நீரிழிவு நோயாளிகள் சில பழங்களை உட்கொள்வதால் இ ர த் த சர்க்கரை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால் இந்த பாதிப்பு இல்லாமல் உட்கொள்ளக் கூடிய சில பழங்கள் உள்ளன. அவை என்னென்ன என்று இங்கே பார்க்கலாம். ஆப்பிள் – சிறிய அளவு முதல் மிதமான அளவு வரை உள்ள ஆப்பிளில் க்ளைகோமிக் குறியீடு மிகவும் குறைவாக உள்ளது. அதனால் இதனை உட்கொள்வதில் இ ர த் த சர்க்கரை அளவில் எந்த ஒரு எதிர்மறை தாக்கமும் ஏற்படுவதில்லை. இது மட்டுமில்லாமல் ஆப்பிள் ஒரு உயர் நார்ச்சத்து அளவு கொண்ட உணவுப்பொருள் என்பதால் செரிமான மண்டல ஆரோக்கியம் மற்றும் கல்லீரல் ஆரோக்கியம் ஆகியவை ஒரு நல்ல வடிவத்திற்கு வருவதோடு மட்டுமில்லாமல் இ ர த் த சர்க்கரை அளவை நிர்வகிக்கவும் உதவுகிறது.

ஆப்பிள் பழம் வைட்டமின் ஏ மற்றும் சி போன்ற சத்துகள் அதிகம் கொண்டது, மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்தது. இதனால் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற ஒரு பழமாக ஆப்பிள் விளங்குகிறது.

ஆரஞ்சு – ஆரஞ்சு பழத்தில் நீரிழிவு எதிர்ப்பு தன்மை உள்ளது. கார்போ சத்து அதிகரிக்காமல் வைட்டமின் மற்றும் மினரல் சத்தை உடலில் அதிகம் சேர்த்துக் கொள்ள ஒரு சிறந்த வழி ஆரஞ்சு பழத்தை உட்கொள்வது மட்டுமே. மேலும் ஆரஞ்சு பழத்தில் ஆன்டிஆக்சிடெண்ட் அதிகம் உள்ளது மற்றும் வைட்டமின் சி சத்து மிக அதிகம் உள்ளது. இவை இரண்டின் ஒருங்கிணைப்பு ஆரோக்கியமான நோ யெ தி ர் ப் பு மண்டலத்தை பெற உதவுகிறது.

பேரிக்காய் – சிறிய அல்லது மிதமான அளவு பேரிக்காயில் க்ளைகோமிக் குறியீடு குறைவாக இருப்பதால் இதனை உட்கொள்வதால் இ ர த் த சர்க்கரை அளவில் அதிகரிப்பு ஏற்படுவதில்லை. மேலும் பேரிக்காய் ஊட்டச்சத்து மற்றும் வைட்டமின் சத்து போன்றவற்றின் ஆதாரமாக விளங்குவதால் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. பேரிக்காயில் உள்ள அழற்சி எதிர்ப்பு தன்மை காரணமாக செரிமான மண்டலம் சிறப்பாக இயங்குகிறது.

ஸ்ட்ராபெர்ரி – ஆன்டிஆக்சிடென்ட்களின் ‘பவர் ஹவுஸ்’ என்று அறியப்படுவது ஸ்ட்ராபெர்ரி . மேலும் இந்த பழத்தில் கார்போ சத்து குறைவாக உள்ளது. எனவே நீரிழிவு பாதிப்புள்ளவர்களுக்கு மிகவும் ஏற்ற ஒரு பழமாக ஸ்ட்ராபெர்ரி விளங்குகிறது. உணவுக்கு பின் ஒரு ஸ்ட்ராபெர்ரி பழம் உட்கொள்வதால் இன்சுலின் அளவை சிறப்பாக நிர்வகிக்க முடிகிறது என்று ஒரு ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.