அதிசார குருப்பெயர்ச்சியில் எந்த ராசிக்கு ராஜ அதிர்ஷ்டம் காத்திருக்கு தெரியுமா !!

ஆன்மீகம்

மீன ராசிக்காரர்களுக்கு குருபகவான் உங்கள் ராசிக்கு 11-ம் இடத்தில் இருந்து கொண்டு 3, 5, 7 ஆகிய இடங்களில் அவருடைய பார்வை விழுகிறது. ஆகவே மீன ராசியை பொறுத்தவரை இந்த குரு பெயர்ச்சியானது நல்ல யோகமான பலன்களை தர போகிறது.செல்வ வளம் மற்றும் ஆரோக்கியத்தில் குறைவில்லாமல் நிறைந்த முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத வகையில் உங்களுக்கு பணவரவு கிடைக்கக்கூடும். எடுத்த முயற்சிகளில் அமோக வெற்றி பெறுவீர்கள்.

 

 

தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு நினைத்ததை விட சிறப்பான லாபம் கிடைக்கும். உங்களுடைய விடாமுயற்சிக்கு விஸ்வரூப வெற்றியாக இனி வரும் காலங்களில் பல நல்ல விஷயங்களை பெற போகிறீர்கள்.உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் வருமானம் கணிசமாக உயரும். எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும். புதிய பொறுப்புகள் கிடைத்து அதனை சிறப்பாக செய்து காட்டுவதன் மூலமாக உங்களுடைய அதிகாரம் உயரக்கூடிய வாய்ப்புகளும் உண்டு.

 

 

குடும்ப உறவுகளைப் பொறுத்தவரை மீன ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியான பல தருணங்கள் கிடைக்கப்பெறும். தடைப்பட்ட திருமணங்கள் மற்றும் சுபகாரியங்கள் கைகூடி வரும் யோகமுண்டு. வீட்டில் இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் தீர்ந்து பரஸ்பர ஒற்றுமை இருக்கும். புதிய நபர்களின் வருகையால் இல்லத்தில் குதூகலம் காணப்படும். பிள்ளை வரம் வேண்டுவோருக்கு நல்ல செய்தி கிடைக்கும். விரயங்கள் பல சுப விரயங்களாகவே உங்களுக்கு வந்து சேரும்.

 

 

ஆரோக்கியத்தில் வருமுன் காப்பதே சிறந்தது. குரு பெயர்ச்சி, உங்களுக்கு சாதகமான காலகட்டம் என்பதால் சிறு சிறு உடல் உபாதைகள் ஏற்பட்டாலும் பெரிதாகபாதிப்புகள் இல்லாமல் விரைவாகவே குணம் அடைந்து விடுவீர்கள்

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *