கொழுப்பை மிக வேகமாக கரைக்கும் கிவி! தினசரி டயட்டில் சேர்த்தால் எடையை வேகமாக குறைக்கலாம்?

மருத்துவம்

தினசரி டயட்டில் கிவியை சேர்த்துக் கொள்வதால் நீங்கள் எதிர்பார்த்ததை விடவும் வேகமாகவு எடையைக் குறைக்க முடியும்.அதைப் பற்றி விரிவாக இந்த கட்டுரையில் பார்க்கலாம். மிகக் குறைந்த கலோரியில் அதிக அளவு நார்ச்சத்து இருக்கும் ஒரு பழம் என்றால் அது கிவி தான். நம்முடைய அன்றாட உணவில் 30 கிராம் வரையில் நார்ச்சத்து தேவைப்படும். அதனால் நிச்சயம் உங்களுடைய தினசரி உணவில் பாதி அல்லது ஒரு முழுமையான கிவி பழத்தை எடுத்துக் கொள்வது நல்லது. உடல்பருமன் என்பது உலகம் முழுவதும் இருக்கிற மிக முக்கியப் பிரச்சினையாக இருக்கிறது. இதற்கு முக்கியக் காரணம் ரத்தத்தில் உள்ள கொழுப்புத் திசுக்கள் அதிக அளவில் இருப்பது தான். இந்த அதிக உடல் எடைக்குக் காரணமாக இருக்கிற ரத்தத்தில் உள்ள குறைந்த டிரை கிளிசரைடு அளவை சரியாக வைத்திருக்க கிவி உதவும்.

மருத்துவ குணங்கள் நிறைந்த கிவி பழம்

உடலில் கொழுப்பு அதிகமாகப் படிந்திருப்பதும் கூட இன்சுலின் சுரப்பை தடுக்கிறது. அளவுக்கு அதிகமான உடல் எடையால் இதயக் கோளாறுகள் வருவதற்கும் வாய்ப்புகள் மிக அதிகமாகவே இருக்கின்றன. வைட்டமின் சி, நார்ச்சத்து, கால்சியம் ஆகிய மூன்றும் வுகமாக உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைக்கும் ஆற்றல் கொண்டது.

கிவி பழத்தில் பொதிந்து கிடக்கும் எண்ணிலடங்கா மருத்துவ பயன்கள்...

புரோட்டியுாலைட்டிக் என்னும் என்சைம் கிவி பழத்தில் அதிகமாகவே இருக்கிறது. பொதுவாக புரோட்டீன் உணவுகள் உணவு செரித்தலுக்கு அதிக துணைபுரியும். அதிக புரதம் உள்ள கிவி எடுத்துக் கொள்வதால் செரிமானக் கோளாறுகள் நீங்கி, கொஞ்சமாக சாப்பிட்டதும் திருப்தி ஏற்படுகிறது. இதனாலேயே கொழுப்பு படிவது கட்டுப்படுத்தப்படுகிறது.

தினமும் 2 கிவி பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்! - Lankasri News
எப்படி சாப்பிடணும்? கிவியை வேகவைத்து அந்த நீரைக் குடித்தால் தொப்பை குறையும். அல்லது வேகவைத்து சாப்பிடுவது நல்லது என்றும் பரிந்துரைக்கிறார்கள். அது முற்றிலும் தவறு. அப்படி ஒரு போதும் செய்யக் கூடாது. அப்படியே மற்ற பழங்களைச் சாப்பிடுவது போல பச்சையாக கட் செய்து சாப்பிடலாம்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் கிவி பழம் || Immunity increases kiwi fruit
  • சாப்பிடுவதற்கு முன் நன்கு கழுவிக் கொள்ளுங்கள். சிலர் தோலுடனே சேர்த்து சாப்பிடுவார்கள். அதுவும் தவறு. தோலில் பூச்சிக்கொல்லிகள், ரசாயனங்கள் ஏதேனும் இருக்க வாய்ப்பு உண்டு. மற்ற பழங்களுடன் சேர்த்து சாலட்டாகவும் கிவியைச் சாப்பிடலாம். தேவைப்பட்டால் சாலட்டில் சில துளிகள் எலுமிச்சை சாறும் மிளகுத் தூளும் சேர்த்துக் கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *