இணையத்தை அ ல ற வைத்த பொண்ணு வீட்டு சீதனம் !! வாயை பிளக்க வைத்த ச ம் பவம் !!

விந்தை உலகம்

தொண்டு காலம் தொட்டு திருமண வைபத்தின் போது பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டாருக்கு சீதனம் வழங்குவது வழக்கம்.  சீதனம் என்பது, தமிழர்களுடைய வாழ்க்கையில் புரையோடிப் போன கலாச்சாரமரபு தான். இன்று, பல்வேறு வடிவங்களில் சீதனம் வரதட்சணை வாங்கப்படுகிறது. பணமாக பாத்திரமாக  நகையாக  நிலமாக வாங்குவது மட்டும் தான் வரதட்சணை என்று மக்கள் விளங்கி வைத்துள்ளார்கள். அது எவ்வாறு எமது கலாசாரத்துக்குள் உள்ளெடுக்கப்பட்டதென்றால், ஒரு பெண்ணைப் பெற்ற பெற்றோர்கள் அவளுக்குத் திருமணம் செய்து கொடுத்து கணவன் வீட்டுக்கு அனுப்பும் போது தங்களுடைய ஆசையாயும் பாசமாயும் வளர்த்த தமது பெண்ணுக்கு அன்பளிப்பு வழங்கும் நோக்குடன் சிலவற்றை பரிசளித்தார்கள்.

 

 

அன்பை பரிசளித்தார்கள், சில பொருள்களைப் பரிசளித்தார்கள். அதில் தாய் வீட்டுச் சீதனமாக அம்மி, குழவி, கட்டில், சமையல் பொருட்கள் , பாத்திரங்கள் எனத் தமது மகள் பிறிதொரு வீட்டில்( மணமகன்) வாழப் போகிறாளே என எண்ணி அவளுக்கான பொருள்களை அனுப்பி வைத்தார்கள், பின்னர் காலப்போக்கில் நகைகளைப் பரிசளித்தார்கள் , நிலங்களைப் பரிசளித்தார்கள், பணத்தைப் பரிசளித்தார்கள்.

 

 

இவையெல்லாவற்றையும் பெண்ணைப் பெற்ற பெற்றோர்கள் தங்கள் இயல்பு வரம்புக்குள் எட்டும்படியே செய்து வந்தார்கள், அவை மணமகன் கேட்டுக் கொண்டதன் பேரிலேயோ, நிபந்தனை விதித்தோ வழங்கப்பட்டதல்ல. அவரவர் தங்களது தகுதிக்கேற்ப சீர்வரிசையை வழங்குவார்கள், அதில் கார் முதல் பைக் வரை, வெள்ளி முதல் வீட்டுக்கு தேவையான பாத்திரங்கள் வரை இடம்பெற்றிருக்கும். முக்கியமாக, சீர்வரிசையை தங்கள் கௌரவமாக பார்ப்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

 

 

சில ஊர்களில் திருமண மண்டபத்தில் சீர்வரிசையை அலங்கார பொருள் போன்று அடுக்கி வைத்திருப்பார்கள். அப்படித்தான் மதுரையில் நடந்த திருமணத்தில் சீர்வரிசை அடுக்கி வைக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த படத்தை பார்த்த அனைவரும் ஒரு நிமிஷம் நிச்சயம் ஆடிப்போயிருப்பார்கள், சுமார் 10 வீட்டுக்கு தேவையான பாத்திரங்களை சீர்வரிசையாக கொடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *