குழந்தை பிள்ளைகள் எது செய்தாலும் அழகாகத்தான் இருக்கும். அவர்கள் செய்யுமுன் குறும்புகள் மட்டும் இன்றி குழப்படிகள் கூட மிக அழகாக்க இருக்கும். குழந்தைகள் இருக்கும் வீட்டில் சேட்டைகள் இல்லாமல் இருக்காது . ஏதாவது செய்து தொல்லை கொடுத்து கொண்டுதான் இருப்பார்கள். அவர்கள் செய்யும் சேட்டைக்கு சரிசமமாக மற்றவர்களை சிரிக்கவும் வைப்பார்கள்.
வீட்டில் எது மேலையாவது ஏறி கீழே விழுவது, மேலும் அழுது அடம் பிடித்து வாங்கும் பொருட்களை கூட ஒரே நாளில் உடைத்து உள்ளே என்ன இருக்குன்னு ஆராய்ச்சி மேற்கொள்வது என குழந்தைகளின் சேட்டைகளை லிஸ்ட் போட்டுக் கொண்டே போகலாம்.
என்னதான் அவர்களை கட்டுப்படுத்துவதில் சற்று சிரமம் இருந்தாலும், அவர்களைப் போல் மற்றவர்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள முடியாது. அந்த அளவிற்கு அவர்களின் சுட்டித்தனம் எல்லாமே மிக அழகு தான்.
இன்றைய பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைப் பற்றி பல கனவுகள் காண்கிறார்கள். `என் பிள்ளை டாக்டராக வேண்டும்; இன்ஜினீயராக வேண்டும்’ என்று நினைக்கிறார்களே தவிர, அவனை நல்ல மனிதனாக வளர்த்தெடுக்க வேண்டும் என்று நினைப்பதில்லை.
எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கும்போது. ஆனால், வளர்ப்பு முறைதான் அவர்கள் நல்லவர்களா, கெட்டவர்களா என்பதை தீர்மானிக்கிறது.
உங்கள் குழந்தைகளின் சேட்டைகளை வைத்து அவர்களை கண்டிக்காது அதனை ரசித்து அவர்களுடனே பயணம் செய்யுங்கள்…கண்டிப்பாக அவர்களின் வாழ்க்கை நல்லதாய் அமையும். இதோ அந்த வீடியோ காட்சி