இன்று உச்சத்திற்கு செல்லும் ராசியினர் யார் !! எதிர்பாராத ஆ-பத்தை சந்திக்கும் ராசியினர் யார் !!

ஆன்மீகம்

ஒவ்வொரு நாளும் கிரகங்களின் நிலை மாறும். இப்படி தினமும் மாறும் கிரகங்களின் சஞ்சாரங்களால் ஒவ்வொரு ராசிக்காரரின் பலனும் அன்றாடம் மாறுபடும்.தினசரி ராசிப்பலன்கள் மூலம் நீங்கள் எந்த மாதிரியான ச வா ல்களை எதிர்கொள்வீர்கள் என்பதை தெரிந்து கொள்ள முடியும்.உங்கள் வாழ்க்கை ஏற்பட போகும் அனைத்து வகையான கேள்விகளுக்குமான விடை இங்கு கிடைக்கும்.அந்த வகையில்,இன்று நீங்கள் சந்திக்கவிருக்கும் வாய்ப்புகள் மற்றும் சவா ல்கள் என்னவென்று உங்களுக்குத் தெரியாவிட்டால் உடனே ராசிப்பலனைப் பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.

 

 

மேஷம்: உழைப்பால் உயரும் நாளாக இன்று உங்களுக்கு காணப்படும். உங்களின் வியாபாரத்தில் போட்டிகள் மத்தியிலும் வெற்றி கிடைக்கும். நீங்கள் செய்யும் வேலை தளத்தில் உங்களுக்கு மரியாதையம் மதிப்பும் உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்த வேலைகள் சில தள்ளிப் தள்ளி போனாலும் சற்றும் நீங்கள் எதிர்பாராத ஒரு வேலை கிடைக்கும். உங்களின் தாயாரின் உடல் நலத்தில் அக்கறை செலுத்துங்கள் இன்று உங்களுக்கு காணப்படும் பணப்பற்றாக்குறையை நீங்கள் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்.

 

 


ரிஷபம்

இன்று வியாபாரத்தில் உங்களுக்கு லாபம் கிடைக்கும். உங்கள் சகோதர சகோதரிகள் உங்களுடைய நலனில் அதிகமாக அக்கறை செலுத்துவார்கள். உனக்களின் வார்த்தை, பேசும் காரியங்களில் முதிர்ச்சி தெரியும். நீங்கள் சவால்கள் மற்றும் விவாதங்கள் போன்றவற்றில் வெற்றி பெறுவீர்கள். இன்று விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். வேலைத்தளத்தில் உயரதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளுவார்கள்.

 

 

மிதுனம்

இன்று உங்களின் வியாபாரத்தில் புதிய பல முடிவுகளை எடுப்பதால் கடந்த நாட்களாக இருந்த அலைச்சல் மற்றும் டென்ஷன் கோ -பம் யாவும் நீங்கும். உங்களின் குடும்பத்தில் சந்தோஷம் காணப்படும் . நீண்ட நாட்களாக தள்ளிப் போனவைகள் நடக்கும். உங்களின் வேலைத்தளத்தில் நீங்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

 

 


கடகம்

உங்களின் ராசியில் சந்திரன் காணப்படுவதால் முக்கியமான தீர்மானங்களை நேரடியாக நீங்களே எடுப்பது மிகவும் நல்லது. உங்களின் வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாககிடைக்கும்.உங்களின் வேலைத்தளத்தில் வேலைச்சுமை அதிகரிப்பதால் எதிர் பாராத பல சூழல்களை சமாளிக்க வேண்டிய நாளாக அமையும்.

 

 


சிம்மம்

உங்களுடைய வியாபாரத்தில் உங்களுடன் வேலை செய்யும் பணியாட்களை அனுசரித்துப் போவது நல்லது. அத்துடன் உங்கள் வேலைத்தளத்தில் சக ஊழியர்களுடன் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். பழைய பிரச்சினைகளுக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. இன்று உங்களுக்கு அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாளாக இருக்கும் . எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்கு உள்ளாவீர்கள். இன்று உங்களுக்கு ப-த-ட்டமான நாளாகவே இருக்கும்.

 

 


கன்னி

உங்களுடைய வியாபாரத்தை பொறுத்த வரை வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நாளாக இன்று காணப்படும். உத்தியோகத்தில் எல்லோரும் உங்களை மதிப்பார்கள். இன்று நீங்கள் எல்லாவற்றிலும் வெற்றி பெறுவீர்கள். உங்களுக்கு பெற்றோரின் ஆதரவு அதிகம் கிடைக்கும் நாளாக இன்று காணப்படும். உங்களுடைய . பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். சேமிக்க வேண்டுமென்ற தீர்மானங்களை எடுப்பீர்கள். எந்த இடங்களுக்கு சென்றாலும் உங்களுக்கு மதிப்பும் மரியாதையம் கிடைக்கும்.

 

 


துலாம்

இன்று உங்களின் வியாபாரம் செழிக்கும் நாளைக்கு அமையும். அத்துடன் உங்களின் உத்தியோகத்தில் உங்களுடைய திறமைகள் வெளிப்படுவதாள் பாராட்டுகளை பெறுவீர்கள். பிரிந்த உறவுகள் இன்று சேரும் மற்றும் உங்களின் உறவினர் நண்பர்களுடன் நீங்கள் மனம் விட்டு பேசுவீர்கள். எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை வருதால் சிலர் உங்களை நம்பி பல முக்கிய பொறுப்புகளை தருவார்கள். உங்களுடைய மனைவி வழியில் மகிழ்ச்சி தரும் காரியங்கள் நடைபெறும்.

 

 


விருச்சிகம்

உங்களின் வியாபாரத்தை பொறுத்தவரையில் இன்று உங்கள் வியாபாரத்தில் இரட்டிப்பு லாபத்தை பெறுவீர்கள். அத்துடன் உங்களுடைய வேலைத்தளத்தில் பல பணிகளை விரைவாக முடிப்பீர்கள். கடந்த சில நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்புக்கள் மாற்றும் ச-ண்-டைகள் நீங்கி கணவன் மனைவிக்கு இடையில் நல்ல அந்நியோன்னியம் மலரும். மாறுபட்ட அணுகுமுறையால் நீண்ட நாள் தடைபட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள்.

 

 

தனுசு
உங்கள் வியாபாரத்தில் இன்று பல போராட்ட்ங்கள் காணப்படும். எதையும் போராட வேண்டிய நாளாக இன்று காணப்படும். உங்களுடைய வேலைத்தளத்தில் உயர் அதிகாரிகளை ப-கை-த்து கொள்ள வேண்டாம். கூடிய வரையில் அவர்களை அனுசரித்து போவது நல்லது. உங்களுக்கு இன்று சந்திராஷ்டமம் காணப்படுவதால் எந்த ஒரு காரியத்தையும் திட்டமிட்டு செய்யப்பாருங்கள் வெற்றி கிடைக்கும். நீங்கள் யாரையும் யாருக்கும் சிபாரிசு செய்ய வேண்டாம். இன்றைய நாளானது உங்களுக்கு இடம் பொருள் ஏவல் பார்த்து அவதானமாக இருக்க வேண்டிய நாளாகும்.

 

 


மகரம்

வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உங்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். கல்யாண பேச்சுவார்த்தை வெற்றியடையும்.

 

 


கும்பம்

வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள். பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர் நண்பர்களின் வருகையால் வீடு களைக்கட்டும்.

 

 


மீனம்

அநாவசிய செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். புதுமைபடைக்கும் நாள். புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். நட்பு வட்டம் அதிகரிக்கும் நாளாக இன்று காணப்படும். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *