சனி பகவானின் தோஷத்தை நீக்க வேண்டுமா? அப்போ இதை மட்டும் தொடர்ந்து செய்யுங்கள் நல்ல பரிகாரம் கிடைக்குமாம் !!

ஆன்மீகம்

தற்போது மக்களிடையே கடவுள் பக்தியும், ஜோதிட நம்பிக்கையும் சற்று அதிகரித்துள்ளது. இதனால் தான் தற்போது பலர் எந்த ஒரு செயலை செய்வதற்கு முன்பும் ஜோதிடர்களை சந்தித்து, தங்களது ஜாதகங்களைக் கொடுத்து இது நல்ல காலம் தானே என்பதைப் பார்க்கிறார்கள். மேலும், ஜோதிடர்கள் தங்களுக்கு சாதகமாக என்ன கூறினாலும் அதை செய்யவும் தயாராக உள்ளனர். இது சிலருக்கு பொருந்தும், சிலருக்கு பொருந்தாமலும் இருக்கும். எந்த விடயங்களையும் முழு நம்பிக்கையுடன் செய்தால் வெற்றி நிச்சயம். அந்த வகையில் சனி பகவானின் தோஷத்தை நீக்க வேண்டுமா? அப்போ இதை மட்டும் தொடர்ந்து செய்யுங்கள் நல்ல பரிகாரம் கிடைக்குமாம்.

ஒரு மாதத்தில் வளர்பிறைக்காலத்தில் 14 திதிகளும், தேய்பிறைக் காலத்தில் 14 திதிகளும் என 28 நாட்கள் வருகிறது, மீதம் இரண்டு தினங்களில் ஒன்று அமாவாசை மற்றொன்று பௌர்ணமி என மொத்தம் 30 நாட்கள் என ஒரு மாதம் பூர்த்தியடைகிறது. இத்திதிகளில் அஷ்டமி திதியும் ஒன்று. இந்த அஷ்டமி திதி சந்திரனின் வளர்பிறை மற்றும் தேய்பிறைக் காலத்தில் எட்டாவது தினமாக வருகிறது.

பொதுவாக ஜோதிட மற்றும் எண் கணித சாஸ்திரம் படி 8 என்பது சனிபகவானின் ஆற்றல் கொண்ட ஒரு எண்ணாகும். புராண, இதிகாசங்களின் படி சனி பகவான் ஒரு நீதி தேவன், அதனால் எவர் ஒருவர் சிறிய அளவு தீவினையை புரிந்திருந்தாலும், அதற்கான த ண் ட னையை உடனே வழங்கி நீதியை நிலை நாட்டுபவர். இதன் காரணமாகவே சனிபகவானையும், அவரின் ஆற்றல் கொண்ட 8 ஆம் எண்ணையும் கண்டு பெரும்பாலானோர் க ல க்க ம் அடைகின்றனர். அப்படிப்பட்ட சனிபகவானின் தா க் க ம் இந்த அஷ்டமி திதியில் ஏற்படுகிறது.

பொதுவாக வளர்பிறை மற்றும் தேய்பிறைக் காலத்தில் வரும் எந்த ஒரு அஷ்டமி திதியிலும் சுபகாரியங்கள் செய்யப்படுவதில்லை. ஆனால் இறைவழிபாடுகள் செய்ய வளர்பிறை அஷ்டமி மற்றும் தேய்பிறை அஷ்டமி இரண்டுமே சிறப்பான நாட்களாகும். வளர்பிறை அஷ்டமியில் செல்வம் பெருக திருமாலின் இதயத்தில் வீற்றிருப்பவளான “லட்சுமியையும்”, தேய்பிறை அஷ்டமியில் சனி பகவானின் தோஷத்தை நீக்க “பைரவர்” வழிபாடும் செய்யலாம்.

அஷ்டமியில் பிறந்தவர்கள் குணாதிசயங்கள் : இத்திதியில் பிறந்தவர்கள் சாமர்த்தியசாலிகளாக இருப்பார்கள். பிறரின் துன்பம் கண்டு இரங்குபவர்களாக இருப்பார்கள். சுதந்திர உணர்வு அதிகமிருக்கும். நல்ல ஆரோக்கியமான உடல் மற்றும் மனதினைப் பெற்றிருப்பார்கள்.

அஷ்டமி திதியில் குழந்தை பிறப்பது நல்லதா? ஆவணி மாத அஷ்டமி திதியில் தான் “கிருஷ்ண பரமாத்மா” அவதரித்தார். அப்படி அவதரித்த கண்ணன் தன் சொந்த தாய்மாமனான கம்சனை வதம் புரிந்தார். இதன் காரணமாகவே பெரும்பாலானோர் தங்களுக்கு அஷ்டமி திதியில் பிறக்கும் ஆண் குழந்தையால், அக்குழந்தையின் தாய்மாமனுக்கு ஆகாதென்று அஞ்சுகின்றனர்.

முதலில் கண்ணன் ஒரு தெய்வ அவதாரம், நாம் மனித அவதாரம் என்ற எதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். மேலும் இப்படிப்பட்ட அமைப்பில் பிறந்த பெரும்பாலான குழந்தைகளால் அவர்களின் தாய்மாமன்களுக்கு எவ்வொரு பா தி ப் பும் ஏற்படாமல் அனைவரும் சுகமாகத் தான் வாழ்கிறார்கள்.

ஆதலால் அஷ்டமி திதியில் ஆண், பெண் என எந்த குழந்தைப் பிறந்தாலும் எவ்வித பா த க முமி ல்லை. அதையும் மீறி பா தி ப்பு ஏற்படுவதாக அஞ்சுபவர்கள் பெருமாள் கோவிலுக்குச் சென்று விஷ்ணு சஹஸ்ரநாமம் படித்து வர நலம் ஏற்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *