நீங்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்களா? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்…. இந்த ராசிக்காரங்களுக்கு மட்டும் செம்ம அதிஷ்டம் தானாம் !!

ஆன்மீகம்

உங்கள் வாழ்க்கையை இப்போது தான் ஆரம்பித்திருக்கிறீர்களா. உங்கள் மனைவி, குழந்தை, அம்மா யாராவது ஆனி மாதத்தில் பிறந்து உங்களுக்கு அதே மாதத்தில் பிறந்த நாள் வருகிறதா. அப்போ நீங்க அதிர்ஷ்டசாலி தான். எப்படி என்று கேட்கிறீர்களா. உங்களுக்கு லக்கினம், லக்கினாதிபதி, சந்திரன், புதன் ஆகியோரின் பலம் அள்ளிக் கொட்டப்போகிறது. ஆம்… உங்கள் வாழ்க்கையில் முக்கியமான வெற்றிப்படியை கடக்க இருக்குறீர்கள். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்று தான், கீழ்க்கண்ட கோயில்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து வணங்கி வாருங்கள். ஆனி முடிவதற்குள் நீங்களும் டாப்பா வருவீங்க….

கீழப்பாவூர் வேணுகோபால கிருஷ்ணசுவாமி கோவில் – திருநெல்வேலி மாவட்டம் பாவூர்ச் சத்திரம் அருகே அமைந்துள்ளது கீழப்பாவூர் எனும் ஊர். இங்குள்ள வேணுகோபால கிருஷ்ணசுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். காலை முதல் மாலை வரை நடைபெறும் பூசைகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள்.

ஆனிமாதம் பிறந்தவர்கள் அதிலும் குறிப்பாக மீனம், கன்னி ராசிக்காரர்கள் இந்த கோயிலுக்கு அடிக்கடி சென்று வழிபட்டு வந்தால், எதிர்காலம் சிறப்பாக அமையும். மேலும் இங்கு அருகில் நிறைய சுற்றுலாத் தளங்களும் உள்ளன. கோயிலுக்கு சென்றுவிட்டு அப்படியே சுற்றுலாவையும் ரசிக்கலாம். திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில், குற்றாலம், செங்கோட்டை, தென்காசி, பாபநாசம் என நிறைய சுற்றுலாத் தளங்கள் அருகாமையில் அமைந்துள்ளன.

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் – ஆனி மாதத்தில் பிறந்த நல்ல உள்ளங்கள் வேகமாகவும் அதே நேரத்தில் விவேகமாக அறிவார்ந்த முறையில் செயல்பட்டு காரியத்தை செயல்படுத்துவதில் வல்லவர்களாக இருப்பீர்கள். உங்களுக்கு இந்த வருடம் சிறப்பாக அமைய இந்த கோயிலுக்கு சென்று வழிபட்டு வந்தால் போதும்.

திருநாரையூர் பொள்ளாப்பிள்ளையார் கோவில் – நடுநிலை தவறாமல் அனைவருக்கும் உதவும் மனப்பான்மை கொண்டவர்கள் இந்த ஆனி மாதத்தில் பிறந்தவர்கள். குறிப்பாக மேசம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்கள் வீட்டின் மீது அதிக பாசம் வைத்திருப்பார்கள். அவர்கள் தங்கள் சொந்த விருப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டு குடும்பத்துக்காக உழைப்பவர்கள். உங்கள் வீட்டில் வேறு யாரும் ஆனி மாதத்தில் பிறந்திருந்தால் உங்களுக்கு மிக பெரிய அதிர்ஷ்டம் ஒன்று காத்திருக்கிறது. அதே நேரத்தில் இந்த கோயிலுக்கு சென்று வந்தீர்கள் என்றால் வரும் மாதங்களில் தொழில் வளம் பெருகி குடும்பம் நல்ல நிலை பெறும்.

ஆழ்வார்குறிச்சி சாஸ்தா கோயில் -கடையம் அருகே ஆழ்வார்குறிச்சியில் அமைந்துள்ளது இந்த சாஸ்தா கோயில். இங்கு செல்பவர்களுக்கு நல்ல அருளை வழங்கும் தெய்வம், கடின காலத்தில் ஆறுதலையும் அளிக்கிறது. இந்த கோயிலில் நடைபெறும் மகா அபிஷேக, அலங்கார தீபாராதனை, மற்றும் அர்த்தஜாம பூஜைகள் மிக சிறப்பாகும். பணவரவு, செல்வ வளம் என்பது எல்லாருக்கும் எப்போதும் கிடைத்துவிடுவதில்லை. சிலருக்கு ராசி, நட்சத்திரங்கள் மேல் நம்பிக்கை இருக்காது. அவர்கள் அனைவரும் கூட ஆச்சர்யம் கொள்ளும் வகையில் ஆனி மாதத்தில் பிறந்தவர்கள் வளருவார்கள். அவர்களுக்கு அதிர்ஷ்டத்தால் செல்வத்தை அள்ளி அள்ளி கொடுக்கும் சந்திரனும், புதனும் மிக நேர்த்தியாக அமைந்துள்ளனர்.

திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி ஆலயம் -பாண்டிய மன்னன் வரகுணபாண்டியனின் பிரம்மஹத்தி தோஷத்தையும், வீரஸேனன் என்னும் மன்னனின் பிரம்மஹத்தி தோஷத்தையும் போக்கிய புண்ணிய தலம் என்று புகழ் பெற்ற இந்த கோயில் உங்கள் வாழ்விலும் ஒளி ஏற்ற வருகிறது. ஆம், ஆனி மாதத்தில் பிறந்த மக்கள் இந்த கோயிலுக்கு சென்று வழிபட்டால் உலகப் புகழ் பெறலாம் என்கிறது கணிப்பு. அதிர்ஷ்டத்தை மட்டும் நம்பாமல் அள்ளிக் கொடுக்கும் நட்சத்திரங்களை மனதில் கொண்டு இந்த கோயிலுக்கு சென்று வரவேண்டும்.

பஞ்சமுகேஸ்வரர் – திருச்சியில் உள்ள திருவானைக்காவல் பகுதியில் பஞ்சமுகலிங்கத்திற்கு என தனிக்கோவில் உள்ளது. இத்தல மூலவர் பஞ்சமுகேஸ்வரர் என திருநாமம் கொண்டுள்ளார். அம்மையார் திரிபுரசுந்தரி. ஐந்து முக லிங்கங்களில் திசைக்கு ஒன்றாக ஐந்து முகங்கள் தவிர, உச்சியில் வடகிழக்கு திசை நோக்கி ஒரு முகமும் காணப்படும். பஞ்சமுக லிங்கத்தைச் சிலர் சிவாகம லிங்கம் எனவும் சொல்வார்கள். ஐந்து முக ருத்திராட்சத்தினால் மண்டபம் கட்டி, ஐந்து பொருட்களால், குறிப்பாய் பஞ்சகவ்யம் எனப்படும் பசும்பால், தயிர், நெய், கோமியம், சாணம் போன்றவற்றால் அபிஷேஹம் செய்து, ஐந்து மலர்களால் மாலை அணிவித்து, ஐந்து வில்வங்களால் அர்ச்சித்து, ஐவகை நைவேத்தியம் செய்வித்து, வழிபடுவதே இதன் விசேசமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *