதிப்படுபவர்களுக்கு இது வரப்பிரசாதம் ஆகும். மாதுளம் பழம் மலச்சிக்கலைப் போக்கும். மாதுளம் பழம் எலும்புகளுக்கும், பற்களுக்கும் உறுதியை அளிக்கும் மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்குக் கொடுத்தால் பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கு நிவர்த்தியாகும்.

 

மாதுளம் பழம் பித்தம் தொடர்புடைய நோய்களை குணமாக்கும். மாதுளம் பூச்சாற்றை 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ரத்த மூலம் நீங்கும். மூலக் கடுப்பும், உடல் சூடும் தணியும். வாந்தி, மயக்கத்துக்குக் கொடுத்தால் அவை தீரும்.

 

மாதுளம் இலைச்சாறு, வயிற்றுப் போக்கைத் தீர்க்கும். மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக்கொண்டால் தலைவலி, வெப்பநோய் தீரும். மாதுளம் இலைகளை அரைத்துப் பசையாக்கி கண் மீது தடவினால் கண் நோய் குணமாகும்.

 

மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக்கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும். மாதுளையின் தண்டும், வேர்ப்பட்டையும் வயிற்றுப் புழுக்களுக்கு எதிரானது. தசையை இறுக்கும் தன்மை கொண்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *