செப்டம்பர் மாதத்தில் சவாலை சந்திக்கபோகும் அந்த 3 ராசியினர்கள் யார் யார் தெரியுமா? இதில் உங்கள் ராசியும் இருக்கானு செக் பண்ணிக்கொள்ளுங்க !!

ஆன்மீகம்

இன்று பலரும் தனது அன்றாட வேலைகளில் ஈடுபடுவதற்கு முன்பு அன்றைய தினம் தனக்கு எவ்வாறு இருக்கப் போகின்றது என்ற கேள்வியுடன், அதனை தெரிந்து கொள்ளவும் அதிக அக்கறை காட்டி வருகின்றனர். தற்போது மக்களிடையே கடவுள் பக்தியும், ஜோதிட நம்பிக்கையும் சற்று அதிகரித்துள்ளது. இதனால் தான் தற்போது பலர் எந்த ஒரு செயலை செய்வதற்கு முன்பும் ஜோதிடர்களை சந்தித்து, தங்களது ஜாதகங்களைக் கொடுத்து இது நல்ல காலம் தானே என்பதைப் பார்க்கிறார்கள். மேலும், ஜோதிடர்கள் தங்களுக்கு சாதகமாக என்ன கூறினாலும் அதை செய்யவும் தயாராக உள்ளனர். செப்டம்பர் 2021 மாதத்தில் மிதுனம், கடகம், மீனம் ஆகிய ராசிகள் சில சங்கடமான சவால்களை சந்திக்க நேரிடுமாம். ஆனால் அதே சமயம் உங்களை சுவாரசியமான வாய்ப்புகளை நோக்கித் தள்ளலாம்.

மிதுனம்
செப்டம்பர் மாத முதல் பாதியில் சூரியன் உங்கள் ராசிக்கு 4ம் வீடான சுகம், தாயார் ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்ய உள்ளார். உங்களால் நம்ப முடியாத உணர்வு பூர்வமான மாதமாக இருக்கும். தேவையற்ற உணர்ச்சி வசப்படுவதால் கோபம், மன நிம்மதி குலையலாம். குறிப்பாக இது ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்க்கையுடன் தொடர்புடையதாக இருக்கும். உங்கள் ராசிநாதன் புதன் செப்டம்பர் 27-ம் நாள் வக்ர நிலைக்கு செல்வதால் மன குழப்பத்தை விட்டு கவனமாக செயல்படுவது அவசியம்.

கடகம்
செப்டம்பர் 22-ம் தேதி துலாம் ராசியில் புதன் மாற்றம் நிகழும் போது, பல மோசமான, அதிர்ச்சி தரக்கூடிய சில கடினமான சூழல் ஏற்படலாம். உணர்ச்சிகரமான நிலையாக இருக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக ராசிக்கு 4ம் வீட்டில் சூரியன் சஞ்சாரம் செய்வதாலும், செப் 27ல் புதன் வக்ர நிலை அடைவதால் சில குழப்பமான மன நிலை ஏற்படும். இருப்பினும் இந்த சில விஷயங்கள் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதாக இருக்கும்.

மீனம்
மீன ராசிக்கு கிரகங்களின் நிலை காரணமாக, உங்கள் உறவுகளில் கவனம் செலுத்துவது அவசியம். நெருங்கிய உறவுகளிலிருந்து சில சிக்கல்களைச் சந்திக்க வேண்டி இருக்கும். அதே சமயம் சில ஏமாற்றங்கள் நிகழும். சூரியனின் பெயர்ச்சி அதாவது புரட்டாசி மாதம் தொடங்கியதும், உங்களின் பல பிரச்சினைகளிலிருந்து மீள வாய்ப்பு ஏற்படும். இருப்பினும் உங்களின் பேச்சு, செயலில் கவனமாக இருப்பதோடு, மன நிம்மதிக்கு எது தேவையோ அதற்கான முயற்சிகளில் ஈடுபடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *