இந்தியாவில் மிகவும் பிரபலமான பானங்களில் தேயிலை ஒன்றாகும். இந்தியாவில் ஒரு நபர் ஒவ்வொரு நாளும் 4 முதல் 5 கப் தேநீர் உட்கொள்கிறார்.
இன்றைய காலகட்டத்தில் தண்ணீர் பருகுவதைத் தொடர்ந்து அதிக அளவில் மக்கள் பருகுவது டீ என்பது குறிப்பிடத்தக்கது. டீ குடிப்பது மக்கள் பலரின் அன்றாட பழக்கமாகவும், பொழுதுபோக்காகவும் உள்ளது. அலுவலகத்தில் பணிபுரியும் நபர்கள் டீ குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். ஒரு குறிப்பிட்ட நேரம் வந்தால், அந்த நேரத்தில் அவர்களுக்கு டீ குடித்தால் தான் பணி செய்ய முடியும் என்ற மனநிலைக்கு கூட செல்கின்றனர்.
தேநீர் குடிப்பவர்கள் தேநீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள் குறித்து தொடர்ந்து விவாதிக்கிறார்கள்.தேநீர் மிதமாக உட்கொண்டால் உங்கள் ஆரோக்கியத்திற்கும் நல்லது. இவ்வாறு அதிக அளவில் டீ குடிப்பதால், அதில் இருந்து வெளியாகும் அதிக அளவிலான நச்சுக்களால் கவன சிதறல், அமைதியில்லாமல் போவது, உறக்கம் கெடுதல், நிலையில்லாத ஒரு தன்மை உருவாகி மனம் அலை பாய்ந்துக்கொண்டே இருக்கும்.
டீ அதிக அளவில் குடித்தால் அதிலுள்ள டானிஸ் வேதிப்பொருள், உடலில் இரும்புச்சத்து சேராமல் தடுக்கும் தன்மை கொண்டது பேப்பர் கப்பில் டீ அருந்துபவர்கள் 75 ஆயிரம் நுண்ணிய மைக்ரோ பிளாஸ்டிக் துகள்களை சேர்த்து அருந்துவதாக, கரக்பூர் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் நடத்திய ஆய்வில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
பேப்பர் கப்களின் மேற்பரப்பில், பாலித்தீன் மற்றும் கோ பாலிமர்களால் ஆன hydro propane பூசப்படுகிறது.சூடான தேநீர் அல்லது தண்ணீரை பேப்பர் கப்களில் ஊற்றும்போது மைக்ரோ பிளாஸ்டிக் உருகி, நம் உடலின் செல்லக்கூடும்.நூறு மில்லி சூடான திரவத்தில் 25 ஆயிரம் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் உள்ளன.
ஒருவர் பேப்பர் கப்களில் நாளொன்றுக்கு மூன்று முறை தேநீர் அருந்தினாலே போது, அவர் 75 ஆயிரம் பிளாஸ்டிக் துகள்களை உட்கொள்ள நேரிடும் என்பதும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே பேப்பர் கப்கள் சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்லாது உடல் நலத்திற்கும் கேடு விளைவிப்பவை என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.