108 நாட்கள் இவருடைய காதில், இப்படி சொல்லுங்கள்! எம்பெருமானின் காதுகளுக்கு வேண்டுதலை கொண்டு போய் சேர்க்க  தீராத துன்பங்களும் தீரும் !!

ஆன்மீகம்

ஒவ்வொருவருடைய பிரச்சனைக்கும் தீர்வு சொல்லும் சக்தி அந்த ஆண்டவன் இடத்தில் மட்டும் தான் உள்ளது.  வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு சிலபேருக்கு வேதனைகள் இருக்கும்.  இவ்வாறானவர்கள்  உங்களுடைய கஷ்டங்களை தொடர்ந்து இவருடைய காதுல போய் இப்படி சொல்லுங்கள். நிச்சயம் உங்களுடைய வேண்டுதல் எம்பெருமானின் காதுகளுக்கு போய் சேர்ந்துவிடும். அதாவது இன்றைய காலங்களில்  சிலர்  தங்களுடைய கஷ்டங்களை மனதில் போட்டு திணித்துக் கொண்டு தங்களுடைய வாழ்க்கையை சிரமப்பட்டு வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.  இவ்வாறானவர்கள் இனி நம்முடைய வாழ்க்கையே இவ்வளவுதானா, இதோடு முடிந்து விட்டதா? என்ற அளவிற்கு பெரிய அளவில் கஷ்டங்களும் துயரங்களும் இருந்தால் கூட, அதற்கான தீர்வு   108  நாட்களில் கிடைத்து விடும்.

 

 

நாம் நம்முடைய கஷ்டங்களை சொல்லப்போவது யாரிடத்தில் ? எம்பெருமானின் காதுகளுக்கு வேண்டுதலை கொண்டுபோய் சேர்க்க வேண்டுமென்றால்  நந்தியம்பெருமான் கிட்ட தான்.நம்முடைய கஷ்டங்களை சொல்ல வேண்டும்   ஆ  னால் ஓரிரு நாட்களில் உங்களுடைய துயரமானது சரியாகி முடிவுக்கு வரவேண்டும் வேண்டும் என்று பேராசைப் படக் கூடாது. – 108 நாட்கள் தொடர்ந்து இந்த வழிபாட்டினை செய்ய வேண்டும்.

 

 

ஓவொரு நாளும்  சிவபெருமானின் சன்னதி இருக்கும் ஆலயத்திற்கு  சென்று  நந்தி பகவானுக்கு இரண்டு நல்லெண்ணெய் தீபங்களை ஏற்ற வேண்டும். அதன் பின்பு நந்தி பகவானையும் ஈசனையும் சேர்த்து மூன்று பிரதக்ஷணம் வரவேண்டும். உங்களுக்கு நேரமில்லை என்றால் ஒரு பிரதட்சணம் மட்டுமே போதுமானது. அடுத்தபடியாக நந்தி பகவானுக்கு வலது பக்கம் வந்து நின்று, நந்தி பகவானின் வலது காதில் உங்களுடைய கோரிக்கைகளை சொல்ல வேண்டும். கோரிக்கை ஒரே ஒரு கோரிக்கையாக இருக்க வேண்டும்.

 

 

நந்தி பகவானுக்கு அருகில் சென்று மனதார உங்களது கோரிக்கைகளை உச்சரித்தாலே அவரது காதில் கேட்டு விடும். நந்தி பகவானை தொட்டு தான் இந்த கோரிக்கையை சொல்ல வேண்டும் என்ற எந்த அவசியம் கிடையாது.  எக்காரணத்தைக் கொண்டும் நந்தியை நாம் தொடக்கூடாது. உங்களால் முடிந்த உதவிகளை, முடிந்த பணிகளை, சிவன் கோவில்களுக்கு செய்து வாருங்கள்.

 

 

பூக்களைக் கொண்டோ அல்லது வில்வ இலைகளை வைத்தோ, சிவபெருமானுக்கும் நந்திக்கும் அர்ச்சனை செய்து உங்களது வழிபாட்டை முடித்துக் கொள்ளுங்கள்.இப்படியாக 108 நாட்கள் தொடர்ந்து உங்களது கஷ்டங்களை, உங்களது வேதனைகளை நந்தி பகவானிடம் சொல்லிவிட்டு பிரச்சனைகளை அவரது பாதங்களில் போட்டுவிட்டு, உங்களது விடா முயற்சியை விடாமல் பிடித்துக்கொண்டு, வாழ்க்கையில் பயணம் செய்துகொண்டே இருங்கள். உங்கள் கஷ்டத்திற்க்கான தீர்வு 108வது நாளில் நிச்சயம் உங்கள் கைகளை வந்து சேரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *