78 வயது தாத்தாவை திருமணம் செய்த 17 வயது பெண் !! 22 நாட்களில் மணமகன் செய்த அதிர வைக்கும் பின்னணி !!

விந்தை உலகம்

22 நாட்களில் திருமண வாழ்க்கை கசந்த ச-ம்பவம். இந்தோனேசிய ஊடகங்களில் அதிகமாக பேசப்பட்ட ஒரு விடயம் என்றால் அது 78 வயது முதியவரை 17 வயது இளம் பெண் திருமண செய்த நிகழ்வு ஆகும். அதாவது இந்தோனேஷியாவில் 78 வயது நபரை திருமணம் செய்த 17 வயது பெண்ணின் மண வாழ்க்கை 22 நாட்கள் கூட நீடிக்கவில்லை என்பது குடும்பத்தினரிடையே க-டும் சோ-கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேஷியாவில் கடந்த மாதம் அபா சர்ணா என்ற 78 வயது முதியவர் நோனி நவிதா என்ற 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்து 22 நாட்களே ஆன நிலையில், அபா சர்ணா, நோனி நவிதாவை வி-வ-காரத்து செய்ய கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த புதுமணத் தம்பதியினர் அவர்களின் வயது வித்தியாசம் காரணமாக மக்களின் கவனத்தை ஈர்த்திருந்தனர். ஆனால் சில நாட்களுக்குள்ளாகவே அபா விவாகரத்து கடிதத்தை நோனிக்கு அனுப்பிய விவகாரம், அவர்களது குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

 

இந்த இரு தம்பதிகளுக்கும் இடையில் எந்த விதமான பிரச்சனைகளோ முரண்பாடுகளோ இல்லை. இருந்த போதிலும் ஏன் அவர் இவ்வாறு விவாகரத்து செய்தார் என்று நோனி நவிதாவின் அதாவது பெண்ணின் குடும்பத்தாருக்கு தெரியவில்லை. இது பற்றி நோனி நவிதாவின் சகோதரி ஐயன் கூறும் போது, இவர்கள் இருவருக்கும் நடுவில் எந்த விதமான பெரிய சண்டை மற்றும் சச்சரவுகள் போன்ற எந்த ஒரு வாக்குவாதங்களோ அசம்பாவித சம்பவங்களோ எதுவும் நடக்கவில்லை. எனினும் இவ்வாறு திடீரென்று வி-வ-காரத்து செய்ய கோரி மனு தாக்கல் செய்துள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளேன்.

 

 

அத்துடன் அவருடைய சகோதரி கூறுகையில் அபா சர்ணா மற்றும் நோனி நவிதா ஆகிய இருவருக்கும் வயது வித்தியாசம் இருந்த போதிலும் எங்களுடைய குடும்பத்திற்கும் அபா சர்னாவுக்கும் இடையில் எந்த விதமான பிரச்சினையும் இடம் பெறவில்லை என தெரிவித்தார். இருந்த போதிலும் , இவ்வாறான ஒரு பிரச்சினையானது அபா சர்னா மற்றும் அவரது குடும்பத்தினரிடமிருந்து தான் வந்துள்ளது. அபா சர்ணாவின் குடும்பத்தினர் தான் திருமணத்தை எதிர்த்ததாக தோன்றுகிறது என்று அவர் கூறினார்.

 

 

திருமணத்திற்கு முன்னர் நோனி கர்ப்பமாக இருந்ததால் அந்த தம்பதியினர் பிரிந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆயினும் , இந்த குற்றச்சாட்டிற்கு நோனியின் சகோதரி ஐயன் மறுப்பு தெரிவித்துள்ளார்.இருவருக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து அந்த வரதட்சணை பொருட்களான ஒரு மோட்டார் சைக்கிள், மெத்தை, கிளோசெட், அதுமட்டுமின்றி பணமும் கொடுத்துள்ளார். இவை அனைத்தும் ஒரு டிரக் மூலம் திருப்பி கொண்டு செல்லப்பட்டுள்ளது என்கிறார்.

 

 

தற்போது சமூக ஊடகங்களில் அதன் புகைப்படங்கள் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *