கும்ப ராசிக்காரர்களுக்கு குருபகவான் உங்கள் ராசிக்கு 12ஆம் இடத்தில் இருந்து கொண்டு 4, 6, 8 ஆகிய இடங்களில் அவருடைய பார்வை விழுகிறது.
ஆகவே கும்ப ராசியை பொறுத்தவரை இந்த குரு பெயர்ச்சியானது நல்லது கெட்டது என இரண்டும் கலந்த கலவையாக நடைபெற போகிறது.
ஆடம்பர மற்றும் பொழுதுபோக்கு விஷயங்களில் மனம் அலை பாய்வதற்கு வாய்ப்புகள் உண்டு. உங்களுடைய பேச்சு மற்றவர்களுக்கு புரியும் வண்ணம் இருக்க வேண்டும். தெளிவில்லாத பேச்சால் தேவையற்ற வம்பு வழக்குகளில் மாட்டி கொள்ள நேரலாம்.
பொருளாதாரத்தில் ஏற்றம் இருந்தாலும், வரவுக்கு ஏற்ற செலவுகள் கட்டுக்குள் கொண்டு வரும் திறமையை வளர்த்துக் கொள்வது மிகவும் அவசியம். குரு பெயர்ச்சிக்கு பிறகு தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் சூடு பிடிக்கத் தொடங்கும். நீங்கள் எதிர்பாராத அளவிற்கு லாபமும் நிச்சயம் இருக்கும்.
மேலும், புதிய தொழில் வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்தி அடுத்த படிக்கு செல்வீர்கள்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தங்களின் திறமைக்கு ஏற்ப அங்கீகாரம் கிடப்பதில் காலதாமதம் ஆனாலும் வெற்றி நிச்சயம் உங்கள் பக்கம் தான்பொருளாதாரம் பொறுத்தவரை வருகின்ற குரு பெயர்ச்சிக்கு பிறகு சிறப்பாகவே அமைய இருக்கிறது. விரும்பியதை அடைய கடினமாக முயற்சிகள் மேற்கொள்வீர்கள். எதற்கு செலவு செய்தால் நல்லது?
என்பதை திட்டமிட்டு செலவு செய்தால் பொருளாதாரத்தில் சிறப்பான முன்னேற்றம் காண்பீர்கள். குடும்ப உறவுகளைப் பொறுத்தவரை அடிக்கடி மோதல்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. உங்களுடைய கருத்தும் மற்றவர்களின் கருத்தும் பெரும்பாலும் ஒத்துப் போகாத காரணத்தினால் சண்டை சச்சரவுகள் ஏற்படலாம். இதில் யாராவது ஒருவருக்கு புரிதல் இருந்தால் சுலபமாக சமாளித்து விடலாம்.
எந்த ஒரு விஷயத்தையும் சட்டென முடிவெடுக்காமல் ஆழமாக யோசித்து பின்னர் முடிவெடுப்பது நலம் தரும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் புரிதல் அதிகரித்துக் கொள்ள வாய்ப்புகள் உண்டாகும்.