வெற்றிலையில் தீபம் ஏற்றி வந்தால் என்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா !!

ஆன்மீகம்

அனைத்து செடிகளும் மொட்டாகி பூவாகி காயாகி பழமாகும் மீண்டும் அதிலிருந்து விதை கிடைக்கும். ஆனால் வெற்றிலை மட்டும் ஒரே ஒரு உருவம் எடுத்தாலும் அது கடவுளையே சேரும். வெற்றிலை மற்றும் பாக்கு சேர்ந்த ஒரு காம்பினேஷன் மகாவிஷ்ணு மற்றும் பார்வதி தேவியின் மறு உருவம் எனவும் கூறுவர். வெற்றிலையில் பல நன்மைகள் உள்ளது என்பதை அனைவரும் அறிந்திருப்போம். வெற்றிலையின் நுனியில் லட்சுமியும் நடுவில் சரஸ்வதியும் காம்பில் பார்வதிதேவியும் இருப்பதாக வரலாறு சொல்கிறது.

 

 

இப்படிப்பட்ட, ஒரு தனி சிறப்பு மிகுந்த வெற்றிலையை தீபம் ஏற்றி வழிபட வெற்றிகள் வந்து சேரும். அந்த அளவிற்கு வெற்றிலையானது புராணம் காலங்களை எல்லாம் தாண்டி தற்போதும் பயன்படுத்தப்பட்டு கொண்டிருக்கின்ற ஒரு புனிதப் பொருள் ஆகும். வெற்றியில் தீபம் ஏற்றுவது என்பது ஒரு வழிபாட்டு முறையாகும். இதன்படி 12 வெற்றிலைகளை எடுத்துக் கொண்டு முதல் ஆறு வெற்றிலைகள் ஐயும் மயில் தோகை போல் வட்டமாக அடுக்கி வைக்க வேண்டும்.

 

 

அடுக்கி வைக்கப்பட்ட வெற்றிலைக்கு நடுவில் தீபமேற்றி வழிபட வேண்டும். பிறகு அதில் இரண்டாவது ஆறு வெற்றிலையில் காம்புகளை கிழித்து காம்புகளை எல்லாம் விளக்கிலிருக்கும் நல்லெண்ணெயில் போட்டு விட வேண்டும். விளக்கு எரியும் பொழுது ஒரு நல்ல நறுமணம் வீசும். இவ்வாறான வெற்றிலை வழிபாடு நல்ல பலன்களைத் தரும்.

 

 

மேலும், இந்த நறுமணத்தை நன்றாக உள்ளிழுத்து தீபத்தை நோக்கியவாறு ஐந்து நிமிடங்கள் உங்கள் மனதில் நினைத்திருக்கும் கோரிக்கையை வைத்து தியானம் செய்தாலே போதும். உங்களுக்கு இருக்கும் எப்படிப்பட்ட பிரச்சனையாக இருந்தாலும், விரைவில் தீர்ந்து மகிழ்ச்சி பொங்கும். நினைத்தது ஈடேறும். காரணம் வெற்றிலையில் வீற்றிருக்கும் முப்பெரும்தேவிகளின் அருட்பார்வை கிட்டும். நம் நிலை மாறும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *