பணப் பற்றாக்குறைநீங்கி அதிஷ்டம் வீட்டுக் கதவைத் தட்டவேண்டுமா? வாஸ்து ஆமையை இந்த திசையில் வைக்க வேண்டுமாம் !!

ஆன்மீகம்

தற்போது மக்களிடையே கடவுள் பக்தியும், ஜோதிட நம்பிக்கையும் சற்று அதிகரித்துள்ளது. இதனால் தான் தற்போது பலர் எந்த ஒரு செயலை செய்வதற்கு முன்பும் ஜோதிடர்களை சந்தித்து, தங்களது ஜாதகங்களைக் கொடுத்து நல்ல காலமா என்பதைப் பார்க்கிறார்கள். மேலும், ஜோதிடர்கள் தங்களுக்கு சாதகமாக என்ன கூறினாலும் அதை செய்யவும் தயாராக உள்ளனர். இது சிலருக்கு பொருந்தும், சிலருக்கு பொருந்தாமலும் இருக்கும். எந்த விடயங்களையும் முழு நம்பிக்கையுடன் செய்தால் வெற்றி நிச்சயம். பணப் பற்றாக்குறைநீங்கி அதிஷ்டம் வீட்டுக் கதவைத் தட்டவேண்டுமா? வாஸ்து ஆமையை எந்த திசையில் வைக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.

வாஸ்து சாஸ்திரம் என்பது இந்தியாவில் உருவாகிய ஒரு பண்டைய கால முறையாகும். இது நமது வீட்டின் கட்டமைப்பு பற்றி பல தகவல்களைக் கூறும் மிகச் சிறந்த முறையாகும். நமது வீட்டின் ஒவ்வொரு மூலைகளும் திசைகளும் இயற்கையில் பஞ்ச பூதங்களுடன் தொடர்புடையதாக உள்ளது என்றும் அதன் படி வீட்டை அமைத்தால் நம் வீட்டிற்குள் சக்தி குடி கொள்ளும் என்றும் வாஸ்து முறைகள் கூறுகின்றன.

வாஸ்துவின் பயன்கள்
இந்த ஆற்றல் தான் நம் மனதை ஆட்டிப் படைக்கும் சக்தி. இது தான் நமது வேலை மற்றும் வாழ்க்கையை நிர்ணயிக்கிறது. இந்த ஆற்றலின் விளைவுகள் அப்படியே நம் வாழ்விலும் பிரதிபலிக்கும். சில சமயங்களில் இதை கருத்தில் கொள்ளாமல் நம் சொந்த விருப்பங்கள் படி வீட்டை அமைத்து கொள்வோம்.

பிரச்சினைகள்
இதனால் என்ன நடக்கும், நம் வாழ்விலும் நிறைய தர்ம சங்கடங்களை அனுபவிக்க நேரிடும். குடும்பத்தில் வாக்கு வாதங்கள், பணத் தட்டுப்பாடு, பண விரயம், ஆடம்பர வாழ்க்கை, மோசமான உடல் நிலை போன்ற பிரச்சினைகளைகள் ஏற்பட நேரிடும். ஆனால் ,நமது ஒவ்வொரு பிரச்சினைகளுக்கும் ஒரு தீர்வு என்பது கண்டிப்பாக இருக்கும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

தீர்வுகள்
வாஸ்து சாஸ்திரப்படி சில பொருட்களை நீங்கள் வீட்டில் வாங்கி வைக்கும் போது கெட்ட சக்திகள் உங்களை விட்டு அகலுவதோடு பிரச்சினைகளும் உங்களை விட்டு பறந்தோடும். அப்படி பார்க்கையில் காற்றில் ஒலியோடு அசைந்தாடும் அழகான தொங்கும் பொருட்கள், புனித ஆமை உருவம் போன்றவை உங்கள் வீட்டில் உள்ள கெட்ட ஆற்றலை வெளியேற்றும். இவை அதற்குப் பதிலாக நேர்மறை ஆற்றலை வீட்டில் நிலவச் செய்து குடும்பத்தில் அமைதியையும் வளத்தையும் அள்ளிக் கொடுக்கும்.

புனித ஆமையின் முக்கியத்துவம்
இந்த புனித ஆமையானது வீட்டில் நேர்மறை சக்திகளை பரவச் செய்யும் என்கின்றார். இந்த புனித ஆமை கடவுள் விஷ்ணுவுடன் தொடர்புடையது என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. பாற்கடலை கடையும் போது மந்திர மலையை தங்குவதற்கு விஷ்ணு ஆமை அவதாரம் எடுத்தார் என்று புராணங்கள் கூறுகிறது. எனவே இந்த புனித ஆமை கடவுள் ஸ்ரீ கிருஷ்ணனின் மறு உருவம் எனலாம்.

அமைக்கும் முறை
இதை வீட்டின் நுழைவாயில் கதவில் பொருத்தலாம். ஏனெனில் இந்த வழியாகத்தான் உங்கள் வீட்டினுள் எதிர்மறை எண்ணங்கள் குடி கொள்ளும். இதனால் தான் வீட்டில் பிரச்சினைகள் கொடி கட்டி பறக்கும். எனவே இந்த மாதிரியான வாக்கு வாதங்களை தவிர்க்க இதை அங்கே வையுங்கள்.
இதை கிழக்கில் வைத்திருப்பது குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

நன்மைகள்
வடகிழக்கு திசையை நோக்கி வைத்தால் வீட்டில் பணப் பற்றாக்குறையே இருக்காது. வீ்ட்டில் உள்ள உறுப்பினர்கள் அடிக்கடி நோய் வாய்ப்பட்டால் மண்ணால் செய்யப்பட்ட ஆமையை வாங்கி வையுங்கள். மண் எப்படி நீரில் கரைந்து போகுமோ அதுபோல் நோயும் கரைந்து போகும் என்பது நம்பிக்கை. சில நேரம் நீங்கள் என்னதான் கடினமாக உழைத்தாலும் வேலையில் வெற்றி காண முடியாது. நல்ல வேலை கிடைக்காது, தேர்வில் வெற்றி பெற முடியாமல் கஷ்டப்படுவீர்கள்.

இந்த மாதிரியான பிரச்சினையை சமாளிக்க பித்தளையால் செய்யப்பட்ட ஆமையை வீட்டில் வாங்கி வையுங்கள். வேலையில் வெற்றி நிச்சயம். நீங்கள் புதிதாக ஒரு நிகழ்ச்சி நடத்தினாலோ அல்லது புதிதாக வியாபாரம் தொடங்கினாலோ அதில் நஷ்டம் இடைஞ்சல்கள் அடையாமல் வெற்றி அடையவும் லாபத்தை ஈட்டவும் வெள்ளியால் செய்யப்பட்ட ஆமையை வாங்கி வைத்து தொடங்குங்கள் எடுத்த காரியம் நிறைவேறும். நினைச்ச படி வெற்றி மாலை சூடுவீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *