கன்னி ராசியில் சஞ்சரிக்கும் செவ்வாய்.. இடப்பெயர்ச்சியால் இந்த ஐந்து ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்கள் தேடி வரபோகுதாம் !!

ஆன்மீகம்

செவ்வாய் செப்டம்பர் 28 திகதி கன்னி ராசியில் சஞ்சரிக்கவுள்ளார். இதனால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டப்பலன் தேடி வர வாய்ப்புள்ளதாம். தற்போது மக்களிடையே கடவுள் பக்தியும், ஜோதிட நம்பிக்கையும் சற்று அதிகரித்துள்ளது. இதனால் தான் தற்போது பலர் எந்த ஒரு செயலை செய்வதற்கு முன்பும் ஜோதிடர்களை சந்தித்து, தங்களது ஜாதகங்களைக் கொடுத்து இது நல்ல காலம் தானே என்பதைப் பார்க்கிறார்கள்.எந்த விடயங்களையும் முழு நம்பிக்கையுடன் செய்தால் வெற்றி நிச்சயம். அதிர்ஷ்டப்பலன் தேடிவர வாய்ப்புள்ள அந்த ராசிக்காரர்கள் யார் யார் என பார்ப்போம்.

மேஷம்
மேஷ ராசி அதிபதியான செவ்வாய், தற்போது, ஆறாம் வீடான எதிரி, நோய் ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்ய உள்ளதால், கன்னியில் செவ்வாய் இருக்கக்கூடிய காலத்தில் மேஷ ராசியினர் கவனமாகா இருக்க வேண்டியது அவசியம்.உங்களின் ஆரோக்கியம் மேம்படும். எதிரிகளை வெல்லக்கூடிய சூழல் இருக்கும். நீங்கள் வேலைப்பார்க்கும் துறையில் உங்களின் முயற்சிகளால் நல்ல முடிவுகளைப் பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் கவனமாக இருந்தால் போதும். உங்களின் கோபத்தைக் குறைத்துக் கொண்டு பொறுப்போடு செயல்படுவீர்கள்.

ரிஷபம்
உங்கள் ராசிக்கு 5ம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாயின் சஞ்சாரம் நிகழ்வதால், சொத்து, வீடு, மனை வாங்க ஏற்ற காலமாக இருக்கும். விளையாட்டு தொடர்பான செயல்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வெற்றி வாய்க்கும். மாணவர்கள் தங்களின் தனித்திறமையைச் சிறப்பாக வெளிப்படுத்தவும், வாய்ப்புகளையும் பெறலாம்.

கடகம்
கடக ராசிக்கு மூன்றாம் வீடான சகோதர, தைரிய ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் உங்களின் மனதில் தைரியமும், வலிமையும் அதிகரிக்கும்.உங்கள் பேச்சால் சூழலை சமாளித்து வெற்றி அடைவீர்கள். இந்த காலத்தில் வியாபாரம், தொழிலில் நல்ல முடிவுகள், வெற்றிகளைப் பெறலாம். புதிய திட்டங்களால் சிறப்பான முன்னேற்றம் ஏற்படலாம்.

விருச்சிகம்
செவ்வாய் பகவான் ஆளக்கூடிய விருச்சிக ராசிக்கு 11ம் வீடான லாப ஸ்தானம், மூத்த சகோதரர் ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதால், உங்களுக்கு பல வகையில் வெற்றி தரக்கூடியதாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றத்தைப் பெறுவீர்கள்.சிலருக்கு வெளிநாட்டு மூலங்களிலிருந்து நன்மையும், லாபமும் கிடைக்க வாய்ப்புள்ளது. கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு, நிதானமாகப் பேசினால் வெற்றி நிச்சயம்.

தனுசு
தனுசு ராசிக்கு 10ம் இடமான தொழில், கர்ம ஸ்தானத்தில் செவ்வாயின் சஞ்சாரம் செய்வதால், நீங்கள் செய்யும் வேலை, எடுக்கும் எந்த ஒரு முயற்சியிலும் தைரியமும், சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள்.உங்களின் இலக்கை சிறப்பாக அடைவதற்கான ஆற்றல் இருக்கும். இந்த காலத்தில் உங்களின் கனவுகளை நிறைவேற்றிக் கொள்ள முயலவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *