வீடுகளில் செல்வம் அதிகரிக்க வேண்டுமா? எந்த நாளில் எந்தெந்த தானம் கொடுத்தால் சிறந்தது என தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள் !!

ஆன்மீகம்

இந்து நாட்காட்டியின் படி, கிருஷ்ண பகவானின் பிறந்த நாள் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில், நாடு முழுவதும் மிகுந்த ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் கொண்டாடப்பட்டு வருகிறது. புராண ரீதியாக, இது கிருஷ்ண பக்ஷ அஷ்டமி அல்லது ஆவணி மாதத்தில் பௌர்ணமியை அடுத்து வரும் அஷ்டமி நாளில் கொண்டாடப்படுகிறது அன்பு, நல்லிணக்கம் மற்றும் வலிமையின் உருவகமாக கருதப்படுபவர் கிருஷ்ணர். இவர் தனது பக்தர்களுக்கு வாழ்வில் உள்ள இருளுக்கு எதிராக போ ரா டுவ தற்கு தைரியத்தை அளித்து, இருளை போக்க உதவுவார். வேதங்களின் படி, கிருஷ்ணர் வானத்தைப் போலவே எல்லையற்ற ஆற்றலும்,

காலரையற்ற சக்தியும் அவரிடம் இருந்ததால், அவர் தனது நிறத்தை நீலமாக எடுத்துக் கொண்டார். இப்படிப்பட்ட கிருஷ்ண பகவானின் பிறந்த நாளன்று கிருஷ்ணருக்கு பிடித்த பலகாரங்களைப் படைத்து பூஜைகளை செய்வதுடன், ராசிக்கு ஏற்ப பொருட்களை தானம் செய்தால், அது ஒருவரின் வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தையும், செழிப்பையும் அதிகரிக்கும். இப்போது ராசிப்படி, ஒருவர் கிருஷ்ண ஜெயந்தி நாளில் தானமாக என்ன கொடுக்க வேண்டும் என்பதைக் காண்போம்.

மேஷம்
நீங்கள் மேஷ ராசிக்காரராக இருந்தால், மால்புவா, நெய், சிவப்பு துணி, வாழைப்பழம், மாதுளை, தாமிரம், பாசிப்பருப்பு மற்றும் கோதுமை போன்றவற்றை தானமாக வழங்கலாம். நீங்கள் விரும்பினால், வாழ்வில் செழிப்பை அதிகரிக்க தங்கம் அல்லது வெள்ளியை தானமாக வழங்கலாம்.

ரிஷபம்
நீங்கள் ரிஷப ராசிக்காரராக இருந்தால், வெள்ளி அல்லது வெள்ளி பொருட்களை தானமாக கொடுக்கலாம். அதோடு நெய், பழங்கள், பூக்கள், தயிர் போன்றவற்றை தானமாக வழங்கலாம் மற்றும் திருமணத்திற்கு ஒருவருக்கு உதவலாம். உங்கள் வாழ்வில் அமைதியைத் தேடுகிறீர்கள் என்றால், குங்குமப்பூ, கடலை மாவு மற்றும் மஞ்சளை தானமாக கொடுங்கள்.

மிதுனம்
நீங்கள் மிதுன ராசிக்காரராக இருந்தால், பாசிப்பருப்பு, குடை, சமையல் எண்ணெய், வாழைப்பழம், மால்புவா, வளையல்கள், குங்குமம் மற்றும் உடைகளை தானமாக வழங்கலாம். அதோடு, விருப்பமிருந்தால் மரகதம் அல்லது தங்கத்தை தானம் செய்யலாம்.

கடகம்
நீங்கள் கடக ராசியாக இருந்தால், வெள்ளி, முத்துக்கள், வெள்ளை நிற உடைகள், தயிர், பால், தண்ணீர், அரிசி மற்றும் சர்க்கரையை தானமாக வழங்கலாம்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள், வாழ்வில் நல்லிணக்கத்தையும், அமைதியையும் பெற வெல்லம், சிவப்பு நிற உடைகள், குங்குமம், மெழுகுவர்த்தி, கற்பூரம், காப்பர் மற்றும் பாத்திரங்களை தானமாக வழங்க வேண்டும்.

கன்னி
நீங்கள் கன்னி ராசிக்காரராக இருந்தால், சர்க்கரை, கரும்பு, பன்னீர், தயிர், க்ரீம், சுத்தமான நெய் போன்ற பால் பொருட்கள், அரிசி, வெள்ளை நிற பூக்கள் மற்றும் முந்திரியை தானமாக வழங்கினால், அதிர்ஷ்டக் காற்று உங்கள் பக்கம் வீசும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் நெய், கற்பூரம், தயிர், வெள்ளி, சர்க்கரை, அரிசி, வெள்ளை நிற உடைகள் அல்லது பூக்களை தானமாக வழங்குவது நல்லது. விருப்பமுள்ளவர்கள், வைரத்தை தானமாக வழங்கலாம்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் விவசாயிகளுக்கும், ராணுவ நிதிக்கும், சட்ட அமலாக்க பிரிவுகளுக்கும் நன்கொடை வழங்க வேண்டும் முடியாவிட்டால், உங்கள் நண்பர்களுக்கு காப்பரால் ஆன பொருட்களை தானமாக வழங்கலாம் அல்லது இரத்த தானம் செய்யலாம்.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள், மாடுகளுக்கு வெல்லம் கொடுக்கலாம், கோவிலுக்கு மஞ்சள் வாங்கி கொடுக்கலாம் அல்லது சிவலிங்கத்திற்கு வெண்ணெய் வழங்கலாம். மொத்தத்தில் இந்த ராசிக்காரர்கள் தங்கள் நன்கொடைகளை தெய்வீகத்திற்கு அர்ப்பணிக்க வேண்டும்.

மகரம்
மகர ராசிக்காரர்கள் சிவலிங்கத்திற்கு கருப்பு எள்ளு விதைகளை வழங்கலாம் அல்லது அரச மரத்திற்கு அடியே கடுகு எண்ணெய் விளக்கேற்ற வேண்டும். இது தவிர எருமைக்கு உணவளிக்கலாம்.

கும்பம்
கும்ப ராசியைச் சேர்ந்தவர்கள், சமையலறை பாத்திரங்கள் மற்றும் இளநீர் மற்றும் கடுகு எண்ணெய் போன்றவற்றை தானமாக வழங்கலாம். இது தவிர, சிமெண்ட், ஷூக்கள், குடை அல்லது துணிகளை தானமாக வழங்கலாம்.

மீனம்
மீன ராசிக்காரர்கள், மஞ்சள், மஞ்சள் நிற பூக்கள், தேன், கடலை மாவு, குங்குமப்பூ அல்லது சர்க்கரையை தானம் செய்யலாம். இது தவிர, மஞ்சள் நிற இனிப்புக்களை தானமாக கொடுக்கலாம். மேலும் மஞ்சள் நிற உடைகள், தங்க புஷ்பராகம் அல்லது சிட்ரைன் ஆகியவற்றை தானம் செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *