விரதம் இருப்பவர்கள் அறிந்துகொள்ள வேண்டியவை என்னென்ன தெரியுமா? இது தெரியாமல் இருக்க கூடாதாம்.. கட்டாயம் படியுங்கள் !!

ஆன்மீகம்

தற்போது மக்களிடையே கடவுள் பக்தியும், ஜோதிட நம்பிக்கையும் சற்று அதிகரித்துள்ளது. இதனால் தான் தற்போது பலர் எந்த ஒரு செயலை செய்வதற்கு முன்பும் ஜோதிடர்களை சந்தித்து, தங்களது ஜாதகங்களைக் கொடுத்து இது நல்ல காலம் தானே என்பதைப் பார்க்கிறார்கள். மேலும், ஜோதிடர்கள் தங்களுக்கு சாதகமாக என்ன கூறினாலும் அதை செய்யவும் தயாராக உள்ளனர். இது சிலருக்கு பொருந்தும், சிலருக்கு பொருந்தாமலும் இருக்கும். எந்த விடயங்களையும் முழு நம்பிக்கையுடன் செய்தால் வெற்றி நிச்சயம். ஒவ்வொரு நாளும் கிரகங்களின் நிலை மாறும். இப்படி தினமும் மாறும் கிரகங்களின் சஞ்சாரங்களால் ஒவ்வொரு ராசிக்காரரின் பலனும் அன்றாடம் மாறுபடும்.

தினசரி ராசிப்பலன்கள் மூலம் நீங்கள் எந்த மாதிரியான சவால்களை எதிர்கொள்வீர்கள் என்பதை தெரிந்துகொள்ள முடியும். உங்கள் வாழ்க்கை ஏற்பட போகும் அனைத்து வகையான கேள்விகளுக்குமான விடை இங்கு கிடைக்கும். அந்த வகையில், இன்று நீங்கள் சந்திக்கவிருக்கும் வாய்ப்புகள் மற்றும் சவால்கள் என்னவென்று உங்களுக்குத் தெரியாவிட்டால் உடனே ராசிப்பலனைப் பார்த்து அறியலாம். இன்று பலரும் தனது அன்றாட வேலைகளில் ஈடுபடுவதற்கு முன்பு அன்றைய தினம் தனக்கு எவ்வாறு இருக்கப்போகின்றது என்ற கேள்வியுடன், அதனை தெரிந்து கொள்ளவும் அதிக அக்கறை காட்டி வருகின்றனர்.

பொதுவாக நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்துகொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம் ஆன்மிக ரீதியாக கடைப்பிடிக்கப்படும் விஷயங்களில், விரதங்களும் ஒன்று. அறிவியல் மற்றும் மருத்துவ ரீதியாக உடல் செல்கள் புத்துயிர் அடைய உதவும் ஒரு செயல்முறையாக இது பார்க்கப்படுகிறது.

‘விரதம் இருப்பதனால் உடல் மற்றும் மன நிலையில் அமைதி மற்றும் புத்துணர்ச்சி ஏற்படுகிறது. உடலில் உள்ள செல்கள் புத்துயிர் பெற்று நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது’ என்பது மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை மட்டும் உணவு அருந்தி இருப்பது, நாள் முழுவதும் எதுவும் சாப்பிடாமல் இருப்பது, அசைவ உணவுகளை மட்டும் தவிர்த்து சைவ உணவுகளை மட்டும் உண்ணுவது, தண்ணீர், பழங்கள் மட்டும் சாப்பிட்டு விரதம் இருப்பது என பல முறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. எந்த முறையில் விரதம் இருந்தாலும் பலன் கிடைப்பது உறுதி என்று ஆன்மிக சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பொதுவாக, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வாரம் ஒரு முறை விரதமிருப்பது சரியானது. விரதத்துக்கு 2 நாட்களுக்கு முன்பிருந்தே, காரம் குறைவான, பருப்பு சாதம் மாதிரி நன்கு வேகவைக்கப்பட்ட உணவுகளையும், ரசம் சாதம், மோர் மற்றும் பழங்களையும் உண்பது ஆன்மிக வாழ்வுக்கு ஏற்றது. குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள், கடுமையான வேலைகள் செய்பவர்கள், அடிக்கடி வெளியூர் செல்பவர்கள், நோயாளிகள், தொடர்ந்து மருந்து உட்கொண்டு வருபவர்கள் ஆகியோர் விரதம் இருப்பதை தவிர்க்க வேண்டும் என்பது முக்கியமான விதியாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *