நமது பண்டைய மருத்துவத்தின்படி உணவுக்கு சில மணி நேரத்துக்கு முன்னும் பின்னும் தண்ணீர் குடிப்பதைத் தான் பரிந்துரைக்கின்றனர். நீங்கள் உணவு எடுத்துக் கொண்டே உடனே தண்ணீர் குடிப்பது வேறு சில உடல் உபாதைகளை உண்டாக்க கூடும். அதிலும் சில உணவுப் பொருட்கள் தண்ணீருடன் சேரும் போது சில பாதிப்புகளை உண்டாக்குகிறது. கீழ்க்கண்ட உணவுகளை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்காதீர்கள் என்கிறார்கள் மருத்துவர்கள். தர்பூசணி பழங்களை சாப்பிட்ட பிறகு நீங்கள் தண்ணீர் குடிப்பது வயிற்று அமிலத்தை நீர்த்துப் போக செய்து அசெளகரியத்தை உண்டாக்கும். ஆயுர்வேத மருத்துவர்கள் வாழைப்பழத்தை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கவே கூடாது என்கிறார்கள். வாழைப்பழத்தை சாப்பிட்ட பிறகு சாதாரண நீரோ அல்லது குளிர்ந்த நீரோ எடுத்துக் கொண்டால் தீவிர சீரண பிரச்சினையை நீங்கள் சந்திக்க நேரிடும்.

இது அஜீரணத்தை உண்டாக்கும். எனவே இனி வாழைப்பழம் சாப்பிட்ட பிறகு 15 – 20 நிமிடங்கள் கழித்து தண்ணீர் குடியுங்கள். வேர்க்கடலையில் அதிகளவு எண்ணெய் சத்து உள்ளது. எனவே நீங்கள் வேர்க்கடலை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பது உங்கள் குடலில் இ ர த் த குழாய்களில் கொழுப்புகள் படிய வாய்ப்புள்ளதாம். மேலும் இருமல், தொண்டையில் எரிச்சல் உண்டாகுமாம்.

ஆரஞ்சு, லெமன் போன்ற சிட்ரஸ் பழங்களில் சிட்ரிக் அமிலம் உள்ளது. எனவே இவற்றை உண்ட பிறகும் தண்ணீர் குடிப்பது வயிற்றின் pH அளவை பாதித்து சீரணமின்மை பிரச்சனையை ஏற்படுத்தும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

விளைவுகள்
- வயிற்றில் இருக்கும் ஹைட்ரோ குளோரிக் அமிலம் நீர்த்துப் போகும் சீரணமின்மை, வாயு, ஈஸ்ட் பெருக்கம் உண்டாதல் வயிற்றில் இருக்கும் pH அளவு 1.5 முதல் 3. 5 வரை இருக்கும். தண்ணீர் குடித்த பிறகு இது மாறுகிறது.
- எனவே இனி பழங்களை எடுத்துக் கொண்டே உடனே தண்ணீர் குடிக்காமல் இருங்கள்.

- நிறைய வயிற்று உபாதைகளை தடுக்கலாம்.
- ஆரோக்கியமான உணவாக எடுத்துக் கொண்டாலும் அவற்றுடன் நாம் செய்கின்ற இதுபோன்ற சின்ன சின்ன தவறுகள் நம்மை பெரிய பாதிப்பில் கொண்டு போய் நிறுத்திவிடும் என்பதை மட்டும் மறக்காதீர்கள்.