திறமைக்கு வயது இல்லை என்று கூறுவர்கள். இன்றைய உலகில் பலரும் தங்களது திறமைகளை வெளிக்காட்டி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக சிறுவர்கள் குழந்தைகள் என தங்களது திறமையை வெளிப்படுத்துகின்றனர். நாம் நினைப்பதை விடவும் அதிகமாக தங்களால் முடியும் என்பதனை அவர்களை நிரூபித்த்டு காட்டு கின்றனர். அந்த வகையில் பிரபல பிரட்டன் ரியாலிட்டி தொலைக்காட்சி தொடரான Britain’s Got Talent நிகழ்ச்சில் மும்பையை சேர்ந்த சிறுவன் பங்கேற்று நடுவர்களை உள்பட அனைவரையும் கவர்ந்துள்ள வீடியோ காட்சி தற்போழுது இணையத்தில் வெளியாகியுள்ளது! அதாவது மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பையை சேந்தவர் தான் அக்ஷத் சிங்(13 வயது). இவர் பிரட்டனில் நடைபெறும் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான Britain’s Got Talent நிகழ்ச்சியில் சமீபத்தில் பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்ச்சி கடந்த ஏப்ரல் 21-ஆம் நாள் திரையிடப்பட்டது.
அக்ஷத் சிங் இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற போது தன்னுடைய குறிக்கோள் இரண்டு காரியங்களை வெளிப்படுத்தினர். அதாவது தன்னால் முடிந்தளவு அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பது என்றும் அத்துடன் தன்னால் முடியாதது எதுவும் இல்லை என்பதை அனைவரையும் நம்ப வைப்பது எனவும் தெரிவித்தார். இவ்வாறு தன்னுடைய குறிக்கோளை மேடையில் வெளிப்படுத்திய போது இவரது வார்த்தைகளை கேட்ட நடுவர்கள் அத்தருணமே அக்ஷத்தை பாராட்டினர். இதன் பின்னர் அக்ஷத் சிங் தனது அபார நடன திறமையை வெளிப்படுத்திய இந்திய சிறுவன் அக்ஷத்தினை நடுவர்கள் பாராட்டி வாழ்த்தினர்.
இந்நிகழ்ச்சியின் நடுவர்கள் சிம்மன் கோவல், டேவிட் வில்லியம், அலெக்ஷா டிக்சன் மற்றும் அமென்டா ஹோல்டன் ஆகியோர் அனைவரும் அக்ஷத்தை பாராட்டிய தருணம் தற்போது விடியோவாக இணையத்தில் வலம் வந்து இந்தியா முழுவதும் அக்ஷத்திற்கு பெருமை சேர்த்து வருகிறது.சல்மான் கானின் தீவிர ரசிகனான அக்ஷத் இந்தி பாடல்கள் துவங்கி ஆங்கில பாடல்கள் என பம்பரமாய் நடனமாடி ரசிகர்களை கவர்ந்தார். இறுதியாக ‘பருமனான நபர்களாலும் நடனம் ஆட முடியும்’ என்ற வாக்கியுத்துடன் தனது நடத்தை முடித்தார். இவரது நடனத்தை பார்த்த நடுவர்கள் எழுந்து நின்று பாராட்டினர்.
இதோ அந்த வீடியோ காட்சி …