நமது பெயரில் கோவிலில் அர்ச்சனை செய்வது நல்லதா கெட்டதா? பலரும் அறிந்திராத ரகசியம் வாருங்கள் தெரிந்து கொள்வோம் !!

ஆன்மீகம்

தற்போது மக்களிடையே கடவுள் பக்தியும், ஜோதிட நம்பிக்கையும் சற்று அதிகரித்துள்ளது. இதனால் தான் தற்போது பலர் எந்த ஒரு செயலை செய்வதற்கு முன்பும் ஜோதிடர்களை சந்தித்து, தங்களது ஜாதகங்களைக் கொடுத்து இது நல்ல காலம் தானே என்பதைப் பார்க்கிறார்கள். கோவிலில் நமது பெயரில் அர்ச்சனை செய்வது நல்லதா அர்ச்சனை என்றால் அர்ச்சிப்பது எனப் பொருள். கோயில் சென்று ஒருவர் தனது கோத்திரம்,பெயர் ,நட்சத்திரத்தை கூறி சங்கல்பம் செய்து இறைவனை அர்ச்சனை செய்து வழிபட்டு

தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். அர்ச்சனை என்பது கோயில்களில் இறைவனை வழிபடும் முறைகளில் ஒன்று. ஜோதிடர்கள் தங்களுக்கு சாதகமாக என்ன கூறினாலும் அதை செய்யவும் தயாராக உள்ளனர். இது சிலருக்கு பொருந்தும், சிலருக்கு பொருந்தாமலும் இருக்கும். எந்த விடயங்களையும் முழு நம்பிக்கையுடன் செய்தால் வெற்றி நிச்சயம்.

பூக்களாலும் குங்குமத்தாலும் இறைவனுக்கு உகந்த நாமாக்களால் அர்ச்சனை செய்து அவரின் கருணைக்கு பாத்திரமாவது நமது வழிபடும் முறைகளில் ஒன்று. கோவிலில் நமது பெயரில் அர்ச்சனை செய்வது நல்லதா? அர்ச்சனை என்றால் என்ன? இறைவனின் புகழை மனதார வாயார பாடுவதாகும்.

அப்படி பாடும் போதே நமது குறைகளையும் அவனிடம் மு றையிடுவது தான் அர்ச்சனை செய்வதன் தாத்பரியம்.கடவுள் நமக்கு தந்த நன்மைக்காக நன்றி செலுத்த வேண்டுமென்றால் அவர் பெயரில் அர்ச்சனை செய்யலாம். அவரிடம் ஏதாவது விண்ணப்பம் வைக்க வேண்டுமென்றால் நம் பெயரில் செய்யலாம்.ஆனால் கடவுளுக்கு நம் கோரிக்கை தெரியாதா என்ன? எனவே பொதுவாக அவர் பெயரிலேயே செய்து விடுவது தான் சாலச்சிறந்தது ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *