குரு பெயர்ச்சியால் பல்வேறு நல்ல பலன்கள், யோகங்களைப் பெறக் கூடிய ராசியாக சிம்ம ராசி உள்ளது. இதுவரை வீட்டில் மதிப்பு இல்லாமல், வேலை சரிவர வராமல் இருந்திருக்கலாம். ஆனால் இந்த குரு பெயர்ச்சியில் நல்ல பொற்காலமாக அமையப் போகின்றது. சிம்ம ராசியில் உள்ள பெற்றோர்கள், பிள்ளைகள் உங்களின் பேச்சை கேட்டு நடப்பார்கள். பஞ்சமத்திற்கு குரு பகவான் வரும் இந்த காலகட்டத்தில் உங்கள் ராசியை குரு பார்க்கப்போகின்றார். இதனால் உங்கள் வியாபாரத்தில் இதுவரை இருந்த எந்த பிரச்சினைகளும் தீரும். இதுவரை 5ல் சனியும், கேதுவும் இருந்தனர். இதனால் வம்பு, வழக்குகள் இருந்திருக்கும்.மேலும், கேதுவோடு குரு செல்லும் போது அதன் சூட்சமத்தை புரிந்து கொள்ள வேண்டும்.

இதனால் சில குழந்தைகள் போதை வஸ்துக்களை உபயோகப்படுத்தும் நிலைக்கு செல்வார்கள். அவர்களை கவனமாக கண்காணிப்பது அவசியம்.உங்கள் குழந்தைகளை கோயிலுக்கு சென்று வழிபட்டு வரச் சொல்லுங்கள்.வீட்டிலும், அலுவலகத்திலும் நரசிம்மர், சர்பேஸ்வரர் புகைப்படத்தை வைத்து வணங்கி வருவது நல்லது.இதனால், உங்களின் மதிப்பும், மரியாதையும் உயரும். பதவி, ஊதிய உயர்வு ஏற்படும் அருமையான காலம்.
பெண்களுக்கு, வெகு நாட்களாக குழந்தை இல்லை என ஏங்கி வந்த தம்பதிக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும் அருமையான காலம் இது.உடல் பிரச்சினைகள் நீங்கும். மன மகிழ்ச்சி உண்டாகும். உங்களின் எதிர்பார்ப்பெல்லாம் நிறைவேற்றக் கூடிய இடத்தில் குரு பகவான் இருக்கின்றார். இதனால் உங்கள் நற்சிந்தனைகள், எண்ணங்கள் நிறைவேறும்.