தீர்க்க முடியாத கடன் பிரச்சனை தீர்ந்து சந்தோசம் நிலைக்க வேண்டுமா? பைரவருக்கு 9 வாரங்கள் இந்த பரிகாரம் மட்டும் செய்யுங்க !!

ஆன்மீகம்

தற்போது மக்களிடையே கடவுள் பக்தியும், ஜோதிட நம்பிக்கையும் சற்று அதிகரித்துள்ளது. இதனால் தான் தற்போது பலர் எந்த ஒரு செயலை செய்வதற்கு முன்பும் ஜோதிடர்களை சந்தித்து, தங்களது ஜாதகங்களைக் கொடுத்து இது நல்ல காலம் தானே என்பதைப் பார்க்கிறார்கள்.இன்று பலரும் தனது அன்றாட வேலைகளில் ஈடுபடுவதற்கு முன்பு அன்றைய தினம் தனக்கு எவ்வாறு இருக்கப்போகின்றது என்ற கேள்வியுடன், அதனை தெரிந்து கொள்ளவும் அதிக அக்கறை காட்டி வருகின்றனர். பொதுவாக நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின்நகர்வு ஆகியவற்றை வைத்து ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்துகொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம்.

ஒருவரின் கிரக நிலை சரியாக இல்லை என்றாலும் கால நிலை சரியாக இல்லை என்றாலும் பைரவர் வழிபாடு மேற்கொள்வது மிகுந்த பலன்களைத் தரும். கடன் பிரச்சனை என்பது நமது உடலுக்கு மட்டுமல்ல மனதிற்கும் தெம்பு இல்லாமல் செய்து விடுகிறது. கடன் பிரச்சினையை எளிதில் தீர்க்கும் சக்தி பைரவருக்கு உண்டு. இதனால் கடன் பிரச்சினையைத் தீர்க்கும் பைரவர் பரிகாரத்தை எப்படி செய்வது என்று இந்த செய்தி குறிப்பில் காணலாம்.செவ்வாய் அல்லது வெள்ளிக் கிழமைகளில் இந்த பரிகாரத்தை நீங்கள் செய்ய ஆரம்பிக்கலாம்.

ஒரு சுத்தமான வெள்ளை நிற துணியில் 27 மிளகுகளை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதை சிறிய மூட்டை போல கட்டி உங்கள் பூஜை அறையில் வைத்து விடுங்கள். பின்னர் பைரவரை நினைத்து அவர்கள் மந்திரங்களை சொல்லியவாறு பிரார்த்தனை செய்து வாருங்கள். அதேபோல் மாலையில் பைரவர் சன்னதிக்குச் சென்று அங்குள்ள பைரவருக்கு செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்து வாருங்கள். பைரவர்களில் மிகவும் சக்தி வாய்ந்தவர் காலபைரவர் என்று சொல்வதுண்டு.

கோடி கோடியாக எவ்வளவு கடன் இருந்தாலும் கால பைரவரை வணங்கி வரும் நிலையில் அந்தக் கடன்கள் அனைத்தையும் பைரவர் தீர்த்து வைப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. ஒருவரின் கிரக நிலை சரியாக இல்லை என்றாலும் கால நிலை சரியாக இல்லை என்றாலும் பைரவர் வழிபாடு மேற்கொள்வது மிகுந்த பலன்களைத் தரும். நமது கெட்ட நேரத்தை கூட நல்ல நேரமாக மாற்றும் சக்தியும், ஆற்றலும் பைரவ பகவானுக்கு உள்ளது.

அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் நீங்கள் வீட்டில் இருந்து கொண்டு வந்த மிளகு முடித்து வைத்து நன்கு நனைத்து தீபமேற்றி பைரவர் அஷ்டகம் வாசித்தால் போதுமானது.ஒன்பது வாரங்களில் உங்களின் அனைத்து தோஷங்களும் நீங்கி உங்கள் கடன் பிரச்சினைகளும் ஒரு முடிவுக்கு வரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *