உங்களது ராசிக்குரிய மந்திரம்னு தெரியுமா? செல்வம் பலமடங்கு பெறுக இந்த மந்திரத்தை சொன்னால் போதுமாம் அப்புறம் பாருங்க என்னாகும் என்று !!

ஆன்மீகம்

ஒவ்வொரு மந்திரத்திற்கும் ஒவ்வொரு சக்தி உள்ளது. தற்போது மக்களிடையே கடவுள் பக்தியும், ஜோதிட நம்பிக்கையும் சற்று அதிகரித்துள்ளது. இதனால் தான் தற்போது பலர் எந்த ஒரு செயலை செய்வதற்கு முன்பும் ஜோதிடர்களை சந்தித்து, தங்களது ஜாதகங்களைக் கொடுத்து இது நல்ல காலம் தானே என்பதைப் பார்க்கிறார்கள். மேலும், ஜோதிடர்கள் தங்களுக்கு சாதகமாக என்ன கூறினாலும் அதை செய்யவும் தயாராக உள்ளனர். இது சிலருக்கு பொருந்தும், சிலருக்கு பொருந்தாமலும் இருக்கும். எந்த விடயங்களையும் முழு நம்பிக்கையுடன் செய்தால் வெற்றி நிச்சயம். எந்த மந்திரத்தை சொன்னால் செல்வம் கொழிக்கும்… உங்களது ராசிக்கு என்ன மந்திரம்னு தெரியுமா?

தினமும் காலையில் அனைவரும் ஒரு செயலை தொடங்குவதற்கு முன் நல்ல நேரம், கெட்ட நேரத்தை பார்த்துவிட்டு தான் அடுத்த செயல்களிலேயே இறங்குகிறார்கள். அதற்கு முக்கிய காரணமாக விளங்குவது ராசிப்பலன் தான். அந்த அளவிற்க்கு ராசிப்பலனின் மீது அதீத நம்பிக்கை கொண்டவர்கள் பலர் இருக்கிறார்கள். ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிந்து கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும்.

ஜோதிடத்தில் ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களும், அவர்களின் ராசிக்கு ஏற்ற சுலோகத்தை கூறி வந்தால், அவர்களுக்கு சகல செல்வங்களும் தேடி வரும் என்று கூறுகிறது.இந்த மந்திரத்தை சொன்னால் செல்வம் கொழிக்குமாம்… உங்கள் ராசிக்கு என்ன மந்திரம்னு தெரியுமா வாங்க தெரிஞ்சுக்கலாம்

மேஷம் – மேஷ ராசியில் பிறந்தவர்கள் ”ஷண்முகம் பார்வதீ புத்ரம்க்ரௌஞ்ச ஸைவ விமர்த்தனம்தேவஸேனாபதிம் தேவம் ஸ்கந்தம்வந்தே ஸிவாத் மஜம்” எனும் சுலோகத்தை 27 முறை கூறி, முருகனுக்கு சகஸ்ர நாம அர்ச்சனை செய்தால், துன்பங்கள் நீங்கும். ரிஷபம்– ரிஷப ராசியில் பிறந்தவர்கள், மகாலட்சுமி பூஜை செய்து, வெள்ளிக்கிழமை விரதம் இருந்து, ”ஸ்ரீ லக்ஷிமீம் கமல தாரிண்யைஸிம்ஹ வாஹின்யை ஸ்வாஹ” என்ற சுலோகத்தை தினமும் 11முறை கூறி வந்தால், செல்வம் அதிகரிக்குமாம்.

மிதுனம் – மிதுன ராசியில் பிறந்தவர்கள், விஷ்ணுவுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, ”ஓம் க்லீம் ஸ்ரீ கிருஷ்ணாய நம” எனும் மந்திரத்தை 54 முறை தினமும் கூறி வந்தால், நல்ல பலன் கிடைக்கும். கடகம் – கடக ராசியில் பிறந்தவர்கள், பவுர்ணமி தோறும் அம்பாளுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, விரதம் இருந்து, ”ஓம் ஐம் க்லீம் ஸோமாய நம” எனும் மந்திரத்தை 21முறை கூற வேண்டும்.

சிம்மம் – சிம்ம ராசியில் பிறந்தவர்கள், மாதம் ஒரு ஞாயிற்றுக் கிழமை சூரியனுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, ”ஓம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-சூர்யாய நம” எனும் மந்திரத்தை கூறி வந்தால், வாழ்க்கையில் வெற்றி கிட்டும். கன்னி – கன்னி ராசியில் பிறந்தவர்கள், மாதம் ஒரு புதன் கிழமை விஷ்ணுவுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, ”ஓம்-ஐம்-ஸ்ரீம்-ஸ்ரீம்-புதாய நம” எனும் மந்திரத்தை சொல்லி வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

துலாம் – துலா ராசியில் பிறந்தவர்கள், மாதம் ஒரு முறை பவுர்ணமி அன்று விரதம் இருந்து சத்யநாராயண பூஜை செய்து, ”ஓம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-சுக்ராய நம” எனும் மந்திரத்தை சொல்லி வந்தால், நல்ல பலன் ஏற்படும். விருச்சிகம் – விருச்சிக ராசியில் பிறந்தவர்கள், செவ்வாய் கிழமை விரதம் இருந்து துர்க்கையை பூஜித்து வணங்கி, ”தரணி கர்ப்ப ஸம்பூதம்வித்யுத் காந்தி ஸமப்ரதம்குமாரம் சக்தி ஹஸ்தம்சமங்களம் ப்ரணமாம்யஹம்” எனும் மந்திரத்தை கூற வேண்டும்.

தனுசு – தனுசு ராசியில் பிறந்தவர்கள், வியாழ கிழமை தட்சிணாமூர்த்தி கடவுளுக்கு அர்ச்சனை செய்து, ”ஓம் ஐம் க்லீம் பிரஹஸ்பதயே நம” எனும் மந்திரத்தை சொல்லி வந்தால், நல்ல பலன் கிடைக்கும். மகரம் – மகர ராசியில் பிறந்தவர்கள், சனி கிழமை விரதம் இருந்து, சனீஸ்வர பகவானுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, ”ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் சனீஸ்வராய நம” எனும் மந்திரத்தை கூறி வந்தால், சகல காரியத்திலும் வெற்றி கிடைக்கும்.

கும்பம் – கும்ப ராசியில் பிறந்தவர்கள், ஒவ்வொரு வாரமும் சனி கிழமை ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை செய்து, “ஓம் ஸ்ரீம் ஸ்ரீ உபேந்திராய அச்சுதாய நமோநம” எனும் மந்திரத்தை சொல்லி வந்தால், நல்ல பலன்கள் உண்டாகும். மீனம் – மீன ராசியில் பிறந்தவர்கள், ஒவ்வொரு வியாழ கிழமை அன்றும் சிவபெருமானுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, ”ஓம் க்லீம் ஸ்ரீ உத்ராய உத்தாரணே நம” எனும் மந்திரத்தை கூறி வந்தால், துன்பங்கள் விலகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *