நமது வலது பக்க கண்கள் துடித்தால் என்ன அர்த்தம் தெரியுமா !! அறிவியல் கூறும் உண்மைகள் ! இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே !!

விந்தை உலகம்

நாம் காண்பதை ரசிப்பதற்கு நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் அதிசய உறுப்பு கண் ஆகும். கண் என்பது ஒவ்வொரு இனத்திற்கும் வேறுபடும். அதன் நிறம், வடிவமைப்பு, லென்சுகளின் அளவு ஆகியன மாறுபடும். கண் என்பது ஒளியை உணர்வதற்கு உதவும் ஒரு உறுப்பு ஆகும். வெளிப்புறத்தில் உள்ள பொருள்களின் அமைப்பு, நிறம் ஆகியவற்றினை கண்கள் மூலம் உணர்த்துகின்றன. ஒருவரின் கண்களை வைத்தே, அவரது மன ஓட்டத்தைப் புரிந்து கொள்ள முடியும். நமது கண்கள் வலது கண் துடித்தால் கெட்டது என்றும், இடது கண் துடித்தால் நல்லது என்றும் நம் மக்களைடையே பல கருத்துக்கள் பரவி வருகின்றது. சரி நமது வலது பக்க கண்கள் துடித்தால் என்ன அர்த்தம் தெரியுமா? வாங்க அதன் அர்த்தங்களை தெரிந்து கொள்ளலாம்.

 

ஆரோக்கியமின்மை
நம்முடைய வலது கண் துடித்தால் கெட்டது என்றும், இடது கண் துடித்தால் நல்லது என்று கூறுவது ஒரு புறம் இருந்தாலும் நமது கண்கள் துடிப்பதற்கு உடலின் ஆரோக்கியமின்மை கூட ஒரு குறைபாடுகளின் அறிகுறியாக இருக்கலாம். ஆகையால் கண்கள் துடிப்பது நல்லது என்று கூறிட முடியாது. அப்படியானால் கண்கள் துடிப்பது ஏன்?

 

மயோகீமியா
நம்முடைய கண்கள் துடிப்பதற்கு மயோகீமியா என்று மருத்துவ துறையில் கூறுவார்கள். அதாவது நம்முடைய உடம்பில் உள்ள புறநரம்புகளின் இயல்புக்கு மீறிய மிகையான தூண்டலின் காரணமாகவும் சில நேரங்களில் கண்களின் நரம்புகளும், அதனைச் சார்ந்த தசைகளும் துடிக்கும் இயல்புடையவைகள். அத்துடன்

 

எமது செயற்பாடுகள்
மன அழுத்தம், கண்கள் வறட்சி, அதிக நேரம் புத்தகம் படிப்பது, அதிக காபி குடிப்பது, குடிப்பழக்கம், சோர்வு, சரிவிகித சத்துக்களின் பற்றாக்குறை, அலர்ஜி, போன்ற பல செயல்பாடுகளின் காரணமாகவும் நமது கண்கள் துடிக்கும் இயல்பை உடையது. இதன் காரணங்களாலும் கண்களின் ஆரோக்கியத்தைக் குறைத்து கண் துடிப்புகளை அதிகமாக ஏற்படுத்துகின்றது.

 

மூளை தொடர்பான கோளாறுகள்
உங்களுக்கு மூளை தொடர்பான கோளாறாகவும் இருந்தாலும் இவ்வாறு நீண்ட நாள் கண் துடிப்பு மற்றும் வெட்டி இழுப்பது போன்ற பிரச்சனைகள் ஏற்படும்

கண் துடிப்பை தடுப்பது எப்படி?
கண் துடிப்பினை தடுக்க, கண்களுக்கு போதிய ஓய்வினைக் கொடுக்க வேண்டும். அதாவது நீங்கள் நன்றாக உறங்க வேண்டும் கண்களுக்கான போதிய ஓய்வை நாம் கொடுக்க வேண்டும் அத்துடன் கண்களுக்கு வெதுவெதுப்பான ஒத்தடம் கொடுத்தால், கண் நரம்புகளின் இறுக்கம் தளர்ந்து கண் துடிப்பது நிற்கும்.

 

கண்கள் துடிப்பதன் பலன்கள் என்ன?

வலது புருவம் – பணவரவு உண்டாகும். இடது புருவம் – குழந்தை பிறப்பு, கவலைகள் உண்டாகும். புருவத்தின் இடையில் – பிரியமானவருடன் இருத்தல். கண் நடுபாகம் – மனைவியை பிரிந்திருத்தல். வலது கண் துடித்தால் – நினைத்தது நடக்கும். இடது கண் துடித்தால் – மனைவியின் பிரிவு, கவலைகள் ஏற்படும். வலதுகண் இமை – மகிழ்ச்சியான செய்தி வரும். இடது கண் இமை – கவலைகள் உண்டாகும். வலது கண் கீழ் பாகம் – பழி சுமக்க நேரிடும். இடது கண் கீழ் பாகம் – செலவுகள் ஏற்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *