சனி ஆளும் தனுசு ராசிக்கு காத்திருக்கு ராஜயோகம்… மகரம், கும்பம், மீன ராசிக்காரர்களின் முழு பலன்கள் என்னென்ன தெரியுமா !!

ஆன்மீகம்

தனுசு வார ராசிபலன் – தனுசு ராசி அன்பர்களே, இந்த வார ராசி பலன்படி, நீங்கள் திட்டமிட்ட செயல்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பண வரவு காரணமாக குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். வீடு கட்டுவது தொடர்பாக தற்சமயம் முயற்சிகள் எடுக்கலாம். உடன் பிறந்த சகோதர சகோதரிகள் வழியில் மனக்கசப்புகள் உண்டாகும். புதிய வீடு மனை வாங்கும் யோகம் உண்டு. நீங்கள் விரும்பியது போல் எல்லாம் நிறைவேறும். பூர்விக சொத்து வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். குடும்பத்தில் மனைவி வழியில் ஆதாயம் உண்டு. திருமண முயற்சிகள் கைகூடும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து போகவும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும். பரிகாரம் : குரு பகவானை வணங்கி வழிபடவும்.

மகரம் வார ராசிபலன்
மகர ராசி அன்பர்களே, இந்த வார ராசி பலன்படி, மனதில் நினைத்திருந்த காரியம் எதுவாக இருந்தாலும் அது விரைவில் நடக்கும். குடும்ப செலவுகள் அதிகமாக இருக்கும். மனதில் உள்ள தாழ்வு மனப்பான்மையை அகற்றவும்.குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் இனிதே நடைபெறும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்வர். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சிக்கனத்தைக் கடைப்பிடிப்பது அவசியம். உடன்பிறப்புகளால் செலவுகளும், விரயங்களும் ஏற்படலாம். மனதில் இருந்துவந்த பயம், பதற்றம் நீங்கும். வெளியுலகில் உங்கள் மதிப்பு, கௌரவம் கூடும். உத்தியோகத்தில் பெரியளவில் மாற்றம் வரும். தொழில், வியாபாரத்தில் புதிய முயற்சிகளைத் தள்ளி போ ட வும். பரிகாரம் : குலதெய்வத்தை முறையாக சென்று வழிபடவும்.

கும்பம் வார ராசிபலன்
கும்ப ராசி அன்பர்களே, இந்த வார ராசி பலன்படி, நண்பர்கள்,உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்பத்துடன் பல ஆன்மிக தலங்களுக்கு சென்று வருவீர்கள். கடுமையான முயற்சியின் பலனாக விரைவில் வசதி வாய்ப்புகள் கூட ஆரம்பிக்கும். உங்கள் பேச்சிலும் செயலிலும் சுறுசுறுப்பு அதிகம் இருக்கும். உடல் நலனில் அதிகப்படியான அக்கறை தேவை. உணவு விஷயத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்ளவும். முக்கிய நேரங்களில் அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. அயல்நாடு செல்லும் விருப்பம் நிறைவேறும். பயணங்கள் மூலம் நற்பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் எல்லோரையும் அரவணைத்துச் செல்லவும். கூட்டு, தொழில், வியாபாரம் சிறப்பாக நடக்கும். பரிகாரம் : பைரவரை வணங்கி வழிபடவும்.

மீனம் வார ராசிபலன்
மீன ராசி அன்பர்களே, இந்த வார ராசி பலன்படி, பல புதுமையான காரியங்களை செய்ய நினைப்பீர்கள். குடும்பத்தில் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேருவர். கணவன் மனைவி உறவுகளில் அன்பு பாசம் அதிகரிக்கும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் வந்து விலகும். பல புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்புண்டு. குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை இருக்கும். மனம் தியானம், யோகா போன்றவற்றில் கவனம் செல்லும். உத்தியோகத்தில் யாரை நம்புவது என்ற குழப்பம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும். பரிகாரம் : விநாயகரை அறுகம்புல் வைத்து வழிபடவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *