உங்கள் குடும்பம் கஷ்டத்தில் இருந்து மீளாமல் இருப்பதற்கு பெண்கள் தான் காரணம் !! சாஸ்திரம் கூறும் உண்மைகள் !!

ஆன்மீகம்

சாஸ்திரம் கூறுவது அந்த அம்மனின் மறு உருவம் தான் பெண்கள் என்று சொல்கிறது. ஏனெனில் பெண்களுக்கு அவரவர் குடும்பத்தை பொறுப்போடு பார்த்துக் கொள்ளும் கடமை இருக்கின்றது. ஏனெனில் கடவுளுக்கு இணையாக சொல்லப்படுகிறார்கள் இந்த பெண்கள். கடவுளுக்கு இந்த உலகத்தை பொறுப்போடு பார்த்துக்கொள்ளும் கடமை உள்ளது போல பெண்களுக்கும் இந்த கடமை இருப்பதால் இவாறு கூறப்படுகிறது.எந்த குடும்பப் பெண்ணும் நெறி தவறவே கூடாது என்ரூ கூறுவார்கள் பொதுவாக கூறும் பழமொழி தான் பெண்கள் நம் வீட்டினுடைய கண்கள். இவ்வாறு சும்மா எடுத்தமானத்துக்கு , சொல்லிட்டுப் போயிடலாம்! ஆனால் இன்று விதண்டாவாதம் பேசுபவர்கள் அதிகம் உண்டு அதாவது பெண்கள் இல்லை என்றால், குடும்பம் இல்லையா? பெண்கள் இல்லை என்றால் வாழ முடியாதா? என்ற விதண்டா வாதத்திற்காக பேசுபவர்கள் நிறைய பேர் உள்ளார்கள்.

 

 

இன்னும் சிறப்பாக கூறுவதாயின் திருமணமானவர்கள் பெண்கள் திருமணம் ஆன பின்பு, தாய் ஸ்தானத்தை அடைந்தவர்களாகிறார்கள். இவ்வாறு கூறப்படும் பெண்கள் கட்டாயம் செய்ய வேண்டிய காரியாக்கள் என்னென்ன. பெண்கள் அறியாமல் செய்யக்கூடிய சில தவறுகள் என்னென்னகாணப்படுகின்றன என்பதை காணலாம்.லட்சுமி கடாட்சம் என்பதினால் – அதாவது கோவிலுக்கு செல்லும் போதும், இறை வழிபாடு செய்யும் போது புடவை அணிந்து கொள்வது மிக முக்கியமான ஒன்றாகும். அத்துடன் நெற்றியில் குங்குமப் பொட்டு இட்டுக்கொள்வது மிகவும் நல்லது என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. இன்றைய காலங்களில் உற்று நோக்குகின்ற போது பிற மார்க்கங்களில் இதை அவர்கள் கடை பிடிப்பது இல்லை, ஆயினும் கட்டாயம் பெண்கள் இந்த காரியங்களை செய்ய வேண்டும்.

 

 

முந்தானை – இறைவழிபாடு செய்யம் போது புடவை அணிய முடியாத சூழ்நிலை என்றாலும் பரவாயில்லை. நீங்கள் துப்பட்டா போட்ட உடையை அணிந்து இருந்தாலும் சரி அல்லது புடவை அணிந்து இருந்தாலும் சரி, பின்பக்கம் தொங்கும் அந்த முந்தானையை, அந்த துப்பட்டாவை எடுத்து முன்பக்கம் கையில் வைத்துக்கொண்டு தான் இறைவழிபாடு செய்தல் வேண்டும்.சாஸ்திரம் – சாஸ்திரம் கூறுவது என்னவென்றால் பெண்கள் புடவை அணிந்து கொள்ளும் பெண்களுடைய முந்தானை காற்றில் ஆடினால், அந்த குடும்பமும் நடு நடுங்கும், குடும்பமே ஆட்டம் கண்டு விடும், குடும்பம் துன்பத்தில் கஷ்டப்படும் என்று சொல்கிறது

 

 

கைகள் இருக்க வேண்டிய முறை – கோவிலுக்கு சென்று இறைவனிடமிருந்து பிரசாத தீர்த்தம் வாங்கும் சமயத்தில், பெண்களுடைய வலதுகை முதலில் மேலே இருக்கவேண்டும். இடையில் அவர்களுடைய புடவை முந்தானையை அல்லது துப்பட்டாவின் முனையும் இருக்கவேண்டும். அதற்கு அடியில் தான் இடது கை இருக்க வேண்டும். இந்த பணிவும், இந்த அடக்கமும் அந்தப் பெண்ணினுடைய வாழ்க்கை சுமுகமாக நடத்தி செல்ல உதவுகிறது.இதற்காக பெண்கள் அடிமையாக இருக்க வேண்டும் என்று யாரும் சொல்லி வைக்கவில்லை. பெண்களுக்கே உரித்தான குணம் அது. பொறுமை காப்பது. பணிந்து போவது. மரியாதை கொடுப்பது இப்படிப்பட்ட விஷயங்கள் எல்லாம் பெண்களுடைய மனதில் ஆழப் பதிய வேண்டும் என்பதற்காகத்தான் சில பழக்கவழக்கங்களை, சம்பிரதாயம் என்று நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளார்கள்.

 

 

நமஸ்காரம் செய்யும் பழக்கம் – இப்படியாக தன்னுடைய புடவை முந்தானைக்கு எப்போதுமே மரியாதை கொடுக்கும் பெண்ணின் வீட்டில் கஷ்டம் வருவதற்கு வாய்ப்பே கிடையாது. இதேபோல் பெண்கள் கோவிலில் நமஸ்காரம் செய்யும் பழக்கம் இருக்கும். அப்போது அந்த முந்தானையை கீழே விடாமல் அதிலிருந்து ஒரு முனையை எடுத்து பிடித்துக்கொண்டு, அந்த முந்தானையோடு கீழே விழுந்து நமஸ்காரம் செய்யும் பழக்கம் இருக்கும்.பின்னங்கால்கள் – நமஸ்காரம் செய்யும்போது நம்முடைய பின்னங்கால்கள் இரண்டும் பிரிந்து இருக்க கூடாது. இது சரியான முறை. நமஸ்காரம் செய்யும்போது நம்முடைய இரண்டு கால் முட்டைகளும் பூமியில் படும், இரண்டு கைகளும் பூமியில் பட்டிருக்கும், கட்டாயம் தலையை கீழே குனியும் போது நம்முடைய நெற்றி பூமாதேவியை தொட்டிருக்க வேண்டும். இந்த இடத்தில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்

 

 

சேர்ந்துதான் இருக்க வேண்டும். எப்போதுமே பின்னங்கால்கள் சேர்ந்திருக்கும் படி தான் நமஸ்காரம் செய்ய வேண்டுமே தவிர,ஒன்றன் மேல் ஒன்று பின்னிய படியும் வைக்கக்கூடாது. என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். பின்னங் கால்களை பிரித்து வைக்கக்கூடாது. இது ஆன்மீக ரீதியாகவும் , ஆரோக்கிய ரீதியாகவும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கு நல்லது என்று சொல்கிறது சாஸ்திரம் கூறுகின்றது . கோவிலுக்கு சென்று தான் பெண்கள் இப்படி நமஸ்காரம் செய்து வழிபாடு செய்ய வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை.

 

 

கோவிலுக்கு செல்லாமல் வீட்டில் காலை அல்லது மாலை நேரத்தில் தீப வழிபாடு செய்யும் போதும், உங்கள் வீட்டு பூஜையறையில் உங்களுடைய குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டு, நமஸ்காரம் செய்யுங்கள். பின்னங்கால்களை சேர்த்து வைத்து மறக்காமல் மூன்றிலிருந்து ஐந்து முறை நமஸ்காரம் செய்யலாம். அப்படி என்றால், நெற்றிப் பொட்டையும் உள்ளங்கையிலும் கீழே வைத்து விட்டு அப்படியே முட்டிபோட்டு எந்திரித்து, இறைவனை வணங்குங்கள்.

 

 

மீண்டும் ஒருமுறை மறுபடி உள்ளங்கைகளையும் நெற்றிப் பொட்டையும் பூமாதேவியின் வைத்து மீண்டும் எந்திரித்து! இறைவனை பார்ப்பது, இப்படியாக ஐந்து முறை நமஸ்காரம் செய்வது குடும்பம் சுபிட்சமாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டால் நன்மையே நடக்கும் என்று கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *