விரதமிருந்து தேங்காய் தீபம் ஏற்றினால் கிடைக்கும் பலன்கள் என்ன தெரியுமா? பண ரீதியான விஷயங்களில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன !!

ஆன்மீகம்

தற்போது மக்களிடையே கடவுள் பக்தியும், ஜோதிட நம்பிக்கையும் சற்று அதிகரித்துள்ளது. இதனால் தான் தற்போது பலர் எந்த ஒரு செயலை செய்வதற்கு முன்பும் ஜோதிடர்களை சந்தித்து, தங்களது ஜாதகங்களைக் கொடுத்து இது நல்ல காலம் தானே என்பதைப் பார்க்கிறார்கள். மேலும், ஜோதிடர்கள் தங்களுக்கு சாதகமாக என்ன கூறினாலும் அதை செய்யவும் தயாராக உள்ளனர். இது சிலருக்கு பொருந்தும், சிலருக்கு பொருந்தாமலும் இருக்கும். எந்த விடயங்களையும் முழு நம்பிக்கையுடன் செய்தால் வெற்றி நிச்சயம். இன்று பலரும் தனது அன்றாட வேலைகளில் ஈடுபடுவதற்கு முன்பு அன்றைய தினம் தனக்கு எவ்வாறு இருக்கப்போகின்றது என்ற கேள்வியுடன், அதனை தெரிந்து கொள்ளவும் அதிக அக்கறை காட்டி வருகின்றனர்.

பயபக்தியுடன் விரதம் இருந்து தேங்காய் தீபம் ஏற்றுவதால் பல நன்மைகள் உண்டு. பொதுவாக தேங்காய் தீபத்தை எல்லா தெய்வங்களுக்கும் ஏற்ற மாட்டார்கள், ஒரு சில பிரச்சனைகளை போக்கவே தேங்காய் தீபம் ஏற்றப்படுகிறது. அது ஏன்? ஏற்றினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை விரிவாக தெரிந்து கொள்வோம். எதற்காக ஏற்றப்படுகிறது? பண ரீதியான வில்லங்கமான விஷயங்களில் மா ட் டிக்கொண்டு தவிப்பவர்கள் விரதம் இருந்து வீட்டின் பூஜை அறையில்

சுக்கிர ஹோரையில் திங்கள் கிழமையில் தேங்காய் தீபத்தை ஏற்றி வழிபடுவார்கள். வேலை இல்லாதவர்கள் வேலை கிடைக்கவும், குழந்தை இல்லாதவர்கள் குழந்தை பாக்கியம் பெறவும், அம் மன் போன்ற பெண் தெய்வங்களுக்கு விரதம் இருந்து இரண்டு தேங்காய்களை உடைத்து தீபம் ஏற்றி வழிபடுவார்கள். எப்படி ஏற்ற வேண்டும்? தேங்காய் தீபம் ஏற்றும் பொழுது தேங்காய் உள்ளே நெய் ஊற்ற வேண்டும். தேங்காய் தீபத்தில் நெய் தவிர வேறு எந்த எண்ணெய்களையும் பயன்படுத்துவது கிடையாது.

கிடைக்கும் நன்மைகள் – விரதம் இருந்து தேங்காயில் நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் திருமண தடை நீங்கவும், தொழில் வளம் சிறக்கவும், நல்ல வரன் அமையவும், வேண்டுதல்கள் விரைவாகவும் பலிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *