அப்படி என்ன ஸ்பெஷல்? கின்னஸ் சாதனையில் இடம் பெறப்போகும் திருமணம்!

விந்தை உலகம்

நாள் பார்த்து, நட்சத்திரம் பார்த்து, பொருத்தம் பார்த்தால் போதும், திருமணம் செய்து கொள்ளலாம் என்று நினைத்துவிடாதீர்கள். திருமணம் செய்வதற்கு சட்டரீதியிலான தகுதிகள் வேண்டும். ஆண் 21வயது நிரம்பியவராகவும், பெண் 18வயது நிரம்பியவராகவும் இருக்க வேண்டும். திருமணம் செய்து கொள்ளும் ஆண், பெண் இருவரும் மனநிலை சரியுள்ளவர்களாக இருக்க வேண்டும். மணமக்கள் இருவரும் திருமணத்தின் போது வேறு திருமண பந்தத்தில் இருக்ககூடாது என்பதெல்லாம் அனைவருக்கும் தெரிந்த பொது விதிகள்.

 

 

திருமணம் ஒரு சமூக, சட்ட, உறவுமுறை அமைப்பு ஆகும். குடும்பம், பாலுறவு, இனப்பெருக்கம், பொருளாதாரம் போன்ற பல காரணங்களுக்காக திருமணம் செய்யப்படுகிறது. இரு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட மனிதர்களுக்கு இடையே திருமணம் நடைபெறுகிறது. மணம் என்பது ஓர் ஆணும், ஒரு பெண்ணும் இணைந்து இல்லறம் மேற்கொள்ள நடத்தபெறும் ஒரு வாழ்க்கை ஒப்பந்தம். மனிதனால் மனித சமுதாயத்தின் நலன் கருதிப் படைத்துக் கொள்ளப்பட்டதோர் ஒழுக்க முறை.

 

 

திருமணம் என்பது மனித இனத்தைப் பொறுத்தவரை ஒரு உலகளாவிய பொதுமையாக இருந்த போதிலும், வெவ்வேறு பண்பாட்டுக் குழுக்களிடையே திருமணம் தொடர்பில் வெவ்வேறு விதமான விதிகளும், நெறிமுறைகளும் காணப்படுகின்றன.

 

 

திருமணம் சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண், பெண் உறவு நிலையைக் குறிக்கிறது. அதோடு திருமணம் என்பது ஒரு புதிய சந்ததி தோன்றுவதற்குரிய ஒருவிதப் பிணைப்பு ஆகும். ஓர் ஆணும் பெண்ணும் சேர்ந்து ஒருவருக்கொருவர் கட்டுப்பட்டு, அவர்களது வாழ்க்கையைக் கூட்டுப்பொறுப்பில் நடத்துவதற்குப் பலர் அறியச் செய்துகொள்ளும் செயலே மணம் எனப்படும்.

 

 

குஜராத்தில் பிப்ரவரி 5-ம் தேதி 2500 பெண்களுக்கு நடைபெறவுள்ள திருமண விழாவிற்காக, அந்த 2500 பெண்கள் ஒரே நேரத்தில் தங்களின் கைகளுக்கு (ஹென்னா )பச்சை குத்தும் நிகழ்ச்சியானது சூரத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

 

 

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்கள் அனைவரும் தங்கள் கைகளுக்கு ஒரே நேரத்தில் ஹென்னா பச்சையினை குத்தி மகிழ்ந்தனர்.

 

 

குஜராத்தில் முதல் முறையாக வெகு விமர்சையாக நடைபெறவுள்ள இந்த திருமணமானது உலக சாதனையில் இடம் பெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இதோ அந்த காட்சி ……

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *